Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை” – ‘புன்னகை இளவரசி’ சினேகா

நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன…. தமிழ் சினிமாவின் புன்னகை இளவர சியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிக ளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என் ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொ ண்டுள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலுக்காக சினேகா அளித்த விசேட பேட்டி (thanks to Vanakkam) ஒன்று இங்கே உங்களுக் காக தரப்படுகிறது.

இந்த பதினோரு ஆண்டு திரையுலக அனுபவங்கள் குறித்து….

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திரையுலகில் இன் றைக்கு இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான். எனக்கு அந்த வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டு களில் நான் எவ்வளவோ படங்கள் நடித்தாலும், என்னைத் திரையில் பார்த்து அல்லது என் நடிப்பைப் பார்த்து யாரும் முகம் சுளித்ததில்லை.

இது எனக்கு பெரிய அந்தஸ் தைக் கொடுத்துள்ளது. நிறை ய பாடங்களை இந்த பதி னோரு ஆண்டுகளில் கற்றுக் கொண் டேன்.

எல்லோருக்கும் தங்கள் ஆத ர்ஸ நடிகை என்று யாராவது இருப்பார்கள். இவர்களைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன் என்று சொல்வார்கள். உங்களுக்கு?

எனக்கு அப்படி யாரும் இல்லை. காரணம் நான் யாரைப் பார்த்தும் உந்தப்பட்டு இந்த துறைக்கு வரவில்லை. ஒரு விபத்து போல த்தான் என் திரைப்பிரவேசம் அமைந் தது.

ஆனால் நான் திரையுலகில் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்ப்பது, இவரைப் போல இருக்க வேண்டும் என நினை ப்பது, ராதிகா மேடத்தை பார்த்து தான். எனக்கு தனிப்பட்ட முறை யிலும் சரி, திரையிலும் சரி அவரை ரோல்மாடல் என்று சொல்லலாம். அவரது துணி ச்சல், பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், சவா ல்களை அவர் சந்திக்கும் பாங்கு… எல்லாமே எனக்குப் பிடிக் கும்.

சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்தீர்கள். துணிச்சலாக சண்டையெல்லாம் போட்டிருந்தீர்கள். நிஜத்தில் உங்கள் துணி ச்சலின் அளவு என்ன?

முன்பெல்லாம் நான் கொஞ்சம் பயந்த சுபாவமாகத்தான் இருந் தேன். ஆனால் இந்த சினி மாவில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னை நி றைய மாற்றிவிட்டன. இன் றை பிரச்சினைகளைப் பார் த்து பயப்படுவதில்லை. வ ருவது வரட்டும் என துணி ந்து நிற்கிறேன். யாருக்காக வும் என்னை மாற்றிக் கொ ள்வதில்லை. என் சுபாவத் தை மாற்றுவதில்லை. இப் போது எனக் கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான்!

ஒரு இடைவெளி விழுந்த மாதிரி இருக்கே… அடுத்தடுத்த படங்கள் என்ன?

actress sneha's childhood photo

பொன்னர் சங்கரில் ஒரு ரோல் பண்ணியிருந்தேன். இப்போது முரட்டுக்காளை, விடியல்னு ரெண்டு படம் வரவேண்டியிரு க்கு.

தெலுங்கில் ராஜன்னா என்ற பட மும், மலையாளத்தில் ஒரு பட த்திலும் நடித்து வருகிறேன். என் னைப் பொருத்தவரை எந்த மொழி என்று பார்க்காமல் தொ டர்ந்து நடித்துக்கொண்டிருப்ப தால் இ டைவெளி ஏதும் தெரி வதில்லை.

நமக்கான பாத்திரம், திறமை க்கேற்ற வேடம் கிடைக்கவில் லையே என வருத்தப்பட்டிரு க்கிறீர்களா?

இதில் வருத்தப்பட என்ன உள்ளது. சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம். இங்கு ஹீரோயின்கள் வேலை மிகவும் குறைவு. ஆரம்பத்தில் நான்கு சீன் கள் இருக்கும். இடை யில் நான்கு பாடலுக்கு கூப்பிடுவார்கள். க்ளை மாக்ஸில் இருந்தால் இரு ப்போம்.

இல்லாவிட்டால் எல்லா ம் முடிந்து கடைசி சீனில் மகிழ்ச்சியாக ஒரு போஸ் … இவ்வளவு தான் ஹீரோயின்கள் வேலை. எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைப்பதுண்டு. எனவே கிடைக்கிற வாய்ப்புகளில் திருப்திப்ப ட்டுக் கொள்ள வேண்டியது தான்.

வழக்கமான கேள்விதான்… ஆனால் கேட்க வேண்டியது அவசியமாக உள் ளது. திருமண திட்டம் என்ன?

சினிமா போதும், போரடித்துவிட்டது என எப்போது எனக்குள் குரல் கேட்கி றதோ அப்போது, வேறு தளத்துக்கு மாறிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த எண் ணமும் இல்லை. இன்னும் பல படங் கள் நடிக்க வேண்டியுள்ளது.

வதந்திகள், கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. அதுவும் என்னை ப் போன்றவர்கள் இருப்பது ஷோ பிஸினஸ். இங்கு கிசுகிசு க்கள் வராமலிருந்தால் தா ன் ஆச்சர்யம். உண்மை தெரியாமல் எழுதுகிறார்க ளே என்று முதலில் வரு த்தமாக இருந்தாலும், இப் போதெல்லாம் அதை சக ஜமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட் டேன்.

இந்த தீபாவளிக்கு உங்கள் படம் எதுவும் வரவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

நிச்சயமாக. எல்லா நடிகைகளுக்குமே தங்கள் படம் பண் டிகையின் போது வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். சரி, அதனால் என்ன… எப்படியும் சின்னத்திரையில் என்னைப் பார் ப்பார்கள் ரசிகர்கள். அடுத்த தீபாவளிக்கு என் படம் ரிலீசாகும் என நம்புகிறேன்.

Nandri: “Vanakkam

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: