Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அவசியமா கூகுள் டாக்ஸ்?

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ் வளவாக கூகுள் டாக்ஸ் பயன்படுத் துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என் றாலும், அதனை மைக் ரோ சாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற் ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர். ஆனால், கூகுள் தன்னுடை ய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதி கள் அனை த்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார் க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில், எந்த ஒரு பைலுக்கான லிங்க்கில் கிளிக் செய்தா லும், உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப் பட்டு நாம் தேடும் பைல் காட் டப்படும்.

ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்? என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரண ங்களுக்காக இதனைப் பயன்படுத்தலாம் என் று தெரியவரும். அவை:

1) இலவசம்: கூகுள் டாக்ஸ் முற்றிலும் இல வசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல, ப ணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிர வுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங் கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. அனைத்து எடிட்டிங் வே லைகளையும் மேற்கொள்ளலாம்.

2) இணைய வெளியில் இயக்கம்: கூகுள் டாக்ஸ் இணையத்தில் கிடை க்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால், இன்டர் நெட் இணைப்பு கிடை க்கும் எந்த இடத்திலும், உங்கள் பைல்க ளை, ஏற்கனவே அதனை உருவாக்கி இரு ந்தாலும், எளிதாகப் பெற்று எடிட் செய்தி டலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் அக்கவுண்ட் தான். பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமின்றி, மொ பைல் போன், நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இய க்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக் கும் 1024 எம்பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.

3) பகிர்ந்து கொள்ளல்: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணைய தளங்கள் தரும் வசதியை முழுமையா கப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், இதன் மூலம் நாம் நம் தகவல்களை, பைல்க ளை, உருவாக்கங்களை நம் நண்பர்களுடன் பகி ர்ந்துகொள்ளமுடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இய ங்குவதால், இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் பைல்களை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

4) பயன்படுத்த எளிது: மைக்ரோசாப்ட், ஒவ் வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ் டம் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்க ளைப் புதி யதாகக் கொண்டு வருகையில், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற் றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன. அதுவரை, பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறு கிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல், பழக எளி மையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகு ப்பிலிருந்து, கூகுள் டாக்ஸ் மாறுவோரு க்கும் எளிதாக உள்ளது.

5) இணைவமைவு: எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு பைலை உரு வாக்கினா லும், எந்த பார்மட்டில் அதனை அமைத்தி ருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அத னைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறை யில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply