Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீர்க்கசுமங்கலி வரம் தரும் துளசி பூஜை.

கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா ஸ்திரீ அதைக் கண்டு  பொறாமை கொண்டாள். அத னால் கோபம் கொண்ட ராதை, ‘சாதாரண மானிடப்பெண்போ ல் நீ பொறாமை அடைந்த தால் இந்த உயர்ந்த நிலையிலி ருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்’ என்று சபித்தாள்.

அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான மாதவிக்கும் துளசி என்ற பெயரில் பெண் ணாய்ப் பிறந்தாள். சிறுவயதிலேயே பத்ரிகாவனம் சென்று, கிருஷ் ணனை மனைவியாக அடைய வேண்டும் என்று தவம் செய்தாள். அவள் வேண்டியபடி பிரம்மதேவனும் வரம் கொடுத்தார். ஆனால் சிறுவயதில் தான் பெற்ற வரத்தை மறந்தே போனாள் துளசி. அதே நேரத்தில் ராதையால் சபிக்கப்பட் ட சுதாமன் என்பவனும், சங்க சூட ன் என்ற பெயரில் சிவ அம்சமாக பூமியில் பிறந்தான். இவன் நான்கு கைகளுடன் பெரும் வீரனாக விள ங்கினான். அசுரர்களுடன் சேர்ந்து கொண்டு சங்கசூடன் தேவர்களை ஜெயித்து யாராலும் வெல்ல முடி யாதவனாகத் திகழ்ந்தான். சங்கசூடன் கவச குண்டலத் துடன் பிறந் தவன். தன்னை அண்டியவர்களுக்கு இல்லை என்று சொல்லாத உய ர்ந்த குணமுடையவனாகத் திகழ்ந்தான். தான் பெற்ற வரத்தை மற ந்துபோன துளசி, இந்த சங்கசூடனையே திருமணம் செய்து கொண் டாள்.

வழக்கம்போல தேவர்கள், சங்கசூடனை வீழ்த்த பகவானை சரண டைந்தார்கள். சங்கசூடனுக்கும் பகவானுக்கும்  யுத்த ம்  நடந்து கொண்டே இருந்ததேயொழி ய அது ஒரு முடிவுக்கு வரவில்லை. சங்க சூடனின் மனைவியாகிய துளசி மிகுந்த கற்புக்கரசியாக விளங்கிய தால் தான் அவனை அழிக்க முடியவில்லை என்பதை கிருஷ்ணன் புரிந்து கொண்டா ர். சங்கசூடனைப் போல் உருவெடுத்தா லும் சங்கசூடனது கவசம் இல்லாமல் துளசியை, தான் சங்கசூடன் என்று நம்ப வைக்க முடியாது என்பதால் சங்கசூட னிடம் மாறுவேடத்தில் போய் அவனது கவசத்தைத் தானமாகப் பெற்றார்.

 பிறகு சங்கசூடனைப் போல் உருமாறி வெற்றிமாலை அணிந்து துளசி இருக்கும் இடத்திற்கு வந்தார்.  அவளும் கிருஷ்ணனை தன் கணவர் என்று நினைத்து அவருக்கு பாத பூஜை செய்ய, துளசியின் விரதத்திற்கு பங் கம் ஏற்பட்டது. அதன்பின் சங்கசூடன் யுத்த த்தில் கொல்லப்பட்டான்.

நடந்ததை அறிந்த துளசி, ‘‘பகவானாக இரு ந்துகொண்டு நீ சாதாரண மனிதரைப் போல் நடந்து கொண்டதால் உன் உள்ளம் கல்லா ய்ப் போனதுபோல் நீரும் கல்லாகப் போவீ ர்!’’ என்று சபித்தாள்.

உடனே ராதை, ‘‘பகவானையே நீ சபித்ததால், நீயும் இந்த மனித ஜன்மாவை விட்டு ஒரு புல்லாய், செடியாய் போகக்கடவாய்’’ என்று சபித்தாள்.

அப்போது அங்கு வந்த நாரதர் ராதையை சமாதானம் செய்து, பக வான் பத்தினி சாபத்தால் கண்டகி நதியில் கல்லாய் இருப்பார். வஜ்ர கிரீடம் என்ற பூச்சி அந்தக் கல்லை த் துளைத்து பலவிதமான வடிவங் களை உண்டாக்கும். அந்தக் கல் வடி வங்கள் சாளக்கிராமம் என்று அழை க்கப்படும். மேலும் அவை இரண்ய கர்ப்பம், வாமனம், ஸீதாராமம், ஸுதர்சனம், ந்ருஸிம்ஹம், வரா ஹம் என்று பல விதங்களாகவும் அழைக்கப்படும். இப்பிறவியில் தன் வரத்தை மறந்துபோன துளசி, அவளுடைய மறுஜென்மத்தில் கிருஷ்ணனை சேருவாள்’’ என்றார்.

‘‘செடியாய்ப் பிறந்த துளசியை யார் சாளக்கிராமத்தோடு (கிருஷ்ண னோடு) சேர்த்து பூஜிக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி நிச்சயம். துளசியை வழிபடுபவர்கள் தீர்க்க சுமங்கலியாக நீண்ட காலம் வாழ்வார்கள். கலியுகத்தில் துளசிச்செடி அருமருந்தாகப் பயன் படும்’’ என்று துளசியின் பெருமைகளை எடுத்துச் சொன்னார்.

பகவானே இன்னுமொரு சமயத்தில்  துளசியின் பெருமையை மற் றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று நாடக மாடினார்.

ஒருசமயம் சத்தியபாமா, ‘‘கிருஷ்ணன் தன்னைவிட்டுப் பிரியாமல் இருக்க என் ன செய்யலாம்?’’ என்று நாரதரிடம் கேட் க, நாரதர் ‘‘நீ யாருக்காவது கிருஷ்ணனை தானமாகக் கொடுத்துவிடு. அதன்பின்  நீ திரும்பி அவர்களுக்கு பொருள் கொடு த்து வாங்கிக்கொள்’’ என் றார்.

சத்தியபாமாவும், ‘‘உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானமாகத்தந்தோம்’’ என் று கூறி நாரதருக்கே கிருஷ் ணரை தானமாகக் கொடு த்தாள்.

அதன்பின் நாரதர் கிருஷ்ணருக்குப் பதிலாக அவரது எடைக்கு எடை நவரத்தினங்களையும் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும் படி கேட்டார். தராசில் எவ்வளவு செல்வ ங்களை வைத்தபோதும் கிருஷ்ணன் இருந்த தட்டுதான் இறங்கி இருந்தது. அங்கு வந்த ருக்மிணி தேவி, ‘இதற்கு என்ன செய்வது?’ என்று நாரதரிடம் வரு த்தத்துடன் கேட்டாள்.

விலைமதிப்பில்லாத பொருளை இரண் டாவது தட்டில் வைத்தால் கிருஷ்ணர் இருக்கும் தட்டு சமநிலைக்கு வரும்’’ என்றார்.

ருக்மிணிதேவியும் க்ருஷ்ணார்ப்பணம் என்று துளசி தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தரா சின் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனை வருக்கும் புரி ந்தது.

வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம். செவ்வாய், வெள்ளி விசேஷமாக பூஜிக்கலாம். துளசி இலையை நகங்களால் கிள்ளக்கூடாது.

அமாவாசை, பௌர்ணமி, துவாத சி, ஞாயிற்றுக்கிழமை, கிரஹண காலங்கள், மதியம் மற்றும் மாலை ப்பொழுது, இரவு போன்ற காலங்க ளில் துளசி இலையைப் பறிப்பது கூடாது.

சுமங்கலிப் பெண்கள் வெள்ளிக் கிழ மைகளில் துளசி பறிப்பதைத் தவி ர்க்க வேண்டும். துளசிச் செடி துஷ் ட சக்திகளை வீட்டினுள் அனுமதி க்காது. துளசியைப் பூஜிப்பவர் வீட்டில் மஹாலக்ஷ்மி நித்யவாசம் செய்கிறாள்.

முக்கிய விசேஷ விரத தினங்கள்
(நவம்பர் 1 முதல் 15 வரை)
நவ&3 :  திருவோணவிரதம்
நவ&6 :  சர்வ ஏகாதசி
நவ&8  : மஹா பிரதோஷம்
நவ&10  : பௌர்ணமி
நவ&11 :  கிருத்திகை
நவ&14  :சங்கடஹர      சதுர்த்தி

துளசி பூஜை எப்படிச் செய்வது?

வீட்டில் துளசி மாடம் வைத்துள்ளவர்கள் துளசி பூஜையை தின மும் அல்லது செவ்வாய், வெள்ளிக ளில் செய்வதுண்டு. ஆனாலும், கார்த் திகை மாதம் சுக்லபக்ஷ துவாதசியில் விசேஷ பூஜையாக துளசி பூஜையைச் செய்வார்கள். துளசிக்கு அன்று விவா ஹம் நடந்த நாளாகவும் கூறுவார்கள். துளசியின் விசேஷ பூஜை ஐப்பசி அல் லது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ துவாதசியன்று ப்ருந்தாவன பூஜையா க  விமரிசையாக செய்யப்படுகிறது. 

துளசி மாடத்தில் நெல்லிமரக் குச்சி யை நட்டு, மஹாவிஷ்ணுவை ஆவா ஹம் செய்து ஷோடசோபசாரங்கள் செய்யவேண்டும். வீட்டில் பூஜி க்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக் கலாம். இந்த பூஜையின்போது பால் பாயச நைவேத்தியம் செய்வது விசே ஷமானது.

இந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி திங்கட் கிழமை, (ஐப்பசி மாதம் 21-ம் தேதி) ப்ருந் தாவன துளசி பூஜை செய்வது விசேஷம்.

வரம் தரும் சனீஸ்வர பகவான்!

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி போகும் வழியில் உள்ள திருக் கொள்ளி க்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மற்ற கோயில்களில் உள்ள சனீ ஸ்வர பகவானோ தோஷத்தை நிவர்த்தி செய்வார். இங்கோ, ‘என்னை நாடி வரும் பக்தருக்கு கேட்கும் வரத்தை நான் அருள வேண்டும்!’ என சனீஸ்வர பகவான் ஈஸ் வரனை வேண்டிக்கொண்டதால் அவருக்கு அந்த வரத்தினை ஈஸ் வரன் அளித்தார். அதனால் இங்குள்ள சனீஸ்வரன் ‘பொங்கு சனீஸ் வர’ பகவானாக காட்சியளிக்கிறார். இத்திருத்தலத்தில் ‘சனிப் பிர தோஷம்’ மிகவும் விசேஷம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: