Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுடுமண் சிற்பத்திலும் கிரானைட்டிலும் 3டி சிலைகள் – மார்க்கண்டேயன்.

‘ஒரு கலைஞனுக் குத் தேடல் இருக் கும் வரைதான் அவனால் அவன து கலைப் பயணத் தைக்கடைசி வ ரை தொடர முடியு ம்!” என்று சொல் லும் மார்க் கண் டேயனின் வார்த்தைகளுக்கு அவரே உதாரணம். டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுடுமண் சிற்பத்திலும் கிரானைட்டிலும் 3டி  சிலைகள் செய்து அசத்துகிறார் புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தில் மாலை நேரநுண்கலைப் பயிற்சி ஆசிரியராகப் பணி புரியும் மார்க்கண்டேயன். 

”என் அம்மா வரையும் கோலங்களைப் பார்த்துதான் எனக்கு ஓவியத்தின் மேல்   ஆர்வம் வந்தது. அதேபோல கோலம் போடுவ தும், பேப்பரில் வரைந்து பார்ப்பதுமாக ஓவிய ஆர்வம் வளர்ந்தது.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் சேர முடிவு செய்தேன். ஆனால், அப்போது எல்லாம் அந்தக் கல்லூரியில் ஒரு வருடத்தில் 30 மாணவர்கள்தான் சேர முடியும். அதற்குக் குறைந்தது 500 விண்ணப்பங்களாவது குவியும். அதிர்ஷ்டவ சமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

சிலைகள் செய்வதிலும் ஆர்வம் அதிகம் எனக்கு. ஒவ்வொரு வரு டமும் விநாயகர் சதுர்த்திக்கு என் வீட்டுக்குத் தேவையான விநா யகர் சிலையை நானேதான் செய்வேன். வீட்டிலேயே சிலைகள் செய்ய  ஒரு சின்ன கலைக்கூடத்தை அமைத்தேன்.   சிமென்ட் மற் றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் மோல்டு எடுக்க நிறைய செலவா கும். அதனால்  அனைத்து சிலைகளையும் டெரகோட்டாவி லேயே செய்ய முடிவு எடுத்தேன்.

மண் பானையை எப்படி நெருப்பில் சுடுகிறார் கள் என்பதை அரு கில் இருந்து பார்த்து, அந்த முறையிலேயே நானும் வீட்டில் சிலை களை நெருப்பில் சுட ஆரம்பித்தேன்!” என்று சொல்லும் இவரின் படைப்புகள் பெரும்பாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்மை யைப் போற்றுதல், வன விலங்குகளைக் காத்தல் ஆகியவற்றையே அதிகம் வலியுறுத் துகின் றன.  

”பொதுவாக, எந்த ஒரு ஓவியத்திலும் ஒரு பக்கம் மட்டு மே பார்க்க முடி யும். அந்த ஓவிய த்தின் பின் பக்கத்தை நாம் கற்பனை மட்டும் தான் செய்ய முடியும். அதை மாற்றத்தான் முப்பரிமாண சிலைகள் செய்யத் தொடங் கினேன். பிறகு முன் பக்கம் ஒரு வடிவம், பின் பக்கம் ஒரு வடிவம் என செய்யத் தொடங்கினேன். ஒரே சிலையில் ஒன்றுக்கும் மேற்ப ட்ட கருத்து களைச் சொல்ல அது வசதியாக இருந்ததால் இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

கண்காட்சிகளில் டெரகோட்டா சிற்பங் களைப் பாதுகாப்பது மிக வும் சிரமம் என்பதால், கிரானைட்டில் 3டி சிலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்” என்கிறா ர்.

ஆடு தன் வயிற்றில் உள் ள குட்டியை வாஞ்சையா கப் பார்ப்பது, ஒரு தாய் ஒரு மார்பில் குழந்தைக் கும் மறு மார்பில் ஆட்டுக் குட்டிக்கும் பால் கொடு த்து, விலங்குகளை நேசிக் கச் சொல்வது என வித விதமான பரிமாணங்க ளில் வித்தியாசமான கரு த்துகளைச் சொல்கின்றன இந்த முப்பரிமாணச் சிலைகள். அப்துல் கலாமும் ஒரு சிறுவனும் இருக்கும் சிலை கவர, ”என்ன இது?” எ ன்று கேட் டேன்.

”அப்துல் கலாம் எங்கு போனாலும் மாணவர் களைச் சந்தித்து உரை யாடுவது வழக்கம். ஆனால், அதில் கலந்துகொள்ளும் பெரும்பா லான மாணவர்கள் நகர்ப்புறத்தில் வசிக்கும் தனியார் பள்ளி மாண வர்கள்தான். ‘எங்களோடும் உரையாடுங்கள்’ என்று ஒரு கிராமத்து ச் சிறுவன் சொல்வதாக இந்தச் சிலையை உருவாக்கி இருக்கி றேன்!” என்றார் மார்க்கண்டேயன்.

உண்மையில் இது வேறு பரிமாணம்தான்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply