Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்க

என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வே ண்டும் என்பதே அனைவரின் விருப்பமா கவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முக த்தில் சுருக்கம் வந்தாலே மன தும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணா டியைப் பார்ப்பவர்கள் பலருண்டு.

உடலையும், மனதையும் இளமையாக வைத் துக்கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைக ளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்கலாம்.

உணவில் கட்டுப்பாடு

நாம் உண்ணும் உணவே நமக்குள் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை செய்கிறது. நமது ஆரோக்கிய த்தையும், தோற்றத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திரு க்கும் என்கின்றனர் உணவி யல் வல்லுநர் கள்.

நாளொன்றுக்கு ஐந்து கப் பழச் சாறு அல்லது காய்கறிச் சாறு உட்கொள்ள வேண்டும் என்கி ன்றனர் உணவியல் வல்லுந ர்கள். புருக் கோலி, காரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடு த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறும் மரு த்துவர்கள் தினசரி மீன் உணவு களை சேர்த்துக்கொள்ள வே ண்டும் என் கின்றனர்.

தாவர எண்ணெய்களில் சமைத் த உணவையே உட்கொள்ள வேண் டும். தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண் டும் என்பது அவர்களின் ஆலோசனை.

ஆன்டி ஆக்ஸிடென்டல்

முதுமையை தவிர்ப்பதில் ஆன்டி ஆக்ஸிடென்டலுக்கு முக்கிய பங்கு ண்டு. நார்ச்சத்துள்ள பழங்கள், காய் கறிகள், பருப்புவகைகள் போன்றவற் றை உண்பதன் மூலம் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெ ன்ட்டல் இளமை யை தக்கவைக்கின்றன.

ஸ்ட்ராபெர்ரி, மாதுளம்பழம் போன்றவை அதிகம் உண்ண வே ண்டும். கிரீன் டீயில் அதிக ஆண்டி ஆக்ஸி டென்ட்டல் உள்ளன. இது நன்றாக செயல்வினை புரிந்து முதுமை வராமல் தடுக்கின்றது.

புகை, மது கூடாது

நம்முடைய லைப்ஸ்டைலை மாற்ற வேண்டும். அதிக புகை ப் பிடிப்பது. ஆல்கஹால், போதை வஸ்துகள் உபயோ கிப்பதும் முகத்தில் அதிக சுருக்கத்தை வரவழைக் கும்.

இரத்தத்தை விஷத்தன்மை யானதாக்கி நிறத்தை மங்கச் செய்கிறது. எனவே இள மையை விரும்புபவர்கள் குடிப்பதை, புகைப்பதை விட்டொழிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சியே இளமையை தக்க வைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள். தின சரி அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இருக்கமாக்குகிறது. இதனால் முதுமை தோற்றம் ஓடியே போய் விடும் என்பது மருத்துவர்களின் கருத் து.
எளிய சோப், கிரீம்கள்

முகச்சுருக்கத்தை போக்கவும், தோலை பாதுகாக்கவும் எளிய வழிகள் உள்ளன. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் சோப், மற்றும் இளமையை கூட் டும் கிரீம் போன்றவைக ளை உபயோகிக்க வேண்டும்.

கூடுமானவரை சூரிய ஒளியில் நம் உடல் அதிக அளவில் படுவ தானாலும் முகச்சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தரமான சன்ஸ்கிரீன் தடவாமல் வெளியில் கால் வைக்க வேண்டாம்.

கவலையை துரத்துங்கள்

கவலையே நமது முகச்சுருக்கத்தை அதிகமாக்கி வயதான தோற்ற த்தை தரும். எனவே எதற்கும் கவலை வேண் டாம்.

மகிழ்ச்சியான நினைவே நமது உடலி னுள் நல்ல ஆரோக்கியமான ஹார் மோனை சுரக்கச் செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவு ரை.

கவலைப்படும் படியாக சம்பவங்கள் நடைபெற்றால் அதை புறந்தள்ளி வி ட்டு மனதை அமைதியாக்கும் இசை யை கேளுங்கள், நல்ல புத்தக ங்களை படியுங்கள். என்கின்றனர் வல்லுநர்கள். இதுவே உங்களின் இளமையை நீட்டிக்கும் வழி.

மூளையை உற்சாகப்படுத்துங்கள்

இளமையை தக்கவைப்பதில் மூளைக்கு முக் கிய பங்குண்டு. என வே மூளையை சுறுசுறுப் பாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்கள், பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண்பது போ ன்ற ஆக்டிவான செயல்களில் தொடர்ந்து ஈடு படுவதன் மூலம் நமது மூளையை சுறுசுறுப் பாக வைக்கலாம். இதன் மூலம் முதுமை என்பது நம் அருகில் கூட எட்டிப்பார்க்காது என்கின்றனர் மருத்து வர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply