Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (30/11)

அன்புடையீர் —
நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவன். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். எவரிடமும் இது போல் ஆலோசனை கேட்டதில்லை. தங் களிடமே முதல் முறையாய் கேட்கிறேன்.

ஒரு திரைக்கதை போலவே அமைத்துள்ளது என் வாழ்க்கை!

என் வயது 27. கல்வியில் அவ்வளவாக உயர்வில்லை. தற்சமயம், ஒரு நிறுவனத்தி ல் பணிபுரிகிறேன். நான் ஒரு கற்பனைவாதி. சினிமா ஆர்வ த்தால் இவ்விதமா என புரி யவில்லை. ஒரு வகையில், “ஒரு கல்லூரியின் கதை’ ஆர் யாவின் கதாபாத்திரம் என்றே கூறலாம்.

அந்நிறுவனத்தில், 20 வயதி லேயே பணியில் அமர்ந்து விட்டேன். ஒரு கல்லூரியின் வனப்பை ஈடாய் கொண்டிருந் தது, அங்கிருந்த என் நண்பர் கள் வட்டாராம். வாழ்வில் மறக்க இயலாத வடுக்களின் அர்த்தமறியாத அவ்வயதின் இலக்கணமாய் மாறியிருந்தேன். அத்தருணங்களில் அங்கு என்னுடன் பணிபுரிந்த பெண்ணோடு என்னை ஒப்பிட்டு பேச ஆரம்பித் தனர் என் நண்பர்கள். அப்போது, என் வயது, 22. இவ்வயது வெறும் இனக் கவர்ச்சி என்பதை அறியாமலிருந்தேன். இருப்பினும், பெண்களோடு பழகுவது எனக்கு இயல்பாய் அமையவில்லை; அதற்கு, எனக்கிருக்கும் கூச்சத் தன்மையே காரணம். அவ்வளவாக பெண்களிடம் பேச்சுகளைத் தொ டுக்க விரும்பியதில்லை. இரண்டு வருடமாய் இப்பெண் என்னுடன் பணி புரிந்தும், அச்சமயம் வராத உணர்வுகள் தற்போது ஏனோ என்று புலம்பிய துண்டு. ஆம்… இன்று வரையும் அப்பெண்ணுடன் பேசிய வார்த்தைகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டாது.

அவளிடம் நான் இவ்வாறு என்பதை நண்பர்கள் விளையாட்டாக கூற, அன்றிலிருந்து அவளும் என்னை எதிர்நோக்க ஆரம்பித்தாள். அவளும் பேசாமல், நானும் கூச்சமின்மையால் பேச தவறியது, இன்று, “சுப்ரமணி யபுரம்’ பாடல் காட்சியும், “ஒரு தலைராகம்’ படமுமே ஞாபகத்தில்!

தற்போது வெளியான பாடலொன்று, பாஸ் (எ) பாஸ்கரன் திரைப்படத் திலிருந்து, “நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்… பார்க் காத நேரம் என்னைப் பார்ப்பாள்…’ அந்த உணர்வுப் பரிமாற்றங்கள் இன் னும் ஈரமாய்… பேசிக் கொள்ளாத உணர்வுகளைப் பற்றி அவளின் தோழி மூலம் அவள் வீட்டாருக்கு தெரிய, அவரது அம்மா புறப்பட்டு என் முக வரி அறிந்து வீட்டுக்கே வந்து விட்டார். அன்று காலை, 6:00 மணி. அவரின் அறிமுகத்திற்குப்பின் என் அப்பாவிடம் பேசினார். உறங்கிக் கொண்டிருந்த நான் சற்று விழித்தவனாய்!

“என் பொண்ணுக்கு மாப்பிள் ளை பார்க்க ஆரம்பிச்சாச்சு ங்க. கட்டிக் கொடுத்தா சொந் தக்காரங்களுக்கு மட்டும் தான். சத்தியமா இந்த கோ வை பக்கமா இல்ல…’ன்னு கூறிய அவரின் வார்த்தைக ளுக்கு, என் அப்பா, “எனக்கு ன்னு கவுரவம் இருக்கு; கெடுத்திராதே…’ன்னு கூற, சரி யென்று முடி வாக்கி, அதன் பிறகு சந்தித்து பேசி, ஓரிரு நிகழ்வுகளிலேயே, “மன தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்…’ என்று கூறி, அந்நிறுவனத்தை விட்டு விலகி, வேறொரு நிறுவனத் தில் வேலைக்கு அமர்ந்து விட்டேன். இப்ப டியே நாட்கள் செல்ல, 25 வயது வரை, மூன்று வருட இடைவெளியில் முதல், ஆறு மாத காலத்தில் அவ்வப்போது போன் செய்வாள்.

அவள் ஏதாவது கேட்க, “முயற்சி செய்…’ என்று சொல்வதைத் தவிர, வேறெந்த விதத்திலும் அறிவுறுத்த இயலவில்லை. அவள் அன்பளிப்பாக பரிசுப் பொருட்களை தோழிகளிடம் கொடுத்தனுப்புவாள்; அதையும் நான் வாங்க மறுக்கவே, அத்தொடர்பும் முறிந்தது. நானும் இன்று வரையும் எதையும் அன்பளிக்கவில்லை, ஒருவேளை என் நினைவுகள் அவைக ளை தீண்டக் கூடுமென்று!

இந்த இடைவெளியில் சிலரின் கடன் தொகைக்காக சிபாரிசு செய்ததில், அவர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாகி விட்டேன். சில நண்பர்கள் பணி முடிந்து மதுக்கடைக்கு செல்வது வழக்கமாகியிருந்தது.

அவர்களுடன் இதர வகைகளை சாப்பிட்டவாறு வந்து கொண்டிருந்தேன். அன்று ஒருநாள் அவர்களுடன் வழக்கமாய் செல்ல, என் நண்பரின் கையி லிருந்த டம்ளரை பிடுங்கி குடித்து விட்டேன். அவர்கள் கோபத்துடன், “உன்னோடது நல்ல குடும்பம், பெயரை கெடுத்துக்காதே…’ன்னு அட்வை ஸ் செய்தாங்க. அவர்களிலிருந்து விலகி, தனியாக ஆரம்பித்து மெது, மெதுவாய் முன்னேறி, 25 வயதிலேயே குடிபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்வதையும் தவிர்த்து விட்டேன். பலமுறை சாலையோர ங்கள், மதுபானக் கடையென்று வீடு வரை போதை நடமாட்டம் அதி கரித்து, என் பெற்றோரை அதிர்ச்சியாக்கி இருந்தது என் நடைமுறைகள். கடன், காதல் இவைகளோடு போதையும் நண்பனாக இருந்தது.

ஒரு நாள், என் வீட்டின் உள்ளறையில் அமர்ந்திருந்தேன். வெளியில் என் வீட்டார் ஏதோ ஏலச் சீட்டுக்கு பணத்தை புரட்ட புலம்பிக் கொண்டிரு ந்தனர். ஏதோ செய்யலாம் என்று, என் அப்பாவின் குரல் தழுதழுத்தது. சற் று யோசித்தவனாய் வேலையில் அமர முடிவெடுத்தேன். உதாரணமாய், “முகவரி’ படத்தின் கிளைமாக்ஸ் போலிருந்தது. அன்றிலிருந்து, ஆறு மாத காலமாய் வேலையில் அமர்ந்து, இன்று வரையும் எவ்வித சல னமில்லாத பயணிப்பில், 10 நாட்களுக்கு முன்னதாக மொபைல் போனு க்கு ஒரு மெசேஜ், “மறக்க நினைக்காதே…’ என்று. அந்த நம்பரை வேறொ ருவரிடம் கொடுத்து விசாரித்ததில், அது அவளுடையது. அவளுக்கு இன் னும் திருமணம் ஆகவில்லை. இன்னும் ஒரு மாத காலத்தில், திருமணம் முடியப் போகிறது என்று அறிந்தேன். அவள் மறந்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னில் இப்படியொரு இடிமழை. இத்தருணம் நான் என்னதான் செய்ய! தக்க தீர்வை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

அன்புள்ள மகனுக்கு —
நிறைய தமிழ் சினிமாக்கள் பார்த்திருக்கிறாய்; நிறைய காதல் நாவல்கள் வாசித்திருக்கிறாய். ஏ 4 சீட்டில் மார்ஜின் விட்டு, கறுப்பு நிற இங்க் பேனா வால் கடிதம் எழுதியிருக்கிறாய். கடிதம் கவிதைத்தனமாக இருக்க வே ண்டுமென்று முயற்சித்திருக்கிறாய். சிறுகதையின் முடிவில், ஒரு திரு ப்பம் வருவது போல, உன் கடித முடிவில் ஒரு ட்விஸ்ட் கொடுத்து, என்ன செய்யலாம் என கேட்டிருக்கிறாய்.

முதலில் உன்னைப் பற்றி ஜோசியம் சொல்லி விடுகிறேன்.

நீ ஒரு கற்பனாவாதி. அனைவருக்கும் சோகம், துக்கம், பிரச்னைகள் பிடிக்காது; உனக்கோ அவை தேவை. பெண்களின் மீது உனக்கு ஆர்வம் அதிகம்; ஆனால், “சீச்சீ… அந்தப்பழம் புளிக்கும்…’ என்பாய். உன் சினிமா ஆசை, யதார்த்த வாழ்க்கையை சீர்குலைக்கிறது. நீ ஆலோசனை கேட் பது கூட, பிரச்னைக்கு மருந்தாய் இல்லாமல், மகாராஜா, புலவருக்கு தரும் முத்துமாலை பாவனையில் இருக்கிறது. எந்த சினிமா பார்த்தா லும், அந்த சினிமாவின் ஹீரோவோடு உன்னை ஒப்பிட்டு, வேண்டாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்.

நீ ஒரு பெண்ணை காதலித்தாய். அவளின் தாயோ உங்களது காதலுக்கு பச்சை கொடி காட்டவில்லை. நீ வேறொரு வேலைக்கு போனாய். உன் னுடன் தொடர்ந்து பழக முயற்சித்த காதலியை புறக்கணித்தாய். தொட ர்பு அறவே முறிந்தது. கடனாளியானாய், குடிகாரனானாய், வேலையை இழந்தாய். ஏலச்சீட்டுக்கு பணம் புரட்ட உன் தந்தை சொன்ன, இரட்டை வார்த்தை உன்னை உசுப்பியது. குடிப்பழக்கத்தை உதறி, ஆறு மாதங்களா ய் வேலைக்கு போய் கொண்டிருக்கிறாய். வேறு எவனுடனோ மண மாகப் போகும் உன் காதலி, “மறக்க நினைக்காதே…’ என குறுந்தகவல் அனுப்பி இருக்கிறாள். மீண்டும் அவளை நினைத்து வேலையை உதறி, குடியில் மூழ்குவதா அல்லது நினைப்பை உதறி, வேலையை தொடர் வதா என கேட்காமல் கேட்டிருக்கிறாய்.

நீ கடிதத்தில் சொன்ன நான்கு படங்களுமே, தமிழ் இளைஞர்களுக்கு நெகடிவ் சிந்தனையை வளர்க்கும் படங்கள்.

உங்களிருவரின் காதல் ஒன்றும் ஏகப்பட்ட சம்பவங்கள் கோர்க்கப்பட்ட மணிமாலை அல்ல; கண்ணாடி சீசாவின் அடியில் கிடக்கும் முந்திரி பருப்பு.

அவள் உன்னிடம் போனில் பேசியதையும், பரிசு பொருட்கள் அனுப்பிய தையும் நீ சிறிதும் ரசிக்கவில்லை. “போயும் போயும் இவனைப் போய் காதலிக்கிறோமே…’ என்று கூட, உன் காதலி புலம்பியிருப்பாள்.

உன் நண்பர் யாரோ கடன் பெற, நீ சிபாரிசு செய்திருக்கிறாய். கடன் வாங் கினவன் பணத்தை கட்டவில்லை. சிபாரிசு செய்த நீ, நண்பரின் கடனை அடைத்து கடனாளியாகி விட்டாய். குடிகார நண்பர்களை பார்த்து, பொறாமைப்பட்டு, “நீங்க மட்டும் என்னடா குடிக்கிறது… நானும் குடிப் பேன்…’ எனச் சொல்லி, குடிகாரனாகி விட்டாய். நீ கடனாளியானதற்கும், குடிகாரன் ஆனதற்கும் உன் காதல் காரணமல்ல; உன் தனிப்பட்ட குணா திசயம்தான் காரணம்.

“ஏதோ செய்யலாம்…’ என்ற அப்பாவின் வார்த்தை, தடம் புரண்ட உன் வாழ்க்கையை நேராக்கி விட்டது என்பது கூட உன் கற்பனையே.

உன்னுடைய தவறுகளை அலசி ஆராய்ந்து, உன்னை திருத்திக் கொ ண்டிருக்கிறாய். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி, உன் தந்தை வார்த்தைகள்.இன்னொருவனுக்கு சொந்தமாகப் போகும் பெண் உனக்கு ஏன், “மறக்க நினைக்காதே…’ என எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்? திருமணமாவதற்கு முன், “ப்ரித்விராஜே… குதிரையில் வந்து என்னை து>க்கிப் போ…’ என்கிறாளா? எனக்கு திருமணமானாலும், திருமணத் திற்கு பின் திருமண பந்தம் மீறிய உறவை தொடர்வோம் என்கிறாளா?

இனி, உனக்கும், அவள் உறவு தேவையில்லை; அவளுக்கும், உன் உறவு தேவையில்லை.

அவரவர் பாதையில் போங்கள். உன் மொபைல் எண்ணை மாற்று; தமிழ் சினிமா பார்ப்பதை வெகுவாகக் குறை. யாரும் கடன் பெற, ஜாமீன் கையெழுத்து போடாதே.

தொலைதூர கல்வி இயக்ககம் மூலம் மேற்படிப்பு படி.

வாங்கும் சம்பளத்தை பெற்றோரிடம் அப்படியே கொடுத்து, அவர்களை மகிழ்ச்சிபடுத்து. அடுத்த ஒரு வருடத்தில், பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை மணந்து கொள். பத்து வருட தாம்பத்யம் செய்த பின், காதல் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கிடைக்கும். வாழ்க்கைக் கல்வியில் ஊறிய பலாச்சுளையாய் காதல் தித்திக்கும். உதடுகள் பேசாது, ஆன்மாக்கள் பேசிக் கொள்வதே காதல். அர்த்தநாரீஸ்வரனாக ஆணும், அர்த்தநாரீஸ்வரியாக பெண்ணும் மாறுவதே காதல். உடல்ரீதியான காதல் வயோதிகத்தில் சுருங்கும்; மனரீதியான காதல் வயோதிகத்தில் கூடும்.

புரியாத வயதில் கிறுக்கும் எதுகை மோனை வார்த்தைகள் கவிதை களோ, இலக்கியமோ ஆகாது. வாழ்க்கைக்கல்வி கற்றபின் எழுதிப் பார் – ஒப்பனையற்ற உன்னத இலக்கியம் கிடைக்கும்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள்
விதை2விருட்சம் இணையத்தில்  விளம்பர செய்ய
விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com
என்ற மின்னஞ்சலில்  தொடர்பு கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply