பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர் களா?
இதற்காக நீங்கள் Google Chrome உலாவியைப் பயன்படுத்த வேண்டு ம். முதலில் நீங்கள் Chrome உலாவி யில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chrome உலாவியின் நீட்சியை நிறு விக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்கள் படத்துக்கான URL ஐக் கொடுக்கவும்.(நீங்கள் தெரிவுசெய்யும் படமானது கண்டிப்பாக ஏதும் இணையத்திலிருந்து இணைப்பு காட்டப்பட்டிருத்தல் வேண் டும் (URL). அதாவது உங்கள் கணணியில் இருந்து நேரடியாக பதி வேற்றம் செய்ய முடியாது).
இப்பொழுது உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் பேஸ்புக்கின் லொ கின் முகப்புப்பக்கமானது மாறியிருப்பதைக் காணலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்