Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்மையின் அடையாளமாக கருதப்படும் மீசை

ஆண்களுக்கு உதட்டிற்கு மேல் கிரீடமாக உட்கார்ந்திருப்ப தாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டு மல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு உயர் அஸ்தஸ்து உண்டு. மீசை விஷயத்தில் முதலிடம் பிடிக்கும் நாடுகள் பின்வருமாறு:

இந்தியா

10 மீசைக்ர நாடுகள்

தென் இந்தியா வில் 80 சதவீத ம்  பேர் மீசை வைத்திருக் கின்றனர். இத னால் இந்தியா உலகத்திலேயே நம்பர் 1 ஆகி விடுகிறது. இந்தியக் கலாசாரத் தில் நீண்ட காலமாகவே மீசை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இது ஆண் மையின் அடையாள மாகவே இங்கு கருதப்படுகிறது. உலகத்திலேயே நீளமான மீசைக்குச் சொந் தக்காரர் ஓர் இந்தியர் தான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர் ந்த அந்த மனிதரின் மீசையின் நீளம் 12.5 அடிகளாகும்.

மெக்சிகோ

இங்கும் மீசை ஆண்மையின் அடையாள மே. மீசையில் மெக்சிகோ வின் அடை யாள மனிதர்களாக எமிலியானோ ஸபாட் டா, பாஞ்சோ வில்லா ஆகியோர் இருக் கிறார்கள். ஐரோப்பிய மக்கள் மெக்சிகோ வில் குடியேறிய போது தங்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் விதமாக மீசை வளர்த்தனர்.

பாகிஸ்தான்

muhammed iqbal

உலகிலேயே அதிகமான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடா ன பாகிஸ்தானில் பெரும்பாலானவர்கள் தாடி, மீசை வைத் திருக்கி ன்றனர். புகழ்பெற்ற பாகிஸ்தானி யர்களாக தேசியக் கவி முகம்மது இக்பால், முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஜாவிட் மியான்டட், முன்னாள் அதிபர் பர் வேஷ் முஷரப், தற்போ தைய பிரதமர் அசி ப் அலி சர்தாரி ஆகியோரும் மீசைக்கா ரர்களே.

ஜெர்மனி

ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகை 8 கோடி. இந்நாட்டுக்கும் மீசையில் பெருமிதமான வரலாறு உண்டு. அரசியல் தலைவர் பிஸ்மார்க் முதல், தத்துவஞானி பிரெட் ரிச் நீஷே, விஞ்ஞா னி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை மீசை மீது ஆசை வைத்த பிரபலங் களாகும். உலக மீசை மற்றும் தாடி சாம்பியன் ஷிப் போ ட்டியில் அதிக சங்கங்கள் பங்கேற்பது ஜெர்மனியில் இருந்து தான்.

ஈரான்

ayathullah khamnai

ஈரானிய மக்களில் பெரும்பான்மையானவ ர்கள் ஷியா முஸ்லிம் கள். இங்கு முக்கிய புள்ளிகள் பலர் பெருமையோடு மீசையுடன் வலம் வருகிறார்கள். அவர்களில் அயதுல் லா கொமேனி, கால் பந்து நட்சத்திரம் அலி டே போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவ ர்கள்.

கிப்து

பிற முஸ்லிம் நாடுகளைப் போல இங்கும் மீசை வள ர்ப்பதில் ஆர்வம் அதிகம். முக்கிய தலைவர்களு க்கும் இதில் ஆர்வம் உண்டு. உதாரணமாக முன்ளாள் அதி பர் நாசர், அதிபர் அன்வர் அல் சதாத் போன் றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

துருக்கி

துருக்கிய சமூகத்தில் மீசைக்கு ஒரு முக் கியப் பங்கு இருக்கிறது. இது ஏறக்குறைய மத அடையாளமாகவும் இங்கு கருதப்படு கிறது. ஆனால் மேலைத்தேய நாகரிகம் கா ரணமாக மீசை, தாடி வளர்ப்பது குறைந்து வருகிறதாம்.

அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது ஏறக்குறைய ஒரு கோடிப் பேர் மீசை வைத்திருக்கின்ற னர். கடந்த மே மாதம் அலாஸ்காவின் ஆங் கரேஜ் நகரில் உலக மீசை மற்றும் தாடி சாம் பியன் ஷிப் போட்டி நடை பெற் றது. அதில் அதிகப் பதக்கங்கள் பெற்ற நாடு அமெரிக் காதான். ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் ஒரு பதக்கத்தை வென்றது.

ஹங்கேரி

ஹங்கேரியில் உலக மீசை மற் றும் தாடி சாம்பியன் ஷிப் போட்டி நடக்கிறது. அங்குள்ளவர் களிடம் மீசை மட்டுமல்ல, அதன் மீதான ஆசையும் வளர்ந்து வரு கிறதாம்.

பல்கேரியா

இசை, கால்பந்து, கைப்பந்துக்கு அப்புறம் பல்கேரியர்கள் அதிகம் நேசிப்பது மீசையைத்தான்… சோ வியத் யூனியனின் தாக்கத்தில் பல்லாண்டு காலம் இருந்த பல் கேரியா, அண்மை ஆண்டுகளில் மாறியுள்ளது. மாறாதது மீசை மீதான மோகம் மட்டும்தான்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: