Saturday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மஞ்சள் காமாலை

சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவி க்கும் நோய்… மஞ்சள் காமா லை.

இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது?

கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்தி யாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் `கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ’ என்ற வைர சின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீர லை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.

சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உட லுக்குள் நுழைந்து விடுகிறது. ரத்தம் செலுத்தும்போது அல்லது உடலு றவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப் பதாக மருத்துவர்கள் தெரி விக்கிறார்கள்.

இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வார த்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்க ளுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும். கண் களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சி யளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெ ளியாகும்.

மேலும், சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரம ங்கள் தோன்றும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற் றும் மண்ணீரல் வீங்கி பெரி தாகும். இத்துடன் நிணநீர்க் கட்டிகளிலும் வீக் கம் ஏற்பட வாய்ப்பு உள் ளது.

சரி… மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?

ரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ் சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந் த வைரசுக்கு எதிரான எதிர் ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரி த்திருப்பதை வைத்து மஞ்சள் காமா லை நோயின் தாக்கத்தை அறியலாம். மேலும், கல்லீரலில் முக்கிய என்சை மின் அளவும் அதிகரித்து காணப்படும்.

ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடு த்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற் பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள் ளலாம்.

மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக முறையான சிகிச்சை எடு ப்பதோடு பத்தியமும் இருக்க வே ண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமை யாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும், கல் லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம்.

கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வது அவசியமாகிறது.

கர்ப்பிணிகளுக்கு `கல்லீரல் அழற்சி பி வைரசால்’ பாதிப்பு இருக்கும் பட்சத் தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம். இதற் காக, வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிற க்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும என்கிறார்கள் மருத்துவர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply