Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சில எளிய வழிகள்

நம்முடைய சிந்தனையின் பிரமாண்டம் தான், நமது வெற்றி தோல்வியையே தீர்மானிப்பதா கச் சொல்கிறது ‘The Magic Of Thinking BIG’ என்ற புத்தகம். இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் டேவிட் ஷாவர்ட்ஸ். நமது சிந்த னைதான் செயலைத் தூண்டுகிற து, பெரிய அளவில் சிந்திக்கிற போது, நமது மனம் அகலமாகி றது, செயல்வேகம் உயர்கிறது, எல்லாவிதத்திலும் நாம் முன்னே றுவதற்கான வாய்ப்புகள் அதிகரி க்கின்றன என்று அடித்துச் சொல் கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதை வளர்த்துக்கொள்ள தன்னம்பிக்கை வேண்டும். அத ற்கு சில எளிய வழிகளைச் சொல்லித் தந்திருக்கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதில்,
ஒரு வெள்ளைக் காகிதம் எடு த்துக்கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு கிழியுங்க ள். அந்த கோட்டின் இடதுபக்க த்தில், உங்களுடைய மிகச் சிறந்த ஐந்து குணங்களைப் பட்டியல் போடுங்கள். சான் றாக நான் பொய்யே சொல்ல மாட்டேன், ஒரு வேலையைக் கையில் எடுத்தால் இரவு, பக ல் பார்க்காமல் உழைப்பேன், உங்களுடைய பலங்களை மட்டும் எழுதிக் கொ ள்ளுங்கள். அடுத்து, அதே காகிதத்தின் இன்னொரு பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்த பெரிய வெற்றியாளர்களின் பெயர்களை எழுதுங்கள்.

இவர்கள் உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்க லாம், தூரத்து உறவாக இருக்கலாம், பள் ளியிலோ கல்லூரியிலோ கூடப் படித்தவர்களாக இருக்கலாம், அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருக்கலாம், அல்லது உங்களுக்கு ச் தொடர்பே இல்லாத பிரபல புள் ளியாகக்கூட இருக்கலாம், அவ ர்கள் பெரிய வெற்றியாளர்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டும், அது தான் முக்கியம்.

லிஸ்ட் போட்டாச்சா ? இப்போது, அமைதியான ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் தயாரித்திருக்கும் இரண்டு பட்டி யல்களையும் ஒப்பிடத் தொடங்குங்கள். இதற்கா க, நீங்கள் உங்களுடைய ஸ்பெஷல் குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத் துக் கொள்ள வேண்டும், வலது பக்கம் உள்ள பிரபலங்கள், வெற்றியாள ர்களில் அந்த குறிப்பிட்ட குணம் இல்லாத நபர் களை மட்டும் கண்டுபிடித்து எழுதிக் கொள்ளவே ண்டும். சான்றாக நான் பொய்யே சொல்ல மாட் டேன், ஆனால் எனக்குத் தெரிந்து பெரிய வெற்றி அடைந்திருக்கும் குப்புசாமி, கந்தசாமி, கோவிந்தசாமி மூன்று பேரும் வாயைத் திறந்தாலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகு தான் கொட்டும். அடுத்து, நான் ஒரு வேலையைக் கை யில் எடுத்தால் இரவு, பகல் பார்க்காமல் உழைப்பேன். ஆனால் என்னுடைய மே னேஜருக்கு வேலை செய் வது என்றாலே சோம்பேறி த்தனம், பக்கத்து வீட்டு பர மேஸ்வரனும் அப்படித்தா ன்.
முக்கியமான விசயம், இங்கே உங்களுடைய மேனேஜர் மீது பரமேஸ்வரன் மீது குறை சொல்வது நம்முடைய நோக்கம் இல்லை. உங்களிடம் இருக் கும் ஒரு நல்ல குணம், இன் னொருவரிடம் இல்லை, ஆனாலும், அவர் வெற்றிய டைந்திருக்கி றார், அப்படி யானால், உங்களால் அவ ரைவிட இன்னும் பெரி தாக வளரமுடியும், இல்லையா ? இந்த நம்பிக்கைதான் முக்கி யம். இந்த சிறிய பயிற்சி யைச் செய்து முடித்தபிறகு உங்களுடைய பட்டியலை முன்னால் வைத்துக்கொண்டு யோ சித்துப் பாருங்கள்.

உங்களிடம் ஐந்து விசேஷ குண ங்கள் இருக்கின்றன. அந்தக் குணங்கள் இல்லாத வேறு பலர், பெரிய அளவில் வெற்றி பெற்றி ருக்கிறார்கள், அவர்களோடு ஒப்பிடும்போது இந்த நல்ல குணங்கள் கொண்ட நீங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் அதி கம் இல்லையா? இப்படிக் கண் ணெதிரே ஆதாரத்தை வைத்துக் கொ ண்டு யோசிக்கிறபோது, நம் மனம் தானாக விரிவடைகி றது,  தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள் யாரைச் சந்தித்தா லும், தைரியமாக அவர்களுடை ய கண்களைப் பார்த்துப் பேசு ங்கள். நீங்கள் நடக்கிற வேக த்தை அதிகப்படுத்துங்கள். நடை யில் தெரியும் அந்தச் சுறுசுறுப்பு, உற்சாகம் உங்களுடைய செயல் வேகத்தையும் தானாக அதிகரி க்கும்.

எந்தக் கூட்டத்திலும், அடுத்தவர்கள் பேசட்டும் என்ற காத்திரு க்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாக இருக்கட்டும். எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வை த்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: