Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணீர் – சில அரிய தகவல்கள்

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர் களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?

ஆம், நிச்சயமாக, அழாத குழ ந்தைகளை விட, அழும் குழ ந்தைகளின் காயம் விரை வில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இத ற்குக் கா ரணமாக அமைவது கண்ணீ ரில் உள்ள கிருமி நாசினி.

மனிதர்களின் கண்ணீரில் ஒ ரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற் றுக்கண க்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.

லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படு கிறது.

இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண் டாம் என்பதை நினைவில் கொள்ளு ங்கள். அதற்காக அழச் சொல்லி கட் டாயப்படுத்தாதீர்கள்.

 

மேலும் பெண்களின்  கண்ணீர் பற்றிய மேலும் சில தகவல்கள்

ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண் களின் கண்ணீருக்கு உண்டு

ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண் களின் கண்ணீருக்கு உள்ளதாக இஸ்ரேலிய வீஸ்மான் கழகத்தைச் சேர்ந்த விஞ் ஞானிகள் குழுவொன்று தமது ஆய்வின் மூலம் நிரூபி த்துள்ளது.

பெண்களின் கண்ணீரில் அடங்கியுள்ள சில வேதியற் பொருட்களே இதற்கான காரணமென அவர்கள் தெரிவித்துள் ளனர்.

இதேவேளை எலிகள் போன்ற சில உயிரினங்கள் கண்ணீரின் மூலம் இரசாயன ரீதியாக தொடர்பாடலில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக ஆண் எலிகளின் கண்ணீரானது ஒருவகை புரதத்தினை கொண்டுள் ளதாகவும்n இதுபெண் எலிகளை புணர்ச்சியில் ஈடுபடுவதற்குத் தூண்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பெண்களின் கண் ணீரின் மணமானது அவர்களை ஆண்களிடத்தில் கவர்ச்சியற்ற வர் களாக உணரவைத்ததாகவும், ஆண்க ளின் இதயத்துடிப்பு வீதம், தோலின் உஷ்ண ம், தெஸ்தெஸ்தரோன் சுரப்பு வீதம் ஆகிய வற்றைக் குறைத்ததாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

பொதுவாக ஆண்களுடைய மூளையின் குறி ப்பிட்ட சில பகுதி களான ஹைப்போதலமஸ், பியுசிபோர்ம் ஜயிரஸ் ஆகியவை காம உணர்வின் போது தூண்டப்படுவதாகவும், ஆனால் பெண்களின் கண்ணீரை நுகர்ந்தபோது மூளையின் இப் பகு தி நரம்புகளின் செய ற்பாடுகள் குறைவடைந்ததாகவும் அவர்கள் தங்களது அறிக் கையில் குறிப்பிட் டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டியுள் ளதாக அவர்கள் மேலும் தெரிவி க்கின்றனர்.

பெண்களின் கண்ணீர் வேஷமா இல்லை ஆயுதமா

கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக் கப்ப டும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வரு கின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறுகிறார்கள். கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண் கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக் கிறார்கள். நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடி த்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என் றால்’ கூப்பாடு போட் டு அழுது, தரை யில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித் தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.

ஆனால் ஒரு சில வீடுகளில் ‘இந்தச் செயலுக்கு இடங்கொடுக்க மாட்டார் கள்.

அழுத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் கார ணங்காட்டி, ‘இன்னைக்கு ஒருவாட்டி இவன் அழும் போது, அவனது கோரிக்கைக்கு நாம செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’

’அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான்’ என்று ஏசி, அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.

மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க் கின்ற போது, எமக்குரிய தேவை கள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயு தமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது. பாடசாலை படி க்கும் போது, சக நண்பர்களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூல மாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிணடல் பண்ணுவார்கள்.

சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமா க நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கி றார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி ‘என் அத்தானெ ல்லே, என் மாமாவெல்லே, பக் கத்து வீட்டுப் பரிமளம் புதுசா வந் த ஹன்சிகா சாரி வாங்கிக் கட்டி யிருக்கா’ அதே மாதிரிப் புடவை ஒன்னு எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டுப் பார்ப்பா ர்கள். இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமனாக வேலை செய்யப் பழகி னாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்கு வதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரிய வில்லை.

கணவன் கொஞ்சம் மசிந்து கொடுக்கா விட்டால்,

‘நீங்களும் தான் இருக்கியளே, உங்களைக் கலியாணம் கட்டி இத் தனை வருசத் திலை என்ன பிரயோசனம்?

நம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை புருஷன் எப்பூடி அழகான ஹன்சிகா சாரி வாங்கிக் கொடுத்திரு க்கான்! நீங்களும் தான் இப்படி இருக் கிறீங்களே? இப்பவே நான் உங்களை விட் டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவா பாருங்க.

அதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். {அனுபவப்பட்ட பெரிய வங்க சொல்லி வேதனைப்பட்ட விடயம்.}

இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா? அல்லது கண்ணீ ரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது, கண்ணீருக்குக் கட்டுப்படுகின் றாரா? என்பது புரியாத விடய மாக இருக்கின்றது.

இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாட சாலைகளிலும் சரி சக நண்ப ர்கள் யாருடனாவது சண்டை என்றால், தம்மால் முடிந்த வ ரை வாய் வீரத்தினைப் பெண் கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். இல்லையேல் இறுதி அஸ்திர மான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த் தைகள் சொன் னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகி விடு வார்கள்.

*பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.

*பெண்களின் கண்ணீரானது ஆண்க  ளைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறு கிறார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: