Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புளிச்ச ஏப்ப‍ம் ஏன் வருகிறது?

எப்போதாவது புளிச்ச ஏப்பம் வருவது பற்றி கவலைப்படத் தேவை யில்லை. சிலருக்குச் சாப்பிட்டு முடித்த பின் புளிப்பு கலந்த  ஏப்பம் வரும். இது குறித்துக் கூட அதிகம் கவலை கொள்ளத் தேவை யில்லை. ஆனால் உணவு ஜீரணமாகாமல் புளித்த  ஏப்பம் வருவது நோ யின் அறிகுறி.

இரைப்பை, சிறுகுடலின் முன்பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் உண வு ஜீரணிக்கும் தன் மை மட்டுப்படுகிறது. உடலில் எந்த  ஒரு பாக த்திலும் சுரப்பு நீர் தங்கிவிட்டால் கிருமிகள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துவிடும். இதனால் இரைப்பையில் உள்ள  உணவுப் பொருள்க ளைச் சேதப்படுத்தி துர்நாற்றத்துடன் ஏப்பம் வரத் தொடங்கும். இது வே புளித்த ஏப்பம் என்கிறோம்.

தினமும் சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து ஏப்பம் வந்தால் உஷா ராகி விட வேண்டியதுதான். இரைப்பையில் அடைப்பு  இரு ந்தால் தான் இதுபோன்ற ஏப் பம் வரும். இதைத்தான் புளி த்த ஏப்பம் என்கி றோம். இந்த அடைப்பு புற்று நோயாக இருக் கலாம். உடனடியாக மருத்து வரை அணுக வேண்டும். எதுக் களிப்பது எதனால்? சிலருக்கு சாப்பிட்ட உணவு சிறிது நேரத் திலேயே எதுக்களித்து வரும். நாம் சாப்பிடும் உணவு ஒரு வழிப்பாதையைப் போன்று உணவுக் குழாய் வழியாக  இரைப்பை க்குள் சென்று விட்டால் சாதாரணமாகத் திரு ம்பி வரக் கூடாது.

அதுபோன்றுதான் நமது ஜீரண மண்டலம்  வடிவமைக்கப்பட்டுள் ளது. ஏனெனில், இரைப்பையில் உள்ள கார ம், அமிலம், பித்த நீர் மேலே வந்து பாதிப் பை ஏற்படுத்தக்  கூடாது. இதுபோன்ற அமி லங்கள் மேலே வருவதைத் தடுப்பதற்காக இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையே திரளான  தசைப்பகுதி உள்ளது. இதுதான் உதரவிதானப் பகுதி. இது ஒரு வால்வு போன்று செயல்படுகிறது. இந்த தசைப் பகுதி பழுது  படும்போது அமிலம் மேலே வந்து உண வுக் குழாயில் எரிச்சல், எதுக்களித்தல் ஏற்படுகிறது.

மது அருந்துதல், புகை பிடித்தல், அதிகக் காரம், அளவுக்கு மீறிய மசாலா, தலை வலி மாத்திரை ஆகியவற்றால் இத்த சை பாதிக் கப்பட்டு எதுக்களிப்பு வரலாம். பிறக்கும் போது இயற்கையாகவே தசைப்பகுதி சரியாக வேலை செய்யாமல் இருந்தால்  எதுக்களிப்பு வரலாம். தொடர்ந்து எதுக்களிப்பு ஏற்பட் டால், உணவுப் பாதை பாதி க்கப்பட்டு புற்று நோயாக வரும் வாய் ப்பு   உள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: