Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாட

1. தரமற்ற, போலியான பட்டாசுகள், நீங்கள் பற்ற வைத்தவு டனேயே வெடித்து பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

2. நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல, நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக் கூடிய முதலுதவி மருந்தும் தண்ணீர்தான். ஒரு பக்கெட் தண் ணீரையாவது அருகாமையில் வைத்துக் கொள்ளுங்கள், பட்டாசு வெடிக்கும்போது.

3. பட்டாசு வெடிக்கும் குழந் தைகள் மற்றும் அவர்களை கண்காணி ப்பவர்கள்… கட் டாயம் காலணி அல்லது ஷூ அணிய வேண்டும்.

4. எதிர்பாராதவிதமாக தீக்கா யம் ஏற்பட்டால், பாதிக்கப் பட்ட பகுதி யை உடனடியாக தண்ணீரில் நனைக்க வேண் டும். அப்போதுதான் எரிச்சல் அடங்கி, வலி குறையும். திசுக்கள் பாதிக்கப்படுவதும் குறையும். காயத்தைச் சுத்தமான துணி கொ ண்டு மூட வேண்டும். பிறகு மருந்துவரிடம் செல்ல வேண்டும். அதே சமயம், கண்களில் காயம் ஏற்பட்டால், தண்ணீர் விட்டுக் கழிவக் கூடாது. சுத்தமான துணி கொண்டு மூடியபடியே மருத்துவ ரிடம் செல்ல வேண்டும்.

5. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ராக்கெட் வெடித்தபோது ஒரு குழந் தையின் கண்ணை, கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத்துக ளோ தாக்கிவிட்டது. ஆனால், கண்ணிலிருந்து ரத்தம் ஏதும் வர வில்லை. வலியும் உடனே போய்விட்டது. இத்தகைய சூழலில் நாம் செய்ய வே ண்டியது என்ன?. உடனடியாக கண் மரு த்துவரின் கவனி்பபு வழங்கப்படாவிட்டா ல், முழுமையான பார்வையிழப்பு உள் ளிட்ட மோசமான விளைவுகள் ஏறபட லாம். கண்ணைக் கசக்கினால் ரத்தம் அதி கமாக வெளியேறலாம். காயத்தின் வீரிய மும் அதிகரிக்கலாம். எனவே கண்ணைச் சுற்றி பாதுகாப்பாகக பேப்பர் கப் ஒன்றி னை வைத்து டேப்பினால் ஒட்டியோ… அல்லது பாதுகாப்புக்கான பேட்ச் அணிவி த்தோ அழைத்துச் செல்லலாம்.

6. வலி நிவாரணியாக எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது. சில வகை மருந்துகள் ரத்தம் கசி வதை அதிகப்படுத்தக் கூடும்.

7. தீக்காயம் ஏற்பட்டவுடன் மஞ் சள்தூள், பேனா மை, பக்கத்து வீட்டார் சொல்லும் ஆயின்மெ ன்ட் போன்றவற்றை போடக் கூ டாது. அப்படி செய்தால்.. எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள் ளது என்று கண்டுபிடிப்பதற்கு சிரமம்.

We are wishing a wonderful

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: