Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு. 

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்க ள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பா னையில், மஞ்சள் செடி மங்கல அடை யாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணம்

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொ ற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெ ரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முத ன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக் கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குண ம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ் சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரு ம் கண்டு கொள்வதாய் இல்லை.

மஞ்சளின் முக்கியத்துவம்:

இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன் படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்த வில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக் கும் பழக்கம் உலக நாடுக ளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தை யும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர் வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவ து நல்லது என்று சொல்லப் படுகிறது.

சமையலில் மஞ்சளின் பங்கு

இந்தியர்களின் சமையல்களிலும், மஞ் சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமைய ல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிற மியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத் தப்படுகிறது. இந்தியாவின் தென் பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதே போல், வட இந்தியர்கள் கொழுக் கட் டையில் மஞ்சளை பயன்படுத்துகின் றனர். இது ஊறு காயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனப் பொருள்

வெகு காலமாகவே இந்தியப் பெண்க ள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்ப தில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் இயற்கை சன்ஸ் கிரீனாக பய ன்படுவதால், இந்திய பெண்கள் தோ லுக்கு ஊட்டமளிக்கும் பொ ருளாக பயன் படுத்துகின்றனர்.

இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப் பதோடு, இயற்கை, “ப்ளீச்’ சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சி கள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

நோய் தீர்க்கும் அருமருந்து மஞ்சள்

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.

* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தா லும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறி னால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்ச ளுக்கு உண்டு.

* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொ ண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்கு கிறது.

* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply