Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மங்கையரின் பாதங்களுக்கு அழகு சேர்க்கும் கொலுசு

‘‘கொலுசு, காலம் காலமாக பெண்கள் அணிந்து வரும் அழகான ஆபர ணம். ஆரம்ப காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான கொலுசுக ளை அணி ந்து வந்தனர். அவரவர் வசதிக்கு ஏற்ப இதனுள் முத்துக்கள் அல்லது வைரக்கற்கள் வை ப்பது வழக்கமா இருந்தது. தவிர, பழங்காலத்தில் கொலுசுகளை இள வயது பெண்கள் அணிய மாட்டார்கள். திருமண மான பெண் கள் மட்டுமே அணிவார்கள்.

ஆனால், இப்போது இளம் பெண்கள் அணிவதற்கு ஏற்ப மெல்லிய சங்கி லியில் டிசைனர் கொலுசுகள் மார்க்கெட்டில் வலம் வருகின்றன. கொலுசை கால் மெட்டியு டன் இணைந்து அணிவது இப்போதைய லேட் டஸ்ட் டிரண்ட். பொதுவாகவே கொலுசு என் றதும் வெள்ளியில் சின்னச் சின்ன முத்து க்கள் இணைக்கப்பட்ட கொலுசுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போ து மாடர்ன் பெண்களுக்கு இவையே பல டிசைன்களில் வருகின்றன. புடவைக்கு மட்டுமே அணிந்து வந்த கொலுசுகளை இப்போது மாடர்ன் உடைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்தி ருக்கிறோம்.

பொதுவாக மலை சாதி மக்கள், கொ லுசுகளை விரும்பி அணிவார்கள். அவையும் காப்பு போல் தடிமனாக இருக்கும். ராஜஸ்தான் பெண்கள், அதிக எடையுள்ள தடிமனான வெள்ளி கொலுசை அணிவார்கள். ஒரு சிலர் ஒரே காலில் இரண்டு விதமான கொலுசுகளை அணிவார்கள். பஞ்சாப் மாநிலத்தில் கொலுசுக்கு ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங் கிலி என்று அர்த்தம். இதை கல்யாண த்தின் போது பெண்களின் கால்க ளில் அணிவிப்பார்கள். அதாவது காலில் கொலுசு அணிந்து இருக்கும் பெண்ணு க்கு திருமணமாகி விட்டதாகவும், அவ ள் தன் கணவனின் கட்டுப் பாட்டில் இ ருப்பதாக அர்த்தம். இப்போது விஞ் ஞான வளர்ச்சி காரணமாக எல்லாமே மாடர்ன் மயமாகி விட்டதால் கொலு சும் மாடர்ன் ஆகி விட்டது.  

எனவே தங்கம், வெள்ளியில் மட்டுமல்லாமல் லெதர், பிளாஸ்டிக், நை லான், சாதாரண நூல் என பல டிசைன்க ளில் இப்போது கொலுசுகள் கிடைக்கின் றன. வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்ய ப்படும் கொலுசுகள், மெல்லிய செயின் கொண்டு இணைக்கப்பட்டு இதில் சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு இருக் கும். இந்த செயின் மெல்லியதாகவோ அல்லது பட்டையாகவோ வருகிறது. அதே போல் கொலுசு முழுக்க முத் துக்களும் அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்கள் இணைக்கப்பட்டும் வருகின்றன.

இவற்றை புடவை, சுடிதார் போன்ற உடைக ளுக்கு அணியலாம். அதே சம யம் பளிச்சென்று கண்களை பறிக்கும் வெள்ளிகளை இப்போதை ய பெண்கள் அதிகம் விரும்புவதில்லை. ஆக்சி டைஸ்ட் வெள்ளிகள் (அதாவது வெள்ளை வெ ளேர் என்று இல்லாமல், கொஞ்சம் டல்லாக இருக்கும்), போல்கி கற்கள், குந்தன் கற்கள், செமி பிரசியஸ் கற்கள் பொறிக்கப்பட்ட தண் டைகள் இப்போது பெண்கள் மத்தியில் பிரப லம். இவற்றை கல் யாணம் மற்றும் விசேஷ நாட்களுக்கு அணிந்து கொள்ளலாம்.

மாடர்ன் உடைக்கு நைலான், நூல் மற்றும் லெதர் போன்றவற்றால் செய் யப்பட்ட கொலுசுகள் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும். இவை மெல்லிய கயிற்றில் மீன் பொம் மைகள், சின்ன கற்கள், பாசி மணிகள், கிரிஸ்டல் கற்கள், சங்குகள், கண்ணாடி கற்கள், மரத் துண் டுகள், பேஷன் முத்துக்கள் இணைக்கப்பட்டு வரு கின்றன. இவற்றை இரண்டு கால்களிலும் அணிய லாம். அல்லது ஒரு வலது காலில் மட்டும் அணி யலாம். சிலர் கறுப்பு கயிற்றில் பின்னல் போல் செய்து ஆங்காங்கே மணிகள் இணைத்து காலில் கட்டி இருப்பார்கள். இவை ஜீன்ஸ், ஸ்கர்ட், பார்ட்டி உடைகளுக்கு அழ காக இருக்கும். அதே சமயம் டிசைனர் கொலுசுகளை கழுத்தில் அணியும் சோக்கராகவும் பயன்படுத்தலாம். சிலர் இதை பிரேஸ்லெட்டாவும் பயன் படுத்துகிறார்கள்…’’

thanks to thara vinod and priya

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: