Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோக்கியா என்9 ஸ்மார்ட் போன்

மொபைல் போனில் செயல்படும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பலவற் றைக் கொண்ட மிகச் சிறந்த போனாக, நோக்கியா தன் என்9 (N9) ஸ்மா ர்ட் போனை வடிவமைத்துள்ளது. மீகோ (Meego) என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனை, நோக்கியா நிறுவ னம் பன்னாட்டளவில் விரைவில் அறிமுகம் செய்திட இருக் கிறது. இந்தி யாவில் வரும் தீபாவளியை ஒட்டி இது வாடிக்கையாளர் களுக்குக் கிடைக்கும்.

இன்டெல் நிறுவனத்தின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட என்9 ஸ்மா ர்ட் போன் மட்டுமே, மீகோ சிஸ்டத்தில் இயங்கும் போனாகும். இதில் 16 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவகை போன்கள், முறையே ரூ. 31,800 மற்றும் ரூ.37,200 என விலையிட்டு கிடைக்க இருக்கின்றன. 

இந்த போனில் பட்டன்கள் இருக் காது. ஒரே பகுதியாக இதன் வடிவ மைப்பு இருக்கும். இதன் பேட்ட ரியைக் கழட்ட முடியாது. இதில் மூன்று வகை இடைமுகம் இருக் கும். ஒவ்வொன்றும் ஒருவகை செயல்பாட்டுக்கு வழி தரும். இதன் மூலம் வேகமான இணைப்பு மற் றும் செயல்வேகம் கிடைக் கும். 

இதில் 3.9 அங்குல அகலத்திலான திரை தரப்பட்டுள்ளது. இத்திரை கீறல் விழ முடியாத, வளைவான கண் ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் புறம் பாலி கார்பனே ட்டினால் தயாரிக்கப் பட்டுள்ளதால், இதன் ஆன்டென்னா இயக்கம், அழை ப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படும் திறன் சிறப்பாக இயங்கும் என நோக்கி யா அறிவித்துள்ளது.

இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் கார்ல் ஸெய்ஸ் ஆட்டோ போகஸ் சென்சார் திறன் உள்ள அகலவகை லென்ஸ் கொண்டு அமைக்கப்பட் டுள்ளது. இதன் விரிதன்மை அகலமாகக் கிடைப்பத னால், மிகக் குறைந்த வெளிச்சத்திலும் இதனால் சிறப்பான போட்டோக்களை எடுக்க இயலும். 

இதில் இணைக்கப்பட்டுள்ள மேப் அப்ளிகேஷன் மூலம் வாகனத்தில் செல்கையிலும், நடக்கும் போதும், குரல் வழியாகவும், மேப் வழியாகவும் வழி நடத்தப்படுவோம். 

இதில் டோல்பி டிஜிட்டல் ப்ளஸ் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஹெட் செட் போட்டுக் கேட்டாலும், சரவுண்ட் ஸ்டீரியோ சவுண்ட் கிடைக்கும். உலக அளவில் இத்தகைய தொழில் நுட்பம் கொண்ட ஒரே ஸ்மார்ட் போன் இது என்று நோக்கியா அறிவித் துள்ளது.

அண்மையில் பிரபலமாகி வரும் அண்மைக் களத் தொடர்பு Near Field Communication தொழில் நுட் பமும், அதனுடன் இணைந்து செயல்படும் வயர் லெஸ் தொழில் நுட்பமும் இதில் தரப்படுகிறது. இத னால் இந்த தொழில் நுட்ப வசதி கொண்ட இரு சாத னங்களை அருகருகே வைப்பதன் மூலம் வீடியோ, படங்கள், பைல்கள் ஆகியவற்றை இரண்டிற்கும் இடை யே பரிமாறிக் கொள்ளலாம்.

இணையவழி வர்த்தகம் மேற் கொண்டுள்ள இணைய வர்த்தக தளம், ஏற்கனவே இதற்கான ஆர்டர்களைச் சென்ற ஆகஸ்ட் முதல் பெற்று வந்தது. அப்போது இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.32,368 என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பு அத்தளத்தில் இல் லை. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply