Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருநள்ளாறு சனி பகவான்

னிதனுக்கு ஒரு குணம் உண்டு. அடங்கிப் போவதை யெல் லாம் அதட்டுவது; அடங்காதவைக்குப்பணிந்து விடுவது என் பது தான் அது. நவகிரகங்களை அவனால் அடக்க முடியாமல் போனதால், அவற்றுக்குப் பணிந்து பக்தனாகி விட்டான். கிரக ங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித மாய் ஆதிக்கம் செலுத் துவதை ஆராய்ந்து சோதிடம் என்ற ஒரு சாஸ்திரத்தையே இயற்றினான். மனிதனைப் பாதிக்கும் நவகிரகங் களில் சனியும் ஒன்று.

சகல துக்கங்களைப் போக்கி அருள் பவர்; உத்தமோத்தமர்; வில், அம்பு, கத்தி, வரதம் ஏந்தியவர். கோரைப் பல், கருமையான தேகம் கொண்ட வர். நீல ஆடை, நீலமணி, நீலோற் பலம் ஆகியவற்றை அணி யாகக் கொண்டு விளங்குபவர் என்று தியான சுலோகம் வர்ணிக்கிறது. சில் ப ரத்னம், தத்துவ நீதி போ ன்ற நூல் களும் சனி பகவானை வர்ணிக்கின்றன.

சூரியன் மனைவியான சம்ஞா கணவனின் உக்கிரத்தைப் பொ றுக்க மாட்டாமல், நிழலான சாயா என்ப வளைப் படைத்து, அவளை தன் கண வனிடம் விட்டுத் தான் தந்தை வீடு செ ன்று விட்டாள். இந்த சாயாதேவியிடம் சூரியனுக்கு சனி பகவான் பிறந்தார். சம்ஞாவின் புத்திரனான யமன் சனியை உதைக்க, அவன் கால் ஊனமாகியது. மெது வாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் “சனைச்சரன்’ (மெது வாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயர் ஏற் பட்டது.

சனி பகவானைப் பற்றி தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே நூல்கள் விளம்பு கின்றன. பெருமழை பெய்து வெள்ளம் வ ர கோள்கள் எப்படி அமைந்தன என்ப தைப் பரிபாடல் விளம்புகிறது. புறநானூறு மழை பெய்யாதி ருக்க கோள்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. சிலப் பதிகாரத்திலும் கோள்கள் பற்றி வருகிறது. இது சங்க காலக் கதை. பின் னால் எட்டாம் நூற்றாண்டில் வந்த நாயன்மார்களும் கிரக ங்களின் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளனர். “மகர ராசி யில் புகுந்த சனி, மனைவியும் பரிகசிக்கும் நிலையை ஏற் படுத்துவான்’ என்கிறார் சுந்த ரர். ஞான சம்பந்தரோ கோள் களின் பிடியிலிருந்து தப்பி க்கும் மார்க்கத்தை விளக்குகிறார். இப்படி சனி பகவான் ஒரு வர்தான் மற்ற கிரகங்களைக் காட்டிலும் அதிகமாக நம்மை ஆட்டி வைக்கிறார்.

சனி ஒரு ராசியிலிருந்து மற் றொரு ராசிக்குச் செல்ல இரண் டரை ஆண்டுகள் ஆகின்றன. ஜென்ம ராசிக்கு முதல் ராசி, சுய ராசி, பின் ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சஞ்சரிப்பதை ஏழ ரை நாட்டுச் சனி என்பார்கள். எட்டாவது ராசியை அஷ்ட மத் துச் சனி என்பார்கள்.

நளமகராசன் சனியை வழிபட்டுக் கலி நீங்கிய கதை யாவர்க் கும் தெரியும். அந்தத் தலம் நளேச்சுரம், நள்ளாறு என வழங்கப் படுகிறது. சாதாரணமாக நடு இரவை நள் ளிரவு என்றும்; நடு ப்பகலை நண்பகல் என்றும் கூறுவதுபோல, ஆறுகளுக்கு நடுவில் இத்தலம் இருப்பதால் நள்ளாறு எனப்பட்டது என்றும் கூறுவார்கள். கா ரைக்காலிலிருந்து எட்டு மைல் தொலை விலுள்ள இத்தலம், மயிலாடுதுறை, கும் பகோணம் முதலிய இடங்களிலிருந்து ஊர்திகள் மூலம் எளிதாய் அடையும்படி உள்ளது. அரண் போன் ற உயர் மதில்கள் வளைக்க, ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் நுழைவாயிலாக, நகவி டங்கர் போக மார்த்த பூண் முலை யாளுடன் எழுந்தருளியு ள்ளார். சனி பகவானுக்கு இங்கு தனிச் சந்நிதி இருக்கிறது.

சனி பகவான் திருஷ்டிக்குத் தப் பியவர்கள் கிடையாது என்பத ற்குப் பல கதைகள் உண்டு.

ஒருசமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என் பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு, “”நான் தேவர்களுக் கெ ல்லாம் தலைவன்; என்னை எப்படி நீ பிடிக்கலாம்?” என்று கேட்க, “”என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது” என ப்பதிலளித்தார் சனி பகவான். “”அப்படியானால் நீ என் னைப் பிடிக்கும் நேர த்தைச் சொல்லிவிடு” என்று தேவேந்திரன் வே ண்ட, சனி பகவான் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந் திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினை ப்பு அவனுக்கு! அந்நேரம் கழிந்ததும் இந்திரன் வெளி யே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்ட பெருமை யை அளக்க, சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, “”நீங் கள் சிம் மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இரு ந்ததே என் பீடிப்பினால்தான்!” என்றார்.

இராவணன் தன் பராக்கிரமத்தால் நவ கிரகங்களைப் பிடித்துத் தன் சிம்மாசனத்துப் படிக ளாகப் போட்டுவிட்டான். அவர்கள் முதுகில் கால் வைத்து அரியணை ஏறு வது அவன் வழக்கம். அதை ஒரு நாள் நாரதர் கண்டு, “”சனி பகவானே! எல்லா ரை யும் நீர் பிடிப்பீர். இப் பொழுது இராவணன் உம் மைப் பிடித்து விட்டானே?” என்று பரிகசித்ததும் சனீஸ் வரன், “”என்ன செய்வது? என்னைக் குப்புறப் போட்டு விட்டான். அதனால் அவனைப் பார்த்துப் பிடிக்க முடியவில்லை” என்றார். அவ்வளவுதான். நாரதர் நேரா க இராவணனிடம் சென்று, “இரா வணா! உன்னு டைய கீர்த்திக்கு சனியைக் குப்புறப் போட்டு முதுகிலா மிதிப் பது? மார்பின் மீதல்லவா அடி வை க்க வேண்டும்?” எனக் கூற, உடனே இராவணன் அப்படி யே மாற்றி விட்டான். அவன் படிகளில் ஏறும் பொழு து சனி திருஷ்டி ஏற்பட்டு விட் டது. பலன் யாவர்க்கும் தெரியும்!

இராவணனைச் சந்திக்கும் முன்பே ராமாயணத்துடன் சனிக்குத் தொடர்பு உண்டு. தசரதன் என்றால் பத்து ரதங்கள் கொண்டவன் என்று அர்த்தம். ஒரு மன்னன்- அதுவும் யாகம் செய்தவன் வெ றும் பத்து ரதங்களையா வைத்தி ருப்பான்? அதன் அர்த்தமே வேறு. தசரதனுக்கு நண்பன் சனி. அவ ரைப் பார்க்க தசரதன் கிளம்பினார். எப்படிச் செல்வது? நவீன விஞ்ஞா ன விதிகள் அப்பொழுதே தெரிந்தி ருந்தன. இப்பொழுது அயல் கிரக ங்களுக்குச் செல்ல ராக்கெட் விடு கிறார்கள் அல்லவா? அதே போல பத்து ராக்கெட்டுகள் மூலம் தசர தன் சனிகிரகத்தை அடைந் தாரா ம்!

எல்லா சிவாலயங்களிலும் சனி சந்நிதி உண்டுதான். இருந்தும் பிரத்தியேகமாக வழி படப்படு வது திருநள்ளாறில்தான். சனிப் பெயர்ச்சி நாளில் ஆயிரக்க ணக்கில் பக்தர்கள் கூடி, அகலில் நல்லெண்ணெய் வார்த்து தீபமேற்றி வழிபடுவது அங்கு கண் கொள்ளாக் காட்சியாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: