Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலை தீபாவளி

தீபாவளி ஆண்டுக்கு ஒரு முறை என்றால் தலை தீபாவளியோ ஆயுளுக்கு ஒரு முறைதான்… ஆம் திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளி யாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது!

திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மண மக னின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிற ப்பு.

புதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்க ளுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென் று சீர் வரிசை (வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள் ) வைத்து தலை தீபாவளி கொண் டாட வீட்டிற்கு வருமாறு அழைப் பர்.

அதன்படி மணமக்களும் தீபாவ ளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.

தீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து அந்த பெண்ணும், அவளது கணவரும் எண்ணெய் வைத்து குளித்து முடித்து புத்தாடை அணிவர்.

பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர் வாதம் வாங்கிய பின்னர் இனிப் புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்ப த்தாருடன் பட்டாசுகளைக் கொ ளுத்தி மகிழ்வர். மணமக‌ன் த‌ன் மனை‌வி‌யி‌ன் குடு‌ம்ப‌த்தா ருட‌ன் ‌தீபாவ‌ளியை கொ‌ண்டா டுவதுதா‌ன் தமிழ்நாட்டில் கொ ண்டாடப்படும் தலை தீபா வளி.

பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்ப தை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்ப டியாக அனுப்பி வைத்து பெற் றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபா வளியின் வழ க்கமாகும்.

தமிழ்நாட்டின் ஒரு சில மா வட்டங்களான கன்னியாகுமரி, நெல் லை ஆகியவற்றில் தலை பொங்கலும் கொண்டாடப்படுவது வழக் கம்.

எ‌ன்ன உ‌ங்க‌ தலை ‌தீபாவ‌ளி ஞாபக‌ம் வ‌ந்து‌வி‌ட்டதா?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply