Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இலவச ஆடியோ/வீடியோ Converter

இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன் படுத்திப் பார்த்து, சென்ற வாரம் தரப் பட்ட இரண்டு புரோகிராம்கள் மிக வும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்க வும் மிக எளிதாகவும் உள்ளன. வேக மாகவும் செயல் படுகின்றன.

ஆடியோ பைல்கள் பல பார்மட் களில் இணையத்தில் கிடைக்கின் றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தை யும் இயக்குவதில்லை. எனவே தான் அவற்றின்மீது கிளிக் செய்த வுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணைய த்தில் தேடவா என்று கேட் கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவை யாய் உள்ளன.

இந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிரா மினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.freemake. com/free_audio_converter/ மேலே குறிப் பிட்ட அனைத்து பார்மட் களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.

இதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோ வினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப் பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோத னையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

பார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வே ண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ- போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார் மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.

இதே நிறுவனம் வீடியோ பார்ம ட்களை மாற்றித் தரும் வீடியோ கன் வர்டர் புரோகிராமினையும் (Free make Video Converter.) கொண்டு ள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்ச ங்களையும் கொண் டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம் http://www.freemake. com/free_video_converter/ என்ற முகவ ரியில் உள்ள தளத்தில் கிடை க்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது. டிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது. இந்த புரோகி ராமினைப் பயன்படுத்தி, வீடி யோ, போட்டோ ஸ்லைட் ‌ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தள த்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோ க்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல் களை இணை க்கலாம்.

இந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்து வதாக, இதனைத் தயாரித்து வழ ங்கும் நிறுவனம் அறிவித் துள் ளது.

இந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண் டோஸ் 7 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கு கின்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: