Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தென் மாவட்டங்களில் இரண்டாம் போகத்தில் தீவிர நெல் சாகுபடி

நெல் சாகுடி கால்வாய் பாசனத்தையும், கண்மாய் மற்றும் கிணற்றுப் பாச னத்தையும் மற்றும் ஐப்பசி அடை மழை யையும் பொறுத்து உள்ளது. தற் போது தென் மாவட்டங்களில் அதாவது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாத புரம் இவைகளில் ஐப்பசி மழை (வடகிழக்குப் பருவ மழை) பெய்யத் துவங்கிவிட்டது. இப் பட்டம் நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதே. விவசாய விஞ்ஞானிகள் இப்படி திடீரென்று தோன்றும் பருவங் களில் சாகுபடி செய்வ தற்கு ஏற்ற நெல் ரகங்களை கண்டு பிடித்துள்ளனர். இப் பட்டத்திற்கு ஏற்ற ரகங்களாகிய ஆடுதுறை 36, ஆடுதுறை 45 மற்றும் ஜே13 போன்றவைகளை சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.

1. ஆடுதுறை 36 ரகத்தின் வயது 115 நாட்கள். இது பல வருடங்களாக விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் இதனை காலத்தை வென்ற ரகம் என்று சொல்வார்கள். இது ஆபத்தில் தவிக்கும் விவசாயி களை காப்பாற்றும் நெல் என்றும் அழைக்கப்ப டுகின்றது. இதன் அரிசி வெண்மை நிறத்தைக் கொண்டு ஐ.ஆர்.20 அரிசி போலவே இருக்கும். இதன் வயதான நாற்றினை நட்டாலும் மகசூல் பாதிக்கப்படுவதில்லை. இந்த ரகத்தை கொடிய வியாதியோ, பூச்சிகளோ தாக்கி அழித்த வர லாறு கிடையாது. இதில் கணிசமான அளவு வை க்கோல் கிடைப்பதும் குறிப் பிடத்தக்கது. தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் இதனை சாகுபடி செய்து பலன் அடைந்து வருகி ன்றனர். தென் மாவட்டங்களில் விவ சாயிகள் இதனை பயமின்றி சாகுபடி செய்யலாம்.

2. தமிழகத்தில் தற்போது விவசாயிகளின் கவன த்தை கவர்ந்துவரும் அதிசய நெல் ஆடுதுறை 45 ரகமாகும். இது இரண்டாம் போகத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. தற்போது விவசாயிகளால் இது ஒரு மக சூல் திறன்மிக்க நெல் என்று போற்றப்பட்டு வருகிறது. இந்த ரகம் உயர் விளைச்சல் ரகத்தைப் போல ஏக்கரில் 4 டன் வரை மகசூல் கொ டுக்கத் துவங்கிவிட்டது. வயது 105- 115 என்பதால் முதல் போகத்திலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. அணைக்கட்டு பகுதிகளிலும் இத னை  சாகுபடி செய்யலாம். இதன் நெல் நடுத்தர சன்னமாக உள்ளது. அரிசி வெண்மை நிறத்தைக் கொண் டு உள்ளது. வெண் புழுங்கல் அரிசி செய்வதற்கு மிகவும் ஏற்றது. ஆடு துறை 45 ரகத்தினை பூஞ்சாள வியாதி தாக்க க்கூடும். இதனை சுலபமாக கட்டுப்படுத்தலாம். நோயினைத் தடுக்க சூடோ மோனாஸ் பிளாரசன்ஸ் ஈர விதை நேர்த்தி செய்யலாம். சாகுபடி சமயம் சாணத்துடன் பவுடரைக் கலந்து வயலுக்கு இடவேண்டும். தொண்டைக் கதிர் சமயம் தண்ணீரில் கலந்து பயிர்மேல் தெளிக்கலாம்.

3. தமிழகத்தில் 100 நாள் நெல்லா கிய ஜே-13 விவசாயிகளால் விரு ம்பி சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த குறுகிய கால நெல் லினை இரண்டாம் போக த்தில் சாகுபடி செய்யலாம் என்கிறார் கருப்பா யூரணி யைச் சேர்ந்த தர்மராஜன் (மொபைல்: 93624 44440). மதுரை, திண்டுக்கல் மற்றும் காந்தி கிராம த்தைச் சுற்றிலும் வறட்சி நிலை யில் ஜே-13 விவசாயி களுக்கு பலனை அளித்துள்ளது. ஜே-13 அரிசி இட்லி போன்ற பலகாரம் செய்ய ஏற்றது. இதில் நல்ல மாவு காணு கின்றது. இதோடு மட்டுமல்ல. இந்த ரகம் பொரி செய்வதற்கும் ஏற்றதாக உள் ளது. சேலம் பகுதியில் கிணற்றுப் பாசனத்தில் குறுகிய கால ரகமாகிய ஜே-13 நெல்லை முதலில் சாகுபடி செய்துவிட்டு உடனே கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த கரும்பில் வெல்ல மகசூல் அதிகரி க்கின்றது. இந்த ஒரு நன்மைக்காக விவசாயிகள் ஜே-13 ரகத்தை சாகுபடி செய்கின்றனர். தென் மாவட்டங்களில் தைரியமாக இரண்டாம் போகத்தில் விவசாயிகள் ஜே-13 ரகத்தை சாகுபடி செய்யலாம். விவசாயிகள் திருந்திய நெல் சாகு படியில் நல்ல அனுபவம் பெற் றுள்ளனர். தற்போது விவ சாயிகள் நெல் சாகுபடி துவங்கி நிலத்தை நட வு செய்வதற்கு ஏற்ற நிலை கொண்டு வந்துள்ளனர். இவர்கள் திருந் திய நெல் சாகுபடி முறைகளை அனுசரித்து கணிசமான லாபம் எடுக் கலாம்.
-எஸ்.எஸ்.நாகராஜன்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply