Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: அதிரசம் (Diwali Special)

தேவையானவை

பச்சரிசி – 3 கப்
வெல்லம் – 3 கப்
பொடித்த ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து தண்ணியில்லாமல் வடிகட்டி நிழலில் ஈரமில்லாமல் உலர்த்தி மாவாக் கவும்.

மாவு நொறநொறன்னு இருக்ககூ டாது.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட் டு அது சிறிது நீர்விட்டு காய்ச்சவும். வெல்லம் கரைந்ததும் மண்ணில் லாமல் வடிகட்டவும்.

வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு வெல்லத்தை விடவும் அது உருட்டும் பத த்திற்க்கு வந்தால் அதுதான் சரியான பதம்.  சரியான பதம் வந்ததும் இறக்கி அரிசி மாவு+ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும். அதன் மீது நெய்விடவும்.  பின் உருண்டைகளா க உருட்டி ரொம்ப மெல்லியதாக இல்லாமலும், தடின மாக இல்லாமலும் தட்டி எண்ணெயில் பொரி க்கவும்.

அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.  மாவை கிளறி உட னே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply