Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பற்களில் படிமானங்கள் இருந்தால்…

எனது தாயின் வயது 80. அவரது வாயின் கீழ்த்தாடையின் பல்லு க்கு இடையில் தசை வளர்கிறது. இதை இருமுறை அகற்றி விட்டும், திரும்பவு ம் வருகிறது. இது எதனால்? பல்சொத் தை இருந்து அதனால் வரும் நச்சுப் பொருட்களால் அவ்வப்போது வீக்கம் அல்லது தசை வளர்ச்சி ஏற்படலாம். பல் டாக்டரை அணுகி அவ்விடத் தில் எக்ஸ்ரே எடுத்தபின், எந்த பல்லால் தசை வளர்ச்சி ஏற்பட் டுள்ளது என்பதை அறிந்து, அப்பல்லின் வேர் சிகிச்சை செய்ய வே ண்டும். சிலருக்கு பல்சொத்தை இல்லாமல், பற்களில் படிமான ங்கள் அதிகமாக இருக்கும். அப்போது ஈறு அல் லது தசை வீக்கம் ஏற்படலாம். அதற்கு பல் டாக்டரை அணுகி (ஸ் கேலிங்) பற்களை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் முழுத் தா டை எக்ஸ்ரே எடுத்து, ஈறு சிகிச் சை நிபுணரிடம் ஆலோசனை பெற்றபின், ஈறு சிகிச் சை செய்து, தசை வளர்ச்சி மற்றும் பற்களின் வேர்ப்பகுதியில் உள்ள படிமானங்களையும் அகற்றிவிடுவர். எனது உறவினர் பைய னுக்கு இரண்டரை வயது ஆகிறது. இன்னும் பற்கள் முளைக்கவில் லை, என்ன செய்வது? பொதுவாக குழந்தைகளுக்கு பால் பற்கள் 6 முதல் 8 மாதங்களில் முளைத்து விடும். முதலில் கீழ்த்தாடை பற்கள், அதைத் தொடர்ந்து மேல்தாடை முன்பற்கள் வளர்ந்து விடும். சிலருக்கு ஓரிருமாதங்கள் தாமதமாக வளரக்கூடும். ஒரு ஆண்டு காலம் தாமதமாகி விட்டால், பல் டாக்டரை அணு கி ஓ.பி.ஜி., எனப் படும், முழுத்தாடை எக்ஸ்ரே எடுக்க வேண்டும். அதன்பின் அவ்வி டத்தில் உள்ள ஈறுகளை சிறிதளவு அகற்றி விட்டால் பற்கள் முளைத்துவிடும். சில குழந்தைகளுக்கு அவ்விடத்தில் அதிகளவு கடினமான எலும்பு இருப்பின் பற்கள் தாமதமாக முளைக்கும்.

டாக்டர் எஸ்.முத்துராமன்,
மதுரை, 94430-61160

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply