Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோய்கள் பல தீர்க்கும் இன்னிசை

மனஸை லயிக்கச் செய்வது இன்னிசை. சங்கீதத்தைக் கேட்கும் போது, ஓர் இன்பக் கிளர்ச்சி ஏற்படு கிறது. அமைதியும்,  ஆனந்தமு ம் பூத்துக் குலுங்குகின்றன. கண்ணனி ன் வேய்ங்குழல் நாதத்தில் கோப- கோபியர் மட்டுமல்ல. ஆநிரைகள் மகிழ்ந்தன. இயற்கையும் மகிழ்ந்தது என்பதைப் பார்க்கிறோம்.

இசையைக் கேட்கும் தாவரங்கள் நல்ல விளைச்சலைத் தருவதாக மேற்குவங்க விஞ்ஞானி சரத் சந்திர போஸ் கண்டுபிடித்தது  ஓர் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். இனிய இசையைக் கேட்கும் மாடு கள் அதிகம் பால் சுரப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

இவையெல்லாம் நமக்குத் தெரிந்த தகவல்கள் தான். இசை கேட் டால் நோயும் குணமாகும் என்பது ஒரு புதிய செய்தி. சங்கீத த்தைப் பயன்படுத்திப் பல்வேறு நோய்களு க்கு சிகிச்சை அளித்திருப்பதாக நமது இலக்கியங்களில் கூறப்படும் செய் தியை  நம்மால் நம்பத் தான் முடிய வில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வு கள் இதனை நிரூ பித்துள்ளன.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை கள் இசையைக் கேட்கும் போது, நல் ல ஆரோக்கியத்துடன் வளர்கின்றன வாம். குறைப்பிரசவக் குழந்தைகளு க்கு இசைச் சிகிச்சை ஓர் அரிய வரப் பிரசாதமா கும்.

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைச் சிறிது காலம் இன்கு பேட்டர் என்ற சாதனத்தில் வைத்துப் பராமரித்து வரு கிறார்கள். தாயின் கருவறையில் உள்ள குழந்தை எப்படிப் பாதுகாப்பாக இரு க்குமோ, அதுபோன்ற ஏற்பாடுதான் இன்குபேட்டர்  சாதனம். இந்தச் சாதனத்தில் இணைக்கப்பட்டு ள்ள சில பிளாஸ்டிக் குழாய் கள் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான உணவு  செலுத்த ப் படுகிறது.

தாயின் கருவில் உள்ள குழ ந்தை அனுபவிக்கும் ஓர் அ மைதியான சூழ்நிலையை இன்குபேட்டர் எழுப்பும் ஒரு வித ஒலியால்  அடை யும். அதோடு குழந்தை மெல்லிய ஒலியைக் கேட்கும் போது அதன் உடலில் ஓர் இன்ப அதிர்வு உண்டாகும். அந் த  ஒலியைக் கேட்கும் குழந்தை சட்டென விழித்துக் கொள்ளும். இன்குபேட்டரிலுள்ள குழந் தையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்தியே குழ ந்தைகள் நன்கு தூங்கவும், மூச்சு விடவும் தோதாகக் கம்பி வாத்தியங்களை மெல் ல  மீட்டி  மென்மையான இசையை ஒலி க்கச் செய்வார்கள். அந்த இனி மையான ஒலியைக் கேட் கும் குழந்தை நன்கு தூங் கும்.

சில காலம் இப்படி இசைச் சிகிச்சை அளி த்துவர, குறைப் பிரசவத் தில் பிறந்த குழந்தைகள் சிரமமில்லாமல் மூச்சு  வி டு வதையும் அதன் உடல் இயக்கங்கள் சீராவதையும் கண்டறிந் துள்ளனர்.இன்று பல மருத்துவமனைகளில் குறைப் பிரசவக்  குழந்தைகளுக்கு இவ் வாறு இசைச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் என சிகிச்சை எடுத் துக் கொண்டாலும்,  மனதையும் உடலையும் சீராக வைத்திருக்க உதவும் நல்லதோர் சிகிச்சை இசைச் சிகிச்சை (Music Therapy)  ஆகும். இது நல்ல பலனைத் தரு கிறது என்று    கடந்த சில ஆ ண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகி றது. அரசுப் பணியில் ஈடுபட்டு வந்த ஒரு பெண்மணிக்கு மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை பிற ந்தது. இந்தக் குழந்தை மற்ற குழந் தைகளைப் போல  இல்லை. இதனை வளர்ப்பது சற்றுச் சிரமம் என்று டாக்டர்கள் கூறியதும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண் மணியும் அவரது கணவரும் இக்குழந்தை பிறந்த சில மாதங்களில் பராம ரிக்க முடியாமல் துயருற்றனர்.

இந்தக் குழந்தையை இனி எது வும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கைவிட்ட நிலை யில், புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவம னை நேசக்கரம் நீட்டியது. அங்கு இசைச் சிகி ச்சை மூலம் பல நோய் களைக் குணப்படுத்துகிறார்கள் என்று கேள்விப்ப ட்டு அம்மருத் துவமனையை நாடினர்.

அக்குழந்தைக்கு இசைச் சிகிச்சையை மேற்கொண்ட சில மாதங் களில் குழந்தை நோய் நீங்கி, நலம் பெற்றதுடன் பள்ளியிலும்  படி த்து வருகிறது. அக்குழந்தை எதையும் எளிதாகக் கற்றுக் கொள் ளும் அளவுக்கு அதன் வளர்ச்சி மேம் பட்டது.

குஜராத்தில் ஒரு பெண் மணிக்குக் குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அது பிழைப்பது கடினம் என் று டாக்டர்கள்  கை விட்ட நிலையில், அப்பெண்மணி யார் மூலமாகவோ அப் பல்லோ மருத்துவமனையில் இசைச் சிகிச்சை அளிக்கப்படுவதைக்  கேள்வி ப்பட்டு, அச்சிகிச்சை எடுத்துக் கொண்டதில் அந்தப் பெண் குழ ந்தை இப்போது ஆரோக்கியமாக இருக்கிறது.

இருதய அறுவை சிகிச்சை மேற்கொள் பவர்களுக்கும்  இசைச் சிகி சை நல்ல பலனைத் தருகிறது. 56 வயதுப் பெண் ஒரு வருக்கு அண்மையில் இதய இரத்தக் கு ழாயில் மிகவும் சிக்கலான அறு வை சிகிச்சை நடந்தது. டாக்ட ர்கள் கூட என்ன  ஆகுமோ என்று பயந் தபடியே இருந்தனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த மூன் றாவது நாளிலேயே அவருக்கு இசைச்  சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அறுவைச் சிகிச்சை செய்த காயம் வழக்கத்தைவிட முன்ன தாகவே ஆறி நோயாளி கு ணமடைந்தார்.

இசைச் சிகிச்சையின் ரகசியம் வேறு ஒன்று மில்லை. மென்மையான, இதமான இசை யைக் கேட்கும்போது, அது மனதை  இதமாக வருடுகிறது. ஓர் இன்ப உணர்ச்சி ஏற்படுகிற து. அந்த இசையின் மெல்லிய அதிர்வுகள் உடலெங்கும் பரவி, ஒரு பு த்துணர்ச்சியைத் தருகின்றது. இது ஒரு டானிக் போல வேலை செய்து நோயைக் குணப்படுத்துகிறது.

வயிற்றுவலி, தலை வலி என்றால், உடனே அதற்கான மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறோம். உடனே மூளையிலிருந்து  ஒரு சிக்னல் வலி ஏற்பட்டுள்ள பகுதிக்குச் சென்று வலியைக் குணப்படு த்துகிறது. ஆனால், இசையைக் கேட்டதும் மூளையில்  ஏற்படும்  மென்மையான  அதிர்வுகள்   உடனே பலன் தருகின்றது. வலி மாத்திரைகளால் பக்க விளை வுகள் உண்டு.

ஆனால், இசைச் சிகிச்சையில் அந்தச் சங்கட மெல்லாம் இல்லை. நோயும் முழுமையாகக் குணமாகிறது.

இந்த சிகிச்சை முறை மிகவும் எளிது. இர ண்டு விதங்களில் இதைக் கை யாள்கிறார்கள். முதலில் வெறுமனே இசையைக் கேட்பது. இதை றிணீssவீஸ்மீ விஷீபீமீ என்று சொல் கிறார்கள். மற்றொன்று அந்த இசையோடு நாமும் லயித்து அந்த  இசையோடு இசையாக இரண்டறக் கலந்து விடு கிறோம். இதை கிநீt வீஸ்மீ விஷீபீமீ என்கிறா ர்கள்.

இந்த இரண்டு வழிகளாலும் மூளையிலுள்ள நர ம்பு மண்டலங்க ளைத் தூண்டிவிட்டு ஓர் இன்ப அதிர்ச்சியை இசை ஏற்படுத்துகி றது. 90 சதவி கித நோய்கள் பெரும்பாலும் மன அழுத்தம் காரண மாக ஏற்படு வதால், அந்த அழுத்தத்தைக் குறைத்து  பிரச்னைக்குத் தீர்வு ஏற்ப டுகிறது.

நமது   மூளையில் மூன்று வித மான திரவங்கள் சுரக்கின்றன. இவற்றில் முக்கியமானது. செ ரோடின். இந்த செரோடின் கு றைவாகச் சுரந்தால், சரியான தூக்கம் இருக்காது. தொடர்ந்து தூக்கம் பாதி க்கப்படும்போது, நமது உடலில் பல்வேறு  பிரச் னைகள் ஏற்ப டுகின்றன.

செரோடின் குறைபாட்டை இந்த இசைச் சிகிச்சை சரி செய்கிறது. இதற்கென்றே இருக்கும் ராகத்தில் கம்போஸ் செய்த பாடல் களைக் கேட்கும் போது,  மூளையில் நல் ல அதிர்வு கள் ஏற்பட்டு செரோடின் சரி யாகச்  சுரக்கிறது.  அதே போ ல் இரத்த  அழுத்தம், இதய நோய்கள், சர்க்கரை வியாதி இவையாவற்றை யும் இசையின் மூலம் சிகிச்சை அளித் துக் குணப்படு த்தலாம்.  பெண்களில் பலருக்கு மூளையில் சரியான ரத்த ஓட்டம் இல்லாததால் பெரிதும் சிரமப் படுகிறார்கள்.  ஒற்றைத் தலை வலியா ல்  அவதிப்படுகிறார்கள். இதற்கு மரு ந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டா லும் அவர்கள் இந்தத் தலைவலியால் துடித்துப்  போகிறார்கள். இசைச் சிகிச் சை இவ ர்களுக்குப் பெரிதும் நிவாரண ம் தருகிறது.

விபத்தில் சிக்கி அடிபட்டவர்களின் காயங்கள் ஆற, சரியாகச் சுரக்க வேண்டிய திரவம், சர்க்கரை நோயாளிகளுக்குச் சரியாகச்  செயல்ப ட வேண்டிய பீட்டா கரோட்டின் செல்கள் ஆகியவற்றின் குறைபாடு களை இசைச் சிகிச்சை சரி செய்கிற து.

அப்பல்லோ மருத்துவமனை போன் று வேறு சில நவீன மருத்துவ மனை களிலும் தற்போது இந்த இனிய இசைச் சிகிச்சை  மேற் கொள்ளப்படு கிறது. நோயாளிகள் படுத்திருக்கும் வார்டுகளில் மெல்லிய இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தூங்கும்போது செவிப்புலன் மட்டும் வேலை செய்வதால், மயக்க மருந்து காரணமாக உறங்கிக் கொண்டிரு க்கும்  நோயாளிகள்கூட இசை ஒலியை நன்கு கேட்கிறார்கள். அதனால் அவர்களு க்கு நோயின் தாக்கம் குறைந்து விரை வில் கு ணமடை கிறார்கள்.

மனச் சோர்வு, மன இறுக்கம் முதலிய தொ ந்தரவுகளால் பாதிக்கப் பட்டவர்கள் கூட மென்மையான இசையைக் கேட்கும்  போது அவர்களிடம் அதிசயி க்கத்தக்க மாறுதல்கள் ஏற்படு கின்றன.

சமீப காலமாக இசையை சிகிச்சை முறையாகப் பயன்படுத்துவ தால் ஏற்படும் பயன்களைப் பற் றி நிறைய ஆய்வுகள் மேற்  கொள்ளப்பட்டு மருத்துவ ரீதி யாகப் பல மருத்துவமனைக ளில் இசைச் சிகிச்சையைப் பரி ந்துரைத்திருக்கிறார்கள்.

வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளுடன் இசைச் சிகிச் சையும் தொடர்ந்து மேற்கொள் ளப்படுவதால், விரைவில் நல் ல  பயன் கிடைக்கிறது. மன அழுத்தமும், உடல் வலியும் குறைவ தோடு ஒரு மகிழ்ச்சியான, அமைதியான, இன்பகரமான  உணர்வுக ளும் ஏற்படு வதால், இசைச் சிகிச்சை நல்ல பலன் தருகிறது.

இந்தியா, கிரீஸ், சீனா முதலிய நாடு களில் கம்பி இசைக் கருவிகளில் ஒலி க்கப்படும் பாடல்களுடன் நோயாளிக ளின் உடலில்  மென் மையான அதிர்வு களை உண்டாக்கி நோயைக் குணப்படு த்தும் ஏற்பாடுகளைச் சில மருத்துவம னைகளில் செய்துள்ளனர். மென்மை யான இசையைக் கேட்கும்போது, நோ யாளியின் உடலில் ஹார்மோன் சுர ப்பிகள் நன்கு வேலை  செய்வதாகவும், நமது மூச்சை, இதயத் துடிப்பைக் கட்டு ப்படுத்தும் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்குவதாகவும் கண்டறிந்து ள்ளனர்.

நமக்குப் பதட்டமாக இருக்கும் போது இந்த ஹார்மோன் சுரப்பிகள் சீராக இயங்குவதில்லை. மெல்லிய இசை அதனை ஒழுங்குபடுத்து வதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்கு கிறது. பதட்டம் குறைந்து நல்ல தூக்கம் வருகிறது.

நோயாளிகளுக்கு மட்டுமின் றி, மருத்துவமனைகளில் ப ணிபுரியும் டாக்டர்கள், நர்சு கள், ஆயாக்கள் இந்த இன்னி சையைக் கேட்கும் போது நோயாளிகளிடம் எரிந்துவிழாமல் மென்மையாக, அமைதி யாக அன்பும், பரிவும் காட்டி நோயாளிகளின் மனம்  குதூகலிக்கும் வித த்தில் நடந்து கொள்கிறார்கள். பணியிடங்களில் இசையைக் கேட் கும் தொழிலாளர்கள் உற்சாகமாக,  சுறுசுறுப்பாக வேலை செய்கி றார்கள்.

மூளையில்  ஏற்படும்  மின் அதிர்வுகள் காரணமாக உடல் இயக்கத் திலும் மாறுபாடு ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளனர். நவீன  வாழ்க் கையில் பதற்றம், பரபரப்பு, கவலை, நோய் என்று அவதிப்படு கிறோம். இதை மாற்ற, மற்ற சிகிச்சைகளுடன் இசைச்  சிகிச்சை யையும் மேற்கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: