Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போலி மின்ன‍ஞ்சல் முகவரிகளை அடையாளம் காண உதவும் தளம்

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப் பினார்கள் என்றே தெரியா மல் வந்திருப்பதை க‌வனித் திருப்பீர் கள்.

அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வ தே இல்லை. ஆனால் அப்படி யான மின்னஞ்சல்கள் ஆப த்து நிறைந்தவை. அவற் றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும்.

இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவா ர்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்ன ஞ்சல் களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன.

Phissing எனப்படும் முறையை பயன்ப டுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்களில் இருந்து தப்பி விடுகி ன்றன. கடந்த சில மாதங்களாக இவ்வாறான Phissing மின்னஞ்ச ல்கள் பரவலாக எல்லோருக்கும் வரத்தொடங்கியுள்ளன.

ஆகவே அடையாளம் தெரியாமல் வரும் மின்னஞ்சல்களை திறக் காமல் இருப்பதுதான் பாதுகாப்பு. அப்படி இல் லை கட்டாயம் திறந் து பார்க்க வேண்டும் என் றால் இருக்கவே இருக்கி றது ஒரு வழி

உங்களுக்கு வரும் மின் னஞ்சலின் முகவரியை tools.email-checker.com/ தளத்தில் கொ டுத்தால் அது பற்றிய சகல விபரமும் கொடுக்கிறார்கள்.

அது போலியாக இருந்தால் சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டு காட் டும். அருகில் உள்ள info என்பதை கிளிக் செய்தால் அந்த மின்னஞ் சல் முகவரி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள லாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply