மூணாறில் ஷியாமளா என்ற பெண் கணவரால் கொலை செய்யப்ப ட்ட சம்பவம் வழக்கமான சந் தேகக் கொலைகளை விட அதிக அதிர்வுகளை ஏற்படுத் தியுள்ளது. தவறு கணவரி டமா, மனைவியிடமா என் பது விசாரணைக்குரிய கேள் வி. ஆனால் இதில் மனைவி யின் மரணமும் கணவனின் தற்கொலையும் உணர்த்தும் ஒரு கசப்பான உண்மை…பல குடும்பங்களின் அமைதியை செல்போன் அழித்துக் கொண்டி ருக்கிறது.
வரமாக மட்டும் அமைய வேண்டிய செல்போன் சில பெண்களுக்கு சாபமாகிவிடுவது ஏன்?
சென்னையைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவி லாவண்யா. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). படிப்புக்காகவும் அரட்டைக்காகவும் அவளது செல்போன் எப்போதும் சிணுங்கிக் கொண்டே யிருக்கும். திடீரென அவளுக்கு ஒரு எஸ்.எம். எஸ். வந்தது. போகப் போக அவளது வயது க்கு மிக அதிகமான வார்த்தைகளும் வந்து விழுந்தன. லாவண்யா வுக்கு அது புது அனுபவம். ஒரு நள்ளிரவில் அந்த எண்ணிடமிரு ந்து போன் வந்தபோது தான் லாவண்யா அதிர் ந்துவிட்டாள். கொஞ்சல் எஸ்.எம்.எஸ்.கள் மிரட் டல் போன்கால்களாக மாறின. பெற்றோரிடம் விஷயம் போய், ஒரு வழக்கறிஞரின் துணை யுடன், செல்போன் பார் ட்டியைக் கண்டுபிடித்தார்கள். அவன் லாவண்யா வுக்கு எப்போதோ அறிமுகமாகி, ஒரே ‘ஹாய்’ ஒரே ‘பை’ யோடு மறக்கப்பட்டவன்.
சென்னையைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர் புவனா. இவரது மகன் கல்லூரியில் படிக்கிறான். தன் வயதைச் சொல்லி புவனா கெ ஞ்சினாலும், செல்போன் பார் ட்டி விடவில்லை. ஆபாசம் சொட்டும் எஸ்.எம்.எஸ். போன் கால் என அவனது அராஜகம் தொடர்ந்தது. கடைசியில் புவ னா எட்டு வருடமாகப் பயன் படுத்திய தனது சிம் கார்டைக் கழற்றி வீசிய பிறகுதான் அந்த டார்ச்சரிடமிருந்து விடுத லை கிடைத்தது.
பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ செல்போன் வக்கிரர்களி
டம் சிக்கிக்கொள்வது ஏன்? “நம்மோட மூளைல புரோக்கோசீடியா ங்கிற மையம் இருக்கு. மொழியை உள் வா ங்கிக்கொள்வது இந்தப் பகுதிதான். இது ஆண்களைவிட, பெண்களுக்குப் பெரி யது. யாரா வது தங்களிடம் பேசிட்டே இருக்கணும்னு பெண்கள் எதிர் பார்க்க இதுதான் காரணம். வக்கிர ஆண்கள் இதைத் தங்களுக்குச் சாதகமா பயன் படுத்திக்குறாங்க. செக்ஸ் தேவை கண வர் மூலமாக நிறை வேறாதபோது, பெண்கள் எதிராளியின் ஆசைக்கு இண ங்க வும் நேரலாம். போனில் நேரம் கா லம் பார்க்காம பெண்கள்ட்ட பேச முடி கிற ஆண்கள் பெரும் பாலும் சராசரி மனி தர்களா இருக்க வாய் ப்பு இல்லை. செக்ஸ் பற்றிய அவங்களோட கண்ணோட்டம் வழக் கத்தை விட ஏதோ மாறுபட்டதாவே இருக்கும்’’ என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
இந்தியன் சைபர் சொசைட்டியின் தலைவர் ‘ப்ரைம் பாயிண்ட்’ சீனிவாசனிடம் கேட்டோம். “பல சமயங்களில் செல்போன் டார்ச்ச ரின் பின்னணியை ஆராய்ஞ்சு பார் த்தால், பெண்களுக்கு நன்கு அறிமு கமானவங்களே காரணமா இருக்கா ங்க. செல்போன் நம்பர், மெயில் ஐடி பாஸ்வேர்டுன்னு பல பெண்கள் நண் பர்களிடம் தயக்கம் இல்லாம பகி ர்ந்துக்குறாங்க. அவங்களுக்கு நடு வில் பிரச்னை வர்றப்போ, பச ங்க இதையே ஆயுதமா பயன்படுத்திடு றாங்க. செல்போன் குற்றங்களுக் காக ஒருவருக்கு ஐந்து வருஷம் வரைக்கும் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு’’ என்கிறார் சீனிவாசன்.
செல்போன் டார்ச்சரை அனுபவிக்கும் பெண்களுக்கு நடைமுறை யில் பாதுகாப்பு எப்படி?
”செல்போன் விஷமிகளிடம் சிக்கிக் கிட்ட பெண்கள் அதைக் கணவர்கிட்ட சொல்ல முடியாது. ‘உனக்கும் அவனு க்கும் என்ன சம்பந்தம்?’ன்னு கணவர் சந்தேகப்படுவார். குடும்பத்துல குழப்ப ம் உண்டாகும். இது குற்றவாளிகளு க்குச் சாதகமாகிடுது. போலீஸிடம் போனால், விசாரணை நடவடிக்கைகள் பெண்களுக்கு தர்ம சங்கடமாவே இருக் கும்ங்கிறதுதான் யதார்த்தம். குற்றப் பத்திரிகை தாக்கல் பண்றப்போகூட புகாரை வாபஸ் வாங்குற பெண்களும் உண்டு. இந்தப் புகார்களுக்காகவே கா வல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த ப்படணும். பெண் போலீஸே இதில் பொறுப்பு வகிக் கணும். குற்ற வாளிகளின் செல்போன் நம்பரை ரத்து பண்றதும் தண்டனை யில் ஒரு பகுதியா இருக்கணும். ஏதோ ஒரு முகவரிச் சான்று காட் டுனா, உடனே சிம் கார்டு தரப்படுற நிலைமையை மாத்தணும். அதுவரை செல்போன் டார்ச்சர் ஆசாமிகள் அட்ட காசம் செஞ்சி
ட்டுதான் இரு ப்பாங்க’’ என்கிறார் பிரபல வழக்கறிஞர் ராஜா செந்தூர் பா ண்டி.
செல்போன் பேச்சை பெரிய பொழுதுபோக்காகக் கருதும் பெண்கள் யோசிப்பார்களா?.
தப்பிப்பது எப்படி?
அவசியமின்றி யாருக்கும் செல் போன் நம்பர் கொடுக்காதீர்கள். பொது இடங்களில் நீட்டப்படும் வருகைப்பதிவேடுகளில் உங்கள் கணவர் அல்லது தந்தை நம்பரை ப் பதிவு செய்யுங்கள். அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்கவும். கடலைபோடும் ஆசாமிகளை கறா ராகத் தவிருங்கள். நன்றாகப் பேசுபவர் எல்லாம் நல்லவர் என நம்பாதீர்கள். வீட்டிலேயே இருக்கும் பெண்கள் ஆக்கபூர்வமான காரியங்களில் ஆர்வத்தை வளர் த்துக்கொள்ள வேண்டும். எத்தனை வேலைகள் இருந்தாலும், கணவர் மனைவியிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்