முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்பு கள் அலாதியா னது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக் கூடிய சக்தி முரு ங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாது காக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும். மொத்த த்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந் தாகப் பயன் படுகிறது.
உடல்சூடு தணிய
சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இரு க்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல காணப்படு ம். அத் தகையவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களைச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொ திக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க் கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.
விந்து விருத்தியடையும்
ஒரு பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தமாக ஆய்ந்து அலம்பி, பசும்பாலில் போட்டுக் காய்ச் சி கற்கண்டு தூள் போட்டுக் கலக்கி மாலை 6 மணிக்கு சாப்பிட்டால் உடல் வலுப்பெறும் தாது விருத்தியாகும். முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சையும், தோலுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வெப்பம் தவிர்த்து ஆண் மை பெருகும்.
வீக்கத்தை கட்டுப்படுத்த
முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போடலாம். ஆஸ்து மாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று விழுங்கலாம்.
கண் வலிக்கு
இரவு நேரத்தில் முருங்கைப் பூவை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சா றை 2 துளிகள் வீதம் கண்களில் விட கண் வலிகள் நீங்கும். விரை வீக்கம் சுருங்க முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டினால் நீர் வற்றி சுருங் கி விடும்.
வயிற்று வலிக்கு
பிரண்டை, முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன் றையும் வகைக்குக் கைப்பிடியளவு எடுத்து மூன்றையும் ஆவியில் வேக வைத்து அம்மியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்து விட்டால் வயிற்றுவலி நின்றுவிடும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
மிக்க நண்றி முருங்கை பூக்களை அதன் தண்மை நான் அறிந்து கொண்டற்க்கு மிக்க. நண்றி.