Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (23/10)

அன்புள்ள அம்மாவிற்கு —
நான், 20 வயது கல்லுரி மாணவன். எங்கள் துறையிலேயே நான்தான் முதல் மாணவன். கல்லூரியி ல் எந்தப் போட்டியானாலும் நான் பங்கேற் பேன்; பரிசும் நிறைய வாங்கியிருக்கிறே ன். எங்கள் ஆசிரியைகளுக் கெல்லாம் என் மீது நன்மதிப்பு உண்டு; இது, என் ஒருபுறம்.

நான் நினைத்து, நினைத்து வேதனைப்படும், என்னால் மறக்க இயலாத மறுபுறம் எனக்கு உண்டு அம்மா.

என் அப்பா சிறு வயதிலிருந்து என் மீது கண்டிப்புடன் நடந்து கொண் டதாலோ என்னவோ, எனக்கு தவறான விஷயங்க ளின் மீது அதிக ஆர்வம் வந்து விட்டது. குறிப்பாக, செக்சில் எனக்கு ஈடுபாடு அதிகம். இது, இந்த வயதில் சகஜம், வாழ்க்கையில் அடித்தளம் என்றெல்லாம் கூறி, என்னை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அதற்கு, நான் தகுதியா னவனும் இல்லை அம்மா.

நிறைய. நிறைய தவறான படங்களை நான் தினமும் பார்க்கிறேன். ஒரு பெண்ணை என்னால் நல்ல முறையில் பார்க்க இயலவில்லை. சுய இன் பம் போன்ற எல்லா தீய குணங்களும் எனக்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறு குழந்தையுடனும் நான் தவறு செய்து விட்டேன். கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டிய பாவி நான்.

இறைவனிடம் எனக்கு மன்னிப்பே கிடையாது; ஆனால், இனிவரும் கால ங்களில் நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறன். எனக்கு ஏதேனும் ஒரு வழி சொல்லுங்கள்.

நான் இருக்கும் குழியிலிருந்து மீண்டு வர ஒரு வழி தேவை. நல்வழி கூறுங்களம்மா…

எனக்கு புகை, மது, பாக்கு போன்ற எந்த பழக்கமும் இல்லை. ஆனால், காமத்திற்கு அடிமையாவது எல்லாவற்றினும் கேவலமானது இல்லை யா. நான் உங்களையே நம்பி இருக்கிறேன். விரைவில் என்னை காப்பாற்றுங்கள்.
— இப்படிக்கு
தங்கள் அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு —

உன் மனம், காமத்தை நோக்கி தறிகெட்டு ஓடுவதாய் எழுதியிருந்தாய். அதனால், உனக்குள் குற்ற உணர்ச்சி மூங்கில் காடாய் ஓங்கி வளர்கிறது இல்லையா?

காம உணர்ச்சி என்பது தாயின் மார்புக் காம்பை உறிஞ்சி குடிக்கும் பச் சிளங் குழந்தையின் செயல்பாட்டில் ஒளிந்திருக்கிறது; அதை ஆங்கி லத்தில், “சக்கிங் இம்பல்ஸ்’ எனக் கூறுவர்.

புழுக்களிடம், பூச்சிகளிடம் கடல் ஆழத்தே நீந்தும் கண் பார்வையற்ற ஜீவராசிகளிடம் கூட செக்ஸ் உணர்வு உள்ளது.

பெற்ற தாயின் மீது, மகனுக்கு காதல் வந்து விடுகிறது; தந்தையின் மீது மகளுக்கு காதல் வந்து விடுகிறது. 80 வயது கிழவனின் மீது, 16 வயது யுவதிக்கு காதல் வந்து விடுகிறது. ஆணுக்கு ஆண் காதல் வருகிறது; பெண்ணுக்கு பெண் காதல் வருகிறது. இவை முறையற்ற காதல்கள். சமூக கட்டுப்பாடுகள் இவற்றை வெகுஜனத்திலிருந்து ஒதுக்கி வைத்தி ருக்கிறது.

உன் தந்தையின் கண்டிப்புக்கும், உன் அதீத செக்ஸ் உணர்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

காமம், மனிதருக்கு இறைவன் கொடுத்த பரிசு அல்லது தண்டனை. காமத்தை வைத்து ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ என்ன சாதிக்கின்ற னரோ, அதை வைத்தே காமம் அவர்களுக்கு பரிசா, தண்டனையா, சாப மா, வரமா என கண்டுபிடித்து விடலாம்.

உலகின் அனைத்து நுண்கலைகளின் கிரியாஊக்கம் காமமே. வயதாக, வயதாக காமம் இடுப்பிலிருந்து பயணித்து, ஒரு ஆணின் தலையில் போய் தங்கி விடுகிறது என்றார் சுஜாதா.

உலகின் அழகான பூ பெண்கள்தான்.

பெண்கள், பண்டோரா பெட்டி போன்றவர்கள். அதனுள் விலையுயர்ந்த வைரங்களும், சுவை மிகுந்த உணவு வகைகளும், விஷம் மிகுந்த பாம்பு களும், பாடும் ஆடும் பறவைகளும், டால்பின்களும், சுறாக்களும் ஒளிந் திருக்கும். பெட்டிக்குள்ளிருந்து எதை எடுக்கிறாய் என்பது உன் வித்வ த்தை பொறுத்தது.

“ஒழுங்குபடுத்தப்பட்ட காமம் இறைவனை அடைய உன்னத வழி…’ என் றார் ஓ÷ஷா. “முறையான உறவிலிருந்து கிடைக்கும் காமத்தை தயக் கமின்றி அனுபவிக்கலாம்…’ என்கிறது இஸ்லாம்.

உலகின் எல்லா விளையாட்டுகளும் காமம் சார்ந்ததே. ஆட்டத்தின் வெற்றி காமத்தின் வெற்றியாக மாறும்.

நீ பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவன். உனக்குள் காமம் கரைபுரண்டு ஓடுவது யதார்த்தமானது. இல்லாமல் இருந்தால்தான் பிரச்னை. உன் காம உணர்வே உன்னை போட்டிகளில் ஜெயிக்க வைக்கிறது. உன் வெற் றி பெண்களின் கவனத்தை உன் பக்கம் திருப்பும் சாகசம்.

நீலப் படங்கள் பார்த்தல், சுயஇன்பம் அனுபவித்தல், எல்லா இளைஞர்க ளும் செய்யக் கூடியதே.

உனக்கு திருமணமாக இன்னும் குறைந்தபட்சம், ஐந்து வருடங்கள் ஆக லாம். அதுவரை காமத்தை கட்டுக்குள் வை. எல்லை மீறி, அத்து மீறி அவமானப்படாதே… தண்டனைக்குள்ளாகாதே.

சிறுபெண் குழந்தைகளுடன் தனிமையில் இராதே.

செக்ஸ் கேவலமானது என்றால், அதை நம் ஜீனில் பதித்த இறைவனே முதல் குற்றவாளி.

செக்ஸ் என்பது விளையாட்டு. அதற்கு வகுக்கப்பட்டிருக்கும் விதிகளு க்கு கட்டுப்பட்டு விளையாடி வெற்றி பெறு. வாழ்த்துக்கள் மகனே!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள்
விதை2விருட்சம் இணையத்தில்  விளம்பர செய்ய
விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com
என்ற மின்னஞ்சலில்  தொடர்பு கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: