மிதமான வெயிலும், இதமான சாரலுமாய் கொடைக்கானலில் ஆப் சீசன் களை கட்டியுள்ள தால் அதனை அனுபவிக் க சுற்றுலா பயணிகள் குவி ந்து வருகின்றனர்.
களை கட்டிய ஆப் சீசன்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற் கை அழகுக்குப் பஞ்சமில் லை. காணும் இடமெங்கு ம் பசுமையும், ரம்மிய மான சூழலும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை சீசன் காலத்தில் கொடைக்கானலுக்கு ஏராளமானோர் சுற்றுலா வருவது வாடிக்கை. செப்டம்பர் மாதம் இரண்டாம் கட்ட சீசன் தொடங் கிவிடும். இந்த ஆண்டு பருவ மழையின் தாமதத்தினால் அக் டோ பர் மாதம் சீசன் களை கட்டி யுள்ளது.
ஹனிமூன் தம்பதிகள்
கொடைக்கானலின் முக்கிய சுற் றுலா மையங்களான கோக்கர் வாக்ஸ், பசுமை பள்ளத்தாக்கு, வெண் பஞ்சு மேகங்கள் தொட்டு விளையாடும் தூண்பாறை, உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. புதிதாக திருமணமான ஹனி மூன் தம்பதிகள் ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலைகளில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் உற்சாகத்துடன் பொழு தை கழிக்கின்றனர். காலை வேளையில் உடலை வருடும் சில்லெ ன்ற காற்றும், வெயிலுடன் பன் னீர் தூவலாய் பெய்யும் மழை யும் தங்கள் பயணத்தை இனிதா க்கியிருப்பதாக தெரிவித்தனர் ஹனி மூன் தம்பதிகள்.
வியாபாரிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் நிலவும் இதமான ஆப் சீசனை அனுபவி க்க புதுமணத்தம்பதிகள் மட்டு மின்றி பள்ளி, கல்லூரி மாணவி களும் குவிந்து வருவதால் அங்கு சுற்றுலா தொழில் விறுவிறுப் படைந்துள்ளது. விற்பனை வருமா னம் அதிகரித்துள்ளதால் சாலை யோர சிறு வியாபாரிகளும் மகி ழ்ச்சியடைந்துள்ளனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்