கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில், முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அணு உலைகள் எதி ர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதி ர்ப்பு தெரிவித்து, அதன் கடற்கரையோர கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகி ன்றனர்.
இடிந்தகரையில் 3-வது கட்டமாக ஒவ்வொரு கிராம மக்களும் ஒவ்வொரு நாள் உண்ணாவிரதம் இருந்து வருகி ன்றனர். 9-வது நாளை எட்டியுள்ள இந்த உண்ணாவிரதப் போராட் டத்தில் ஆயிரக் கணக்கானோர் தினமும் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மத்தியில் அணுமின் நிலைய எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசுகையில், “முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் வாழ்நாள் முழுவதும் இந்திய அரசு சார்ந்த விஞ்ஞானி.
இந்திய – அமெரிக்க அணு ஒப்பந் தத்தின்போது, கம்யூனிஸ்டுகள் மன் மோகன் சிங் அரசுக்கு கொடு த்த ஆதரவை வாபஸ் வாங்கினர். அப்போது மன்மோகன் சிங் அரசு கவிழாமல் இருப்பதற்காக அமர் சிங், முலாயம்சிங் ஆகியோரி டம் பேசி சமரசத்துக்கு ஏற்பா டு செய்த வர் அப்துல் கலாம்.
அவர் இன்று கூடங்குளம் வந் து ஆய்வு செய்தால், அவரது முடிவு அரசு சார்ந்த முடிவாக இருக்கும். எனவே அவர் கூட ங்குளம் வந்து ஆய்வு செய்வத ற்கு நாங்கள் அனுமதிக்க மாட் டோம். அவர் ஆய்வு செய்வ தை ஏற்றுக் கொள்ள முடியாது,’ என்றார் உதயகுமார்.
news in vikatan
boonaikutti veliya vanthurichu…..