கவலை எப்போது தோன்றும், கவலைகளுக்கான காரணங்கள் என் னென்ன, எதிர்பார்த்தது நடக்காத போது, பிரியமானவர்கள் பிரியும் போது, யாரா வது திட்டும்போது இப்படி குறிப்பிட்ட விஷயங்களு க்கு மட்டுமா கவலை ஏற் படுகிறது, இல்லை எண்ண முடியாத கார ணங்களைக் கொண்டு புதுபுது வடிவில் எதிர்பாராத விதமாக கவலைகள் வந்து கொண்டே இருக்கும். கவலைகளுக்கான கார ணத்தை பட்டியலிட்டு முடிக்கவே முடியாது.
இந்த கவலைகளை மறக்க எதாவது மரு ந்து இருக்கிறதா! தலைக்கு சிறிது போ தையை ஏற்றிப் பார்க்கலாமா! தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பார்க்கலாமா! இல்லை கூட்டத்தோடு கூட் டமாக ஒரு சினிமாவை பார்க்கலாமா! என்ன செய்ய? என்ன செய் தால் கவலையை மறக்க முடியும், எல்லாவற்றையும் செய்து பார் த்தேன் கொஞ்சம் நேரம் ஓடி மறைந்தவன் மீண்டும் வந்து விடு கிறானே..
கவலை என்பது எல்லோருடைய வாழ்விலும் தவிர்க்க முடியாத
ஒன்றாக வருகிறது, எந்த கவலையும் சாக வைக்குமே தவிர வாழ வைக்காது, வேண் டாதவர்களை புறக்கணித்து தள்ளுவதை போல கவலைகளையும் புறக்கணித்து விட வே ண்டும்.
ஒவ்வொரு முறையும் விஷ செடியைபோ ல கவலை முளைத்துக் கொண்டிருக்கும், அது முளைப்பதை சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் போக லாம், தவிர்க்க முடியவில்லை என்றாலும் பரவா யில்லை அதை முளையிலேயே கிள்ளி வைத்து விட வேண்டும், இல்லையென் றால் நம்மை உயிரோடு வைத்து எரித்துக் கொண்டி ருக்கும்.
சந்தோஷமான நல்ல விஷயங்களில் நாம் புகுந்து கொண்டால் நம்
மில் உருவாகும் மகிழ்ச்சி அ லைகள் கவலையை அழித் து விடும், இருட்டை ஒளியா ல் நீக்குவதை போல கவ லையை மகிழ்ச்சியால் நீக்க வேண்டும். வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்று எண்ணு வதை விட, இனி நா ளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டு ம், உறுதியான நம்பிக்கையும், எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்கு வமும் இருந்தால் ஏன் கவலை வரப் போகிறது.
வீடு, வாசல், சொத்து, சுகம் என்று மண்ணில் எல்லாம் கவலையை
யே தருகிறது, மாளிகையை மண் ணில் கட்டினால் கவலை வரலா ம், மனதில் கட்டினால் கவலை வருமா! கவலை, மகிழ்ச்சி என்ற இரண்டு வகை மண்ணும் மனதில் தான் இருக்கிறது இதில் எந்த மண் ணை எடுத்து எப்படி வடிவமைக்கி றோமோ அப்படிதான் வாழ்க்கை யும் அமையும், இதில் மகிழ்ச்சி யோடு கவலைகளையும் சரியாக எடுத்து வடிவமைத்தால் கவலை கள் கூட கைகொடுக்கும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன்
கவலைகள் பற்றி உங்கள் நண்பன் விதை2விருட்சம் ராசகவி ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான் எழுதிய கவிதை (இந்த வரியினை கிளிக் செய்க)