Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வந்துவிட்டது சாம்சங் 4ஜி மொபைல்

உலக அளவில், மொபைல் போன்களைத் தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக் ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் தென் கொரியாவில் சீயோல் நகரில், 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவ மைத்து விற்பனைக்கு வெளியிட்டு ள்ளது. காலக்ஸி எஸ்2 எல்.டி. இ., கா லக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ. என அழைக்கப்படும் இவை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கு பவை. தற்போதைய 3ஜி தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் மூன்று ம டங்கு அதிக வேகத்தில் டேட்டா வினைப் பரிமாறும் திறன் கொண்டவை. 

எஸ்2 எல்.டி.இ. ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இய ங்குகிறது. இதன் திரை 4.5 அங்குல அகலம் உடையது. இதில் இய ங்குவது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வே கத்தில் செயல்படும் ப்ராசசர் ஆ கும். எச்.டி. எல். டி.இ. மொபைல் போனின் திரை 4.65 அங்குல அக லம் உடையது. இந்த திரை வெளிப்பாடு ஹை டெபனிஷன் அ மோலெட் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தாக இரு க்கிறது. 110 சதவிகித இயற்கை வண்ண வெளிப்பாடு இருக்கும். 180 டிகிரி கோணத்தில் காணும் வாய்ப்பு இதில் உண்டு. இதில் இயங்கும் ப்ராசசர் வேகமும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம் உடையது. 

4ஜி எல்.டி.இ. தொழில் நுட்பம் மூலம் மிக அதிக வேகமான டிஜிட்டல் செயல் பாட்டி னைப் பெறுவதுடன், அதிக ரெச ல்யூ சனுடன் கூடிய வயர் லெஸ் சேவையும் கிடைக்கும். சாம்சங் நிறுவ னத்தின் காலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போன்கள், ஏப்ரலில் வெளி யானது முத ல், பன்னாடெங்கும் இதன் விற்பனை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக் கப்பட் டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply