Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது.

ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடிப் பார்வதி பரமேஸ் வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனி வர், சிவனை மட்டும் பலமுறை விழுந்து வணங்கினார். அம்பிகை நெரு ங்கி அமர, முனிவரோ வண்டு உருவம் எடுத்து இடையில் புகுந்து சிவ னைமட்டும் வல ம் வந்தார். இதனால் கோபம டைந்த தேவி இதற்கான கார ணத்தை சிவனிடம் வினவி னார். பரமேஸ்வரன், பார்வ தியே! பிருங்கி முனிவன் பா க்கியத்தை விரும் பினவன ல்ல. மோட்சத்தை விரு ம்பி னவன். மவுன நிலை வகித்த பெருந் தவமுடையவன்; காரணப் பொ ருள் ஒன்றேயெனக் கருதுபவன்; மற்றொன்றிருப்பதாகக் கருதாத வன்; ஆதலின் என்னை மாத்திரம் பிரதட்சணம் செய்தான் எனக் கூறியருளினார். அத்தருணம், சென்று கொ ண்டிருந்த முனிவரைப் பார்வதி தேவி அழைத்து, பிருங்கி யே! நான்தான் ஈசனும் சக்தி யாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்ப துதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்த மும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக் தியான எனது அம்சங்களே! தெரியுமா உங்களுக்கு? எனக் கோபமாகச் சொன்னா ள் இறை வி. உடனே முனிவர், தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண் டாம் என்று கூறி விட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உத றி எறிந்தார். சக்தியை இழ ந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடு மாறிய அவருக்கு  சிவ பெருமான் ஓர் ஊன் றுக் கோலை கொடுத்தார். அதன் உதவியோ டு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மன தை வெகுவாகப் பாதித்தது.

பார்வதிதேவி இந்த அவமதிப்பையும் சிவபெருமான் கண்டுகொ ள்ளவில்லையே என்று நினைத்து, கயிலாசத்தை விட்டு பூலோ கத்தை அடைந்து, கவுதமர் என்னும் முனிவரது ஆசிரமத்தில் தங் கினார். பன் னிரண்டு வருடம் மழையின்றி மடிந்தும், ஒடிந்தும், வாடியுமிருந்த ஆசிரமத்து நந்தவனமானது துளிர்த்துத் தழைத்துப் பூத்து பரிமளித்து எங்கும் நறு மணம் வீசி யது. மரங்கள் முதலாயின பூத்துக் காய்த் துப் பொலிந்து அழகுடன் மிளிர்ந்தன. அப் போது தர்ப்பை  முதலியவற்றிற்காக வெ ளியே சென்றிருந்த கவுதம முனிவர்; உமா தேவியார் எழுந் தருளியிருப்பதைத் தெரி ந்து கொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதி சயித்து,  அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடி யிலே எழுந்தருளியிருக்கும் உமா தேவியாரைக் கண்டார். தாயே! கயிலாசத் தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித் தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய் தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்த வமோ? அல்லது இந்த ஆசிர மந்தான் செய்த புண்ணியமோ? என்று கூறி வணங்கி நின்று, ஈஸ்வரியே! நீர் பூலோக த்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? எனக் கேட்டார். பார்வதிதேவி கயிலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். இதையெ ல்லாம் கேட்ட முனிவர் பார்வதியை சிம்மாசனம் ஒன்றின் மீது எழுந்தரு ளச் செய்து, அவளுக்கு வே ண்டும் உபசாரங்கள் செய்து வணங்கி நின் றார்.

இவ்வாறாக பார்வதி தேவி கவுதமரை நோக்கி, தபோதனரே! சிவ பெருமானுக்கு இடது பாகத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு, இப்பூவுலகில் யா ன் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும், மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொ ன்றும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை யும் உரைத்தல் வேண்டும் எனக் கேட்டார். முனிவர், தாயே! பூவுலகில் அனுஷ்டிக் கப்படும் சிறந்த விரதம் ஒன்று ண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர் எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையை யும் கூறினார். இந்த கேதாரீஸ்வரர் விர தம்  புரட்டாசி மாதப் வளர்பிறை அஷ்ட மித் திதியி லிருந்து ஐப்பசி மாதம் தேய் பிறை சதுர்த் தசித் திதி வரையில் அனு ஷ்டிக்கப்படுவது.  அல்லது புரட்டாசி தேய் பிறை பிரதமை முத ல் ஐப்பசி  தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட் களில்  இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும்.  அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய் பிறை சதுர்த் தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக் கப்ப டுவதாகும். விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல்  ஒவ் வொரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி  இரவில் தர்ப் பையில் உறங்க வேண்டும். இறுதி நாளா கிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர் ச்சனை செய்து  முறுக்கு, அதிரசம், வெண் தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொ ட்டு, வா ழைப்பழம் போன்றவ ற்றை 21 என்ற எண் ணிக்கையில் படைத்து  பூஜித்து கேதர நா தரை வணங்கி உபவாசமிருத்தல் வேண் டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடி க்கவே ண்டும் என்று பார்வதியை நோக்கி கவுதமர் பணிவுடன் கூறினார். பார்வதி தேவியும் இத ன்படி விரதமிருந்தார்.

விரதத்தின் 21 வது நாள் சிவபெருமான், சிவ கணங்களோடு கவுரி தேவி யான பார் வதிக்குக் காட்சி தந்தார். கவுதம முனிவ ரை ஆசிர்வ தித்து, தனது மேனியில் பாதியை அன்னைக்கு தந்து  அர்த்தநாரீஸ்வரராகிக் கயிலாயத்திற்கு எழுந்தருளினார். இதன் மூலம் ஆணும், பெண்ணும் சமம் என இந்த உலகுக்கு உணர்த்தி னார். கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனு ஷ்டித்த விரதமே கேதார கவுரி விரத மாகும். கேதார கவுரி விரத மிருக்கும் பெண் களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர் த்தசி நாளில் கும் பம் வைத்து அதை அம் மனாக நினைத்து வழிபட வேண்டும். வெண் மையை கவுவ ர்ணம் என்பர். ஆதியில் பரமசி வத்திலி ருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெ ண்மையாகத் தோன்றி, அண்ட சராசர ங்களையும் உயிர்க ளையும் படைத்து, அவ ற்றுக்கெல்லாம் அரு ள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண் மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கி யதாலும் கவுரி என அழைக்கப் பட்டாள். அரு ணகிரிநாதர் கவுரி தேவியை, உலகு தரு கவுரி எனப் போற் றுகிறார். கவுரிதேவியை வழிபடு வது, அனைத்து தேவ-தேவியரை யும் வழிபடுவதற்குச் சமம்;  கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந் தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் கீழே கொடுக்க ப் பட்டுள்ள 16 (சோடஷ) கவு ரிகளின் திருவடிகளைப் போற்றி, வழிபாடு செய் தால், சகல ஐஸ்வரியங்களும் பெரு கும்.

ஞான கவுரி: ஒரு முறை சக்தி தேவி, உலக உயிர்கள் செயல்படுவது தனது சக்தியால். எனவே, எனது செயலை உயர்ந்தது என்று சிவனாரிடம் வாதிட்டாள். சிவனாரோ, ஒருகனம் உலக உயிர்களின் அறி வை நீக்கி னார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தே வி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உண ர்ந்தவள்., நாயகனைப் பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவி க்கு அறிவின் திற த்தை உணர்த் திய சிவ மூர் த்தியை, கவுரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவ பராக்கிர மம் போற்றுகிறது. இதன் பிற கு, வன்னி மரத்தடியில் அம ர்ந்து தவம் செய்த அம்பி கைக்கு தன் உடலில் பாதி பா கத்தை தந்த ஈசன், அவனை அறிவின் அரசி யாக்கினார். இதனால் ஸ்ரீஞான கவுரி என்ப போற்றப்பட்டாள் அம்பி கை. பிரம் மன் அவளை ஞானஸ்வர கவுரியாக கார்த்திகை மாத வளர் பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட் டான். அந்நாள் ஞான பஞ்சமி, கவுரி பஞ்சமி என்று அழைக் கப்படுகிறது. வீரர்கள் இவளைப் புரட்டாசி வளர்பிறை தசமியில் வழி படுகின்றனர். அந்த நாளே விஜய தசமியாகப் போ ற்றப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றி ருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞான த்தையும் கல்வி யையும் அருள்கின்றாள்.

அமிர்த கௌரி: உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமி ர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவனாரின் தேவியானதால் கவுரிக்கு, அமிர்த கவுரி என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர் ணமி, ஜல ராசி யான கடக மாத த்தில் இவளை வழி படுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமி ர்த விநாயகர் வீற்றிருப்பாள். திரு கடவூர் அபிராமி, அமிர்த கவுரியா னவள். அங்குள்ள ஸ்ரீகள்ளவார ணப் பிள்ளையார் அமுத விநா யகர் ஆ வார்.

சுமித்ரா கவுரி: உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறான். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள் நமக்குக் தெரியும். அவரைப் போன் றே உயிர்களின் உற்ற தோழி யாகத்திகழும் அம்பிகை யை, அன் பாயி சினேகவல்லி என்ப போற்றுகின்றன புராண ங்கள். திரு ஆடானையில் அரு ளும் அம்பிகைக்கு சினேகவ ல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ஸ்ரீசுமித்ரா கவுரி எனப்போற்றுவர். இவ ளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.

சம்பத் கவுரி: வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவி டத்தை சம்பத்துகள் என்பர். அந்தக் கால த்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல் வமாகப் போற்றப்பட்ட ன. அத்தகை ய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ஸ்ரீசம்பத் கவுரி. சம்பத்துகளை உண ர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப் பாள் இந்த தே வி. அவளே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோ மதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெய ர்கள் வழங்க ப்படுகின்றன. திருச்சிக்கு அரு கிலுள்ள துறையூரில் இறைவன், சம் பத் கவுரி உடனாய நந்தீ சுவராகக் கோ யில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் மகாமங்கள கவுரி, சம்பத் கவுரி என்பர். இவ ளுடன் ஐஸ்வர்ய மகா கணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர் பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தான்யம், குழந்தை குட்டிக ளுடன் கூடிய வம்சம், செல்வம் எல் லாம் விருத்தியாகின்றன. வய தான பெரியோர்கள் சுகம் அடை கிறார்கள்.

யோக கவுரி: யோக வித்தையின் தலை வியாக ஸ்ரீமகா கவுரி திகழ்கி றாள். இவளையே ஸ்ரீ யோக கவுரி என் கிறோம். மகா சித்தனாக விள ங்கும் சிவனாருனுடன் அவள் யோகேஸ்வ ரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் சித்த யோகே ஸ்வரி பீடம் என் று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பி கை யை யோகாம்பிகை, யோக கவுரி என்று அழைக்கின்றனர். யோ க கவு ரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை யோக விநாயகர் என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலா தார) விநாயகரை யோக கணபதி என்பர். திருவாரூரிலுள்ள கமா லாம்பிகை யோக கவுரி ஆவாள். அங்குள்ள தியாகராஜரின் ராகசியங்கள், யோக வித்தை எனப்படுகி ன்றன. திருப் பெருந்துறையில் அன்னை யோக கவுரி யோகாம் பிகையாக வீற் றிருக்கிறாள்.

வஜ்ர ச்ருங்கல கவுரி: உறதியான உடலை வஜ்ர தேஹம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் கவுரிதேவி வஜ்ர ச்ருங்கல எனப்போற்றப்படுகிறாள். கரு ட வாகனத்தில் பவனி வரும் இவள் அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகிய வற்றுடன் நீண்ட சங்கி லியை ஏந்திக் காட் சியளிக்கிறாள். ச்ருங்கலம் என்ப தற்கு, சங்கிலி என்பது பொருள். வைர மயமான சங்கிலியைத் தாங்கி இரு ப்பதால். வஜ்ர ச்ருங்கல கவுரி என்ப்ப டுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து நோய் நொடிகள் அணுகாமல் காத்து, அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுட ன் இருப்பது ஸித்தி விநாயகர்.

ஸ்ரீத்ரைலோக்ய மோஹன கவுரி: ஆசைக் கடலில் சிக்கி அவதிப் படாமல் இருக்க, இவைள வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத் தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்கிய மோஹன கணபதி வீற்றிருக்கின்றார். காசியில் நளகூபரேஸ்வ ரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக் ய (மோஹன) கவுரி வீற் றிருக்கிறாள்.

சுயம் கவுரி: சிவனாரை தன் மண மகனாக மன தில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத் தில் அருள் பவள். திருமணத் தடையால் வருந்து ம் பெண்கள் சுயம்வர கவுரியை வழிபட, நல்ல கணவன் வாய்ப்பா ன், ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள் கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்ப டுத்துகின்றன. நல்ல இல்லற த்தை நல்கும் இந்த அம்பி கையை சாவி த்ரி கவுரி என்றும் அழை க்கின்றனர். இந்த தே வியுடன் கல் யாண கணபதி வீற்றிருக்கிறார்.

கஜ கவுரி: பிள்ளையாரை மடி யில் அமர்த்தியபடி அருள் புரியும் தேவி இவள், ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆல யத்தில் சங்கர கவுரி கணபதியின் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங் களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற் பங்களாகவும் ஸ்ரீகஜ கவுரி காட்சி யளிக்கிறாள்.

கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி: நற்பயனா ல் ஒருவன் பெரிய புகழை அடைந்திரு ந்தபோதிலும், அதன் பயனை முழுமை யாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக விஜய கவுரி விளங்குகிறாள். அவளு டைய அருள் இருக்கும் வரையில் அவ னது நற்குணங் களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் வில குவர்.

சத்யவீர கவுரி: நல்ல மனம் படைத்தவ ர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்று வர். அத்தகைய மனப்பாங்கை அருள்ப வள் ஸ்ரீசத்யவீர கவுரி. இந்த தேவியுடன் ஸ்ரீவீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள்-ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.

வரதான கவுரி: கொடை வள்ளல்கள் கரத்தில் ஸ்ரீவரதான கவுரி குடி யிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்க ளைத் தானமாக அளிப்பதால் இவள் ஸ்ரீ வரதான கவுரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர் மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம் வளர்த்தீசுரர் என்று அழைக்கப்ப டுகிறார். காஞ்சியிலும் ஸ்ரீஅறம்வளர்த்தீ சுவரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி -வளர் பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

சுவர்ண கவுரி: ஒரு பிரளய முடிவில் அலை கடலின் நடுவில் ஸ்வர்ண லிங்கம் தோன்றியது, தேவர்கள் யாவரும் பூஜித் தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற் கொடி யாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சுவர்ணவல்லி என்று தேவியை, சுவர் ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். ஸர்ண கவுரியை வழிபடுவதால் தோ ஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடை க்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவ ணி -வளர்பிறை திருதியை நாளில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். எனினும் நடைமுறை யில், கடலரசியான அவளை மாசி மா தத்தில் வழிபடுவதால் பூரண பல னை அடையலாம் என்று அனுபவத் தில் கூறுகி றார்கள்.

சாம்ராஜ்ய மஹாகவுரி மீனாட்சி: அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜ ராஜேஸ்வரியாக வண ங்குவர். இந்த தேவியுடன் ஸ்ரீராஜ கணபதி அருள் புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

அசோக கவுரி: துன்பமற்ற இடமே அசோ கசாலம் எனும் தேவியின் பட் டணமாகும். இங்கு தேவி, ஸ்ரீஅசோக கவுரி என்னும் பெயரில் வீற்றிரு க்கிறாள். சித்திரை-வள ர்பிறை அஷ் டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை, இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற் றிருக்கிறார்.

விஸ்வபுஜா மகாகவுரி: தீவினைப் பய ன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகு தியாக்கி, உயிர்களுக்கு இன்பங் களை அளி க்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண் ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவ ளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திரதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவ்விரத நாட்களில் இருபத்தொரு இ ழையிலாகிய காப்பை ஆண்கள் வலக் கை யிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ளுதல் வேண்டும்.இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வை த்து அதை அம்மனாக நினைத்து பூஜை செய்ய வேண்டும்.  விரத நாட்களில்  உபவாசமிருக்க இய லாதவர் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பிலாப் பணியாரம் சாப்பிட்டு க்கொள்ளலாம்.

விரத பலன் : கேதார கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற் றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வள ங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணை பிரியாது வாழ்வது நிச்சயம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply