ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் (classbites.com/) தளத்தை விஷேசமானது என சொல்லலாம். காரணம் மிகவும் எளிமை யான அதே நேரத்தில் சுவாரஸ்ய மான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.
என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந் தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.
முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள். ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக் கல் ஏற்படலாம்.
ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடை களை தாண்டி ஆங்கில மொழியை கற்பத ற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியா மல் போய்விடுகிறது.
இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ் பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள்.
கல்வி உலகில் இப்போது குறும்பாடங்க ளை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர். குறும்பாட ங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேர த்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள் ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள் ளன.
குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதி லேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட் டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக் கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?
மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார் த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாட ங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப் பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு, இல க்கண பயன்பாடு, கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத் தின சுருக்கமாக கற்றுத் தரப் படும்.
மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது. ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப் பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டு மானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்ன தாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.
கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடி ந்துவிடவில்லை.ஒரு வித த்தில் இது இணைய வகுப்பறை போல தான். அதா வது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொட ர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள் ளலாம்.
அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல் லலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவர ங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ள லாம். பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்க லாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள் ளலாம். கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத் தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.
பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்க ளோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வள ர்த்து கொள்ளலாம்.
கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன் னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின் றன். உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய் து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம். வாசி ப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.
இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன
இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.
இணையதள முகவரி;http://classbites.com/
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
I am learning English interest
Can i learn English
Enaku suthama ga english theriyathu English nalla padippen ana purinthu kolla mudiyavillai help me friends
I am learning English interest.
Where is you trail video