Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் அழகு ரகசியங்கள்!!

அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.

அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனி க்க வேண்டிய ரகசியங்கள்…

முகம்

பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத் தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில் லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகு படுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண் களைப்போல `பேசியல்’ செய்து முக அழகை பொலிவு படுத்திக் கொள் கிறார்கள்.

அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு. எனவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்க ளால் முடிந்தவரை முகஅழகை அதி கமாக்கிக் கொள்ளுங்கள்.

சருமம்

பெண்கள் ஆண்களிடம் ஆண்மைத் தன்மையை மட்டும் விரும்பமா ட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆண்களின் சருமம் இயல்பாகவே சற்று கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும். அவர்கள் போ திய கவனம் செலுத்தி சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும். சருமத் தில் எங்கேயும் தேவையில்லாமல் முடி யை அதிகம் வளரவிடக்கூடாது. இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சரும த்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங் கள் மீது காட்டுவார்கள்.

அழகுசாதனப் பொருட்கள்

லிப்ஸ்டிக், புருவ மை, ஜிகினா துகள்கள், சென்ட், பவுடர் என ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் அனைத்தையும் பெண்களைப்போல ஆண்கள் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அழகு சாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழ கோடு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பற்கள்

புன்னகையே மனிதர்களின் அணிக லன். வெண்மை நிற பற்கள் சிரிப்பி ன் அழகைக் கூட்டும். டீ- காபி பரு குவது, புகைபிடிப்பது, பலவித உண வுக ளை உண்பதால் பற்களின் நிற மும், வளமும் பாதிக்கப்படுகிறது.

பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன. சாதாரணமாக தினமும் இருமுறை பல்துலக்குவதே பற் களின் பாதுகாப்புக்குப் போதுமானது.

கூந்தல்

ஆண்களும் தலைமுடியை பராமரிப்ப தில் நல்ல ஆர்வம் காட்டுகிறா ர்கள். கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள் வது, அவ்வப்போது ஸ்டைலை மாற் றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக் கையாக இருக்கிறது. இதுமட்டும் கே சப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல. முடிகள் உடைந்து, உதிர்ந்து போகா மல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்து ம். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படு த்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.

உடை

உடை அலங்காரம் என்பது மற்ற அலங் காரங்களைவிட முக்கியமானது. எளிதான தும் கூட. கோட்-சூட், டை என்று வருவது தான் ஆடை அலங்காரம் என்று எண் ணிவிடாதீர்கள். சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போது மானது. அழுக்கு இல்லாமலும், பட்ட ன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை `அயர்னிங்’ செய் து அணிவது சிறந்தது.

இதுவும் அணிகலன்தான்

கலகலப்பாகப் பேசுங்கள். இதுதான் ஒருவரை அங்கீகரிக்கும் உண்மை யான அலங்காரம். நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங் களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.

நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களுக்குப் புத்துணர் ச்சியைத் தரும். நல்ல மனநிலையைக் கொண்டு வரும். பிறகு இயல் பாகவே நீங்கள் கலகலப்பானவராக மாறிவிடுவீர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: