குருவே, நான் நிறைய ஏமாந்து விடுகிறேன்” என்று சொன்ன வனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
ஏன்! என்ன பிரச்னை?
என்னைச் சுற்றியிருப்பவர் கள் என்னை ஏமாற்றி விடுகி றார்கள். நான் நம்புபவர்கள் காலை வாரிவிட்டு விடுகி றார்கள்” என்று சொன்னவ னின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“”ஒரு காட்டுப் பகுதியில் தினமும் ஆடுகள் வந்து அங்கிரு க்கும் புல்வெளியில் மேயும். அந்தக் காட்டில் நிறைய ஓநாய் களும் உண்டு அவற்றுக்கு அந்த ஆடு களை அடித்துச் சாப்பிட வேண்டும் என்று ஆசை.
ஆனால் அதில் ஒரு பிரச்னை இரு ந்தது அந்த ஓநாய்களுக் பயந்து ஆடு களுக்கு பாதுகாவலாக சில வேட் டை நாய்களை மேய்ச்சல்காரன் வைத்திருந்தான். அவை அந்த ஆடு களை ஒரு எல்லைக்குள்ளேயே வை த்திருந்தன. அந்த எல்லைத்தாண்டி வந்தால்தான் ஓநாய்களால் அவற் றை அடித்துக் கொல்ல முடியும்.
இதற்கு என்ன செய்வது என்று ஓநா ய்கள் யோசித்தன. ஒரு திட்டம் போட்டன. மறுநாள் ஆடுகள் மேய்ச்சலுக்கு வந்த போது. ஒரே ஒரு ஓநாய் மட்டும் அந்த பக் கம் வந்து ஆடுகளிடம் பேச்சுக் கொடுத்து.
“”ஏன் அங்கேயே மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கேயும் நிறைய புல்வெளிகள் இருக்கின்றன என்று ஆடுகளிடம் சொ ல்ல ஆடுகளுக்கு ஆசை.
ஓநாய் அருகில் வந்ததைப் பார்த்த நாய்கள், ஆடும்களை மேய்ச்சல் நிலம் பக்கம் திருப்பிவிட்டன. ஆடுகளுக்கு இதில் வருத்தம்.
ஓநாய் நட்பாய் அழைக்கிறது. இந்த நாய்கள் நம்மை விட மறுக்கிறதே என் று எண்ணின.
மறுநாளும் அந்த ஓநாய் வந்து ஆடுகளுடன் பேசியது.நாம் நட்பாய் இருப்பது அந்த நாய்களுக்குப்பிடிக்கவில்லை நீங்கள் இந்தப் பக்கம் வந்தால் நி றைய உணவு இருக்கிறது. நாய்களுக்கு தெரியாமல் வந்து சாப்பிடுங்கள் என்று அழைத்தது
ஓநாயின் வார்த்தைகளை ஆடுகளும் நம்பின. ஒவ்வொ ன்றாய் நாய்களுக்கு தெரி யாமல் காட்டுக்குள் நுழைந் தன. ஓநாய்களுக்கு விருந் தாகின” இந்தக் கதையை குரு சொல்லி முடிக்கும் போது நம் பக்கூடாதவர்களை நம்புவதுதான் தன் பிரச்னை என்பது வந்த வனுக்கு புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன பொன் மொழி Win மொழி :
தீயவர்களை அடையாளம் காணுவதில்தான் வெற்றி இருக்கி றது.
-ரஞ்சன், நன்றி: குமுதம்
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்