Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி! – வீடியோ

லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் கடாபி அவரின் சொந் த ஊரான சேர்ட்டேவில் நேற்று வியாழக் கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கால்வாய்க் குழியொன்றிலிருந்து தேசிய இடைக்கால கவுன்ஸில் படைக ளினால் பிடிக்கப்பட்டதாகவும் தன் னை சுட வேண்டாம் என அவர் மன்றாடிய தாகவும் தெரிவிக்கப் படுகிறது.

ஆனால் பினன்ர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டு கொல் லப்பட்டார். கால்வாய்க் குழியொன்றிலிருந்து கேணல் கடாபி கிளர் ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டபோது அவர் இராணுவ பாணி ஆடை அணிந்திருந்தார். பிக் வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கேணல் கடாபி பின்னர் ஓரிடத்தில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்படும் காட்சிகளை லிபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியு ள்ளது.


தன்னை சுட்டுவிட வேண்டாம் என கடாபி கோரியதாகவும் கிளர் ச்சிப் படை வீரர் ஒருவரிடம் ‘ நான் உங்களுக்கு என்ன செய்தேன்’ எனக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படு கிறது.

ஆனால் அவரின் வேண்டு கோள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அவர் தலையி லும் வயிற்றிலும் சுடப்பட் டார். அவரின் சடலத்தை கிளரச்சிப்படையினர் இழுத் துச் செல்லும் காட்சியை அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பின்னர் அவரின் சடலும் அம்புல ன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டது.

1942.06.07 ஆம் திகதி பிறந்த முவம்மர் கடாபி 1969 ஆம் ஆண்டு தனது 27 ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். . தனது 42 வருடகால ஆட்சிப்பிடியை நேட்டோ ஆதரவுடனான கிளர்ச்சிப்படையினரிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் இழந்தார். தனது 69 ஆவது வயதில் அவர் நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply