Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சில முனிவர்களது பெயர்களும் அவர்களது பெருமைகளும்

கபில முனிவர்
கபில முனிவர் கடவுளால் படைக்கப் பட்ட சித்த சக்திக் கொண்ட முனிவர். கபில முனிவர் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு அவதாரமென் றும், அது போல வெவ்வேறு சூழ்நிலை யில் கபில முனிவர் அக்னியின் அவ தாரமாகவும், சிவபெருமானின் அவதா ரமாகவும் தோன்றியிருக்கிறார். பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உருவாகிய பிரஜாபதி கர்தாம் என்பவருக்கும் அவ ருடைய மனைவி தேவயுவதிக்கும் கபி லர் மகனாகப் பிறந்தார். மகன் பிறந்த தும் கர்தாம் தம்பதியர்கள் சித்தபுர் என் ற இடத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கினர். கபிலர் பிறந்ததும் பிரம்ம தேவன் கர்தாமுக்கு பகவானே ஜனனம் எடுத்ததாக சொன்னார். மேலும் கபில முனிவர் சமக்கிய சாஸ்திரத் தை உருவாக்குவார் என்று பிரம்ம தேவன் சொல்லிவிட்டு மறைந் தார். கபிலமுனிவர் வளர வளர அவருடைய தந்தை சன்னியாசம் பெற்றுக் கொண்டு காட்டிற்கு சென்றார். சில நாட்கள் கழித்து காட்டி லேயே கபிலரின் தந்தை உயிர் நீத்தார். அதன் பிறகு கபில முனிவர் தன்னுடைய அன்னையுடன் சரஸ்வதி நதிக்கரையோரத்தில் ஆசிர மத்தை அமைத்துக் கொண்டு தங்கினார். ஒரு நாள் பிரம்ம தேவன் தோன்றி தேவயுவதியிடம், அவளுடைய மகன் கபில முனிவர் அவளிடம் அல்லது மக்களிடம் இருக்கும் அறியாமையை அழித்து தன்னிடமிருக்கும் ஞானத்தை எடுத்துரைப்பார் என்று சொல்லி விட்டு மறைந்தார். பிரம்ம தேவன் கூறியபடியே கபில முனிவர் தியானம் செய்தார். தன்னுடைய ஞானத்தின் மூலம் மக்களுடைய அறியாமையை அகற்றினார். இயற்கை, ஆத்மா இரண்டும் ஒரு சக்தியால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த் தினார். தன்னுடைய ஞானத்தால் சமக்கிய சாஸ்திரத்தை படைத் தார். கபில முனிவர் தாயினுடைய அனுமதியோடு கடுந்தவம் செய்ய கங்கையை தாண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். முனி வர் கபில சூத்ரம் ஏன்ற நூலையும் இயற்றினார்.
பகவான் பாதாஞ்சலி
பகவான் பாதாஞ்சலி யோகத்தைப் பற்றி பூலோகத்திற்கு அறிய வைத்தார். பாதாஞ்சலி த்வாபர யுகத்தில் அங்கிரா, கோனிகா தம்பதியருக்கு மகனாக இருவட்டு என்ற இடத்தில் பிறந்தார். கோனிகா தினமும் குழ ந்தை வரத்திற்காக செப்புச் சொம்பிலி ருந்து இரண்டு கைகளிலும் தண்ணீர் விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தாள். ஒரு நாள் சூரிய பகவான் அவளுடைய கைகளில் குழந்தை யை கொடுத்தார். சூரிய பகவானால் பெற்ற அந்தக் குழந்தைக்கு கோனிகா பாதாஞ்சலி என்று பெயர் வைத்தாள். பாதாஞ்சலி குழந் தைப் பருவத்திலே அளவுக்கு அப்பாற்பட்ட அறிவுத் திறனை பெற்றிருந்தார். சிறுவனாக இருந்த போது கடுமையான தவம் செய்தார். அவருடைய தவவலிமையைக் கண்டு மகிழ் ந்த சிவபெருமான், பிரம்மாண்டத்திற்கு மொழிகளின் இலக்கணத் தை அறிய வைக்கும் வரத்தை அவருக்கு கொடுத்தார். அதன்பிறகு பகவான் பாதாஞ்சலி கோனார்த் என்ற இடத்தில் தஞ்சமடைந்தார். பகவான் பாதாஞ்சலியைப் பற்றி மற்றொரு வரலாறும் சொல்லப் படுகிறது. ஆசார்ய பனினி இருகைகளாலும் தண்ணீர் விட்டு சூரிய பகவானை வேண்டிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அவரு டைய கைகளில் பாம்புக் குட்டியைப் போட்டார். அந்தப் பாம்புக் கு ட்டி குழந்தையாக பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பனினி, பாதாஞ் சலி என்று பெயர் கொடுத்து நல்ல அறிவையும், திறமையையும் கற்றுக் கொடுத்தார். பாதாஞ்சலி சுமேரு மலையிலுள்ள குகையில் லோலுபாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். லோலுபா நல்ல அறிவாளி, இசை ஞானம் தெரிந்தவள். பகவான் பாதாஞ்சலி யோக சூத்திரம் என்ற நூலை எழுதினார்.
நாட்டியாசாரியார் பரத முனிவர்
த்ரேதாயுகத்தில் மக்கள் இயற்கை சீற்றத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திர பகவான் பிரம்ம தேவனிடம் மக்க ளுடைய சந்தோஷத்திற்காக நாட் டிய சாஸ்திரத்திரத்தை படைக்கும் படி கேட்டுக் கொண்டார். பிரம்ம தே வன் ரிக்வேதத்தின் பாடலையும், சா ம வேதத்தின் ராகத்தையும், யஜூர் வேதத்தின் நடிப்புத் திறனையும், அதர்வவேதத்தின் ரசத்தையும் ஒன் றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்தி ரத்தை இயக்கினார். பிரம்ம தேவன் பரத முனிவருக்கு அந்த நாட்டிய சா ஸ்திரத்தைக்கொடுத்தார். பரத முனி வர் அந்த சமயத்தில் வெகு சிறப்பா க நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் காளிதாஸரின் காவியங்களை படைத்தன. பரத முனிவரால் படைக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரம், இயல், இசை, நாட கம், நடிப்பு ஆகிய பாவங்களை மக்களுக்கு எளிமை யாகத் தெரிய வைத்தது.
மகரிஷி வால்மீகி
மகரிஷி கஷ்யப , அதிதி தம்பதியருக்கு வருன் பிரசேதாஸ் ஒன்பா வது குழந்தையாக பிறந்தார். வருன் பிரசேதாவிற்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார். பெற்றோர்க ளை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென் றார். காட்டிலுள்ள பில்வர்கள் ரத்னா கரை வளர்த்தார்கள். ரத்னாகர் வயிற் றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித் தார். காட்டிற்குள் நுழையும் பயணிக ளிடமிருந்து திருடிக் கொண்டிருந்த ரத்னாகர் அந்த வழியே சென்று கொண் டிருந்த தேவரிஷி நாரதரிடமிருந்து திரு டும் போது, இந்தத் திருட்டினால் ரத்னாகருக்கு சந்தோஷம் கிடைக்கி றதா? என்று கேட்டார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பாவப்பட்ட வருமானத்தால் சந்தோஷம் பெறுகிறார்களா? என்று கேட்டார். நாரதரை மரத்தோடு கட்டிப் போட்டு ரத்னாகர் தன் னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வந்தார். நாரதர் கேட்ட கேள்விக்கு அவர்கள் இந்தப் பாவச் செயலில் தங்களுக்கு எந்தவித பங்குமில்லை என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன வார்த்தை ரத்னாகரின் கண்ணைத் திறந்தது. ரத்னாகர் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து ரத்னாகர் திருட்டுத் தொழிலை விட்டு விட்டுக் கடுந்தவம் செய்தார். அவர் தவமிருந்த சமயத்தில் அவர் உடல் மீது எறும்பு புற்றுக்கள் தோன்றி விட்டன. அதனை அறியாமல் அவர் கடுமையான தியானத்தில் மூழ்கியிரு ந்தார். சிறிது காலம் கழித்து தேவரிஷி நாரதர் அவ்வழியே சென் றார். ரத்னாகரின் உடல் முழுதும் எறும்பு புற்றுக்களால் மூடப்பட்டு கிடப்பதைக் கண்டு அவருக்கு வால்மீகி என்று பெயர் கொடுத்தார். த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் சொன் னார். வால்மீகி 24000 சுலோகங்களைக் கொண்டு பெருமை வாய் ந்த இராமாயண காவியத்தைப் படைத்தார். வால்மீகி படைத்த இராமாயணம் இன்றும் இந்து சமய மக்களால் போற்றப்பட்டு வரு கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: