Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முழு நீள காராமணி சாகுபடி

காராமணியை குளிர்காலம் மற்றும் கடும் மழை பெய்யும் காலம் இவைகளைத் தவிர்த்து இதர மாதங்களில் சாகுபடி செய்ய லாம். காராமணி ஆடி- ஆவணி ப் பட்டத்தில் மானாவாரி நில ங்களை மழையை நம்பி சாகு படி செய் யப்படுகின்றது.

காராமணியை காய்கறியாக பயன்படு த்தவே சாகுபடி செய் யப்படுகிறது. சிறி ய அளவில் சாகுபடி செய்ய குச்சி நட் டு அதன் மேல் படர விடலாம். பொது வாக தரையில் வளரும்படியே இத னை சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி வகை காராமணியில் சா குபடிக்கு ஏற்ற இரண்டு ரகங்கள் உள்ளன. என்.எஸ்.634 என்ற ரகம் நல்ல பசுமை நிறத்துடன் காணப்படும். இதன் காய்கள் ஒன்ற ரை அடி நீளம் கொ ண்டதாக இருப்பதோடு பார்ப்பதற்கு உருண்டு காண ப்படும். இதில்சதைப்பற்று குறைவாக இருப்பினும் நாரே கிடை யாது.

காய்கள் சுவையாக இருக்கும். அடுத்து என்.எஸ்.620 ரகம் பார்ப்பத ற்கு வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். காய்கள் கயிறு போல் நீளமாக இருக்கும். காய் கறி வகை காராமணி ரகங்கள் மக்க ளால் அதிகம் விரும்பப்படுகிறது. நுகர் வோர்கள் விரும்பி வாங்கிச் செல்கின் றனர். தேவையான அளவு புரதச்சத்து உள்ளது. காய்கறி வகை காரா மணி சாகுபடியானது மிகவும் சுலபமாக உள் ளது. காற்றிலுள்ள தழைச்சத்தினை தனது வேர் முடிச்சுகளில் சேகரித்து வைத்துக் கொள்ளும் திறன் பெற்ற இந்த பயிர் அதிக அளவு ரசாயன உரங் களும், இயற்கை உரங்களும் இல்லாமலே நல்ல வளமான மண் ணில் சாகுபடி செய்யப்படுகின்றது.

சாகுபடி முறை: சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த மண் நல்ல வடிகால் வச தியைக் கொண்டிருக்க வேண்டு ம். நிலத்தை கட்டிகள் இல்லா மல் உழுது இயற்கை உரங்க ளை இடலாம். இயற்கை உரங் களை இடுவதற்கு முன் அவை களில் உள்ள கண்ணாடிகள், கற் கள் மற்றும் இதர கலப்பட ங்களை அகற்றிவிட்டு உரத்தி னை நன்கு பொடிசெய்து விட்டு சாகுபடி நிலத்தின்மீது சீராகத் தூவவேண்டும். உடனே எருக் கள் நிலத்தில் மண்ணோடு நன்கு கலக்க உழவேண்டும். உழுவது மிக ஆழமாக இல்லாமல் எருவினை மண்ணோடு நன்கு கலக்கும் படி செய்யப்பட்டிருக்க வேண்டும். விவசாயிகள் சொந்தமாக தயா ரித்த உரங்களை ஏக்கருக்கு 5 டன் வரை இடலாம். சாகுபடி நிலத்தில் போதிய வளம் இல் லாத சூழ்நிலையில் உழவு செய் யப்பட்ட பின், விதைப்பதற்கு முன் அடி உரமாக யூரியா 25 கி லோ, சூப்பர் 125 கிலோ மற்றும் பொட்டாஷ் 35 கிலோ இவைக ளை ஒன்றாக கலந்து ஒரு ஏக் கர் நிலத்திற்கு இடவேண்டும். மறுபடியும் உழவு செய்து விட் டு இரண்டு அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு தயார்செய்த பாரில் அரை அடி இடைவெளியில், விதை யினை வரிசையில் ஊன்ற வேண்டும். விதை சீராக முளைப்பதற்கு பாசனம் கொடுப்பதோடு, அடுத்துவரும் பாசனங்களை கவனமாக கொடுக்க வேண்டும். பாசனம் சமயம் நீர் தேங்குமளவிற்கு செய்ய க்கூடாது. பயிர் சீராக வளர்ச்சிபெற வா ரத்திற்கு இரு முறை பாசனம் தர வேண் டும். பயிரில் களை எடுப்பதற்கு நல்ல கவனம் கொடு க்க வேண்டும். நிலத்தை கொத்திவிடும்போது மேலாக செது க்க வேண்டும். அதிக ஆழமாக செய்யக் கூடாது. செடிகள் வளரும் போ து குச்சி நட்டு அதன் மேல் படர விடலாம். இதனா ல் காய்களை சுலபமாக அறுவடை செய் யலாம். அதிக செலவு ஏற்படுவதால் நடைமுறையில் இது சாத்தியப்படுவதி ல்லை. செடிகளை பாத்தியில் அப்படியே வளர விடப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. விதை நட்ட 60 நாட்களுக்கு பிறகு அறுவடை வரும். காய்கள் பரா மரிப்பு பணியைப் பொறுத்து ஒன்றரை முதல் இரண்டு அடி நீளத்தை காய்கள் அடையும்.

பொருளாதாரம்: இந்தப்பயிரை அரை ஏக்கரில் (50 சென்ட்) சாகுபடி செய்ய ரூ.6,650 செலவாகும். அரை ஏக்கர் மகசூலின் மதிப்பு ரூ.12,000 (ரூ.1,500 x 8), அரை ஏக்கரில் லாபம் ரூ.5,350.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply