இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே நல்ல ஆரோக்கியத்துக்கான ரகசிய மாகும்.
* உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது.
* காலையிலும், இரவில் படு க்கைக்குச் செல்லும் முன்பும் பற்களை பிரஷ் கொண்டு துலக்குவதுடன், நாக்கை வழிப்பது நல்லது. நாக்கில் வெள்ளை படிவதை இது தடுக்கும்.
* காலை எழுந்ததும் ஒரு கோப்பை தண்ணீர் அருந்துங்கள். தினசரி 10-12 கோப்பை அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
* தினசரி நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி அவசியம்.
* ஜலநேத்தி, சூத்ரநேர்த்தி போன் ற கழிவுகளை சுத்தம் செய்யும் பயிற்சி அவசியம்.
* நெல்லிக்காய் ஜூஸ், திரிபலா சாப்பிடவும்.
* காலையில் பூண்டு ரசம் அருந்து ங்கள்.
* நார்ச்சத்துள்ள உணவை உட் கொள்ளவும். கோதுமை, அரிசி த விடு நீங்காதது நல்லது. சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் பச் சைக் காய்கறிகளை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள் ளவும்.
* பசித்தபின் புசிப்பதே நல்லது. மிதமான உணவே சிறந்தது. சாப் பிடும் உணவை நன்கு சுவைத்து, சவைத்து சாப்பிடவும்.
* சாப்பாட்டிற்கு இடை இடையே தண்ணீர் அருந்தாதீர்கள். சாப்பிடு வதற்கு அரைமணி நேரம் முன்போ, சா ப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்தோ தண்ணீர் அருந்த வும். இதனால் ஜீர ண சக்தி பாதிக்கப் படாது.
* துவர்ப்பு, மசால் உணவுகள், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்க்கவும்.
* சோம்பலின்றி எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும்.
* வாரம் ஒருமுறை வெறும் தண்ணீர் மட்டுமே, முடியாதவர்கள் கஞ்சி போன்ற திரவ உணவையோ, பழச்சாறோ அருந்தவும்.
* உங்கள் உடல் நிலையை கண் காணித்து வரவும்.
* சோர்வு ஏற்படும் போது போதுமா ன அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வும்.
* டீ, காபி, பான், புகையிலை போன் ற உணர்ச்சிகளைத் தூண்டும் பொரு ள் களைத் தவிர்க்கவும்.
* புகை பிடிப்பதையும், மது அருந்து வதையும் தவிர்க்கவும். இத னால் மனம் பேதலிப்பதுடன், பல தீராத நோய்களும் ஏற்பட்டு அவ தியுற நேரிடும். பலனை எதிர்பாராமல் கடமையை ஒழுங்காக, சரி யாகச் செய்யுங்கள். பலன் தரு வது இறைவன்.
* பாதி வயிறு உணவு, பாதி அ ளவு தண்ணீர், மும்மடங்கு உட ற்பயிற்சி, வாய்விட்டுச் சிரிப் பது, அதிக நேரம் தியானப் பயி ற்சி உங்களை முழு ஆரோக்கி யத்தில் வைத்திருக்கும்.
* மற்றவர்கள் உங்களிடம் எப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.
* அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவ ர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.
* நீங்கள் உண்ணும் உணவே அரும ருந்தாகும்.
* சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழ ப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இரு ப்பதே சிறப்பு.
* சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக் கம் ஏற்படும்போது, சிறுநீரை வெ ளி யேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.
* சாப்பிடும் போது மௌனத்தை அனுஷ்டியுங்கள்.
* எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண் ணங்களையே உரமிட்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.
* எதைச் செய்தாலும், அதை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய் வீர்களானால், உங்கள் வாழ்வில் நிறைவு ஏற்படும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஏமாற்றத்திற்கு இடம் தராதீர்கள்.
* அன்றாடம் காலையிலும், மாலையிலும் இறைவனிடம் பிரார் த்தனை செய்யுங்கள். * பசும்பால் அருந்தவும். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
* தினசரி உங்கள் கண்களை 2-3 தடவை குளிர் நீரால் கழுவவும். கண் எரிச்சல் போன்றவற்றை இது தடுக்கும்.
* பருவகாலத்திற்கு ஏற்றவாறு பழ ங்கள், சாலட்டுகளை எடுத்துக் கொ ள்ளவும்.
* பழங்கள், காய்கறிகளை அதன் தோல் நீக்காமல் உட்கொள்ளவும். அதுபோல பருப்பு வகைகளையும் தோல் நீக்காமல் பயன்படு த்தவும்.
* 40 வயதைக் கடந்தவர்கள் அதிகளவில் பருப்பு வகைக ளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. குறைத்துக் கொள் வது நலம். 50 வயதுக்கு மேல் அடியோடு பருப்பு வகைக ளைத் தவிர்க்கவும்.
* முளைகட்டிய தானியங்கள் உங்கள் உணவில் ஒரு முக் கிய ஐட்டமாக சேர்த்துக் கொள்ளவும்.
* தினசரி சுத்தமான தண்ணீரில் குளிக்கவும். வியர்வை நாற்றம், சரும நோய் வராமல் தடுக்கும்.
* கோரைப்பாயின் மீது பெட்ஷீட் ஜமுக்காளம் விரித்து, மிருதுவான தலையணை வைத்து படுத்து உற ங்கவும். ரப்பர், ஃபோம் மெத்தைக ள், தலையணைகள் வேண்டாம்.
* பருவத்தில் கிடைக்கும் பழங்கள், முளைகட்டிய தானியங்களை கா லை உணவாகக் கொள்ளவும்.
* அவ்வப்போது உடல் மசாஜ் செய்து கொள்ளலாம். காலை சூரிய ஒளியில் சூரியக் குளியல் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்