பரதநாட்டியம் என்ற கலை அடையாளப் படுத்துவது அது தரித்திருக் கும் ஆடைக ளையும், அணி கலன்களையும் சார்ந்தது என்று சொன்னால், அதை மறுப்பவர் யாரு மில்லை. அந்த கலையை சுவாசிப் பவர்க ளும், ரசிப்ப வர்களும் பெருகிவருவதற்கு இந்த தோற்ற பொலிவு கூட ஒரு காரணம் என்று கூறலாம். ஒரு கலைஞரின் பார்வை யிலும்,பார்வையாளர்களின் கோணத்திலு ம் பரதம் என்ற கலை மனதில் பதிந்திரு ப்பது ஒப்பனை, விசேட அணிகலன் மற் றும் ஆடை கலந்த கலவை யாகத்தான்.
“”ஒரு கலை, எந்தவித தொழில் நுட்ப உத வியும் இல்லாமல், இசைக்கலைஞர் களை மட்டும் உதவிக்கரமாக கொண்டு செயல் பட்டு, பார்வையாளர்க ளையும், தன்னையும் இன்றளவிலும் கவர்ந் திருக்கிறது என்றால் அது பரதநாட்டியம் என்ற கலையாக மட்டும் தான் இருக்கும்” இது பரதம் பற்றி பிரான்சு நாட்டு இதழ் வெளி யிட்ட குறிப்பு. இதை இங்கே குறிப்பிட வேண் டியதன் அவசியம் என்னவெனில், பரதக் கலை யை ஜீவன் குறையாமல் வைத் திருக்கச் செய் யும் சிலவற்றைப் பற்றி கூறு வதற்காகத் தான். நாட்டிய கலைஞருக்கு ஆடை, சலங் கை, ஆபரணங்கள், ஒப்பனை ஆகி யவற்றில் தற்போது மற்றவர்கள் உதவி செய்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இவை யெல்லா வற்றை யும் நாட்டியம் கற்பிக்கும் குருக்களே கவனி த்துக் கொண்ட னர். ஆனால் தற்போது இதற் கென்று பல தனியார் நிறு வனங்கள் செயல் படுகின்றன. அதே போல். நாட்டியத்தில் பயன் படுத்தப்படும் தாளம், தாள க்கட்டை ஆகியவ ற்றையும் தற்போது சில தனியார் நிறுவன ங்களே அமைத்து தரு கின்றன.
சலங்கையை பொறுத்தவரை பழங்காலத்தில் கும்பகோணம் பகுதி யில் தயாராகி வந்ததைத் தான் அனைத்துக் கலைஞர்களும் பயன் படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது குஜராத் மாநிலத்தில் தயாராகி வரும் எடை குறைந்த சலங்கையை தான் அனைத்துக் கலைஞர்க ளும் பயன்படுத்தி வருகின்ற னர்.
அதேபோல் ஆடையிலும் தற் போது பல வண்ணங்கள் கல ந்ததையும், விசேடமாக வடிவமைக்கப் பட்டதையும் அணிகிறா ர்கள், ஆனால் யாரும் இந்த விசிறி மடிப்பை அவ்வளவாக விரும்பு வதில்லை. இருந்தாலும் பார ம்பரியம் கருதி இதனை போ ற்றி பாது காத்து வருகின்ற னர். தாளத்திலும் தற்போது எடை குறை வான தையே ஜதி சொல்பவர் ளும், நட்டு வானர்களும் விரும்புகின்ற னர். அணிகலன்கள் அணிவ திலும் இதே நிலைதான் நீடி க்கிறது. எடை குறைவாகவு ம், தங்க முலாம் பூசப்பட்டதையும் தான் விரும்புகின்றனர். ஒரு சிலரே வைரம் பதித்த தங்க நகைகளை விசேடமாக வடிவமைத்து
அணிகின்றனர்.
ஆடை,அணிகலன், தாளம் உள் ளிட்ட பரதநாட்டியத்திற்கு தே வைப் படும் அனைத்திலும் பாரம்பரிய அடையாளத்தை மீறாமல் புதுமை புகுத்தப் பட்டு வருவதை அனைவரும் வரவேற்க தொடங்கியிருப்ப து சிறந்த மாற்றத் திற்கான அடையளங்கள் என்று இத்து றை வல்லுநர்கள் தெரிவிப்பதை நா மும் ஆமோதிப்போம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்