கன்னியை நினைத்து
கதிரொளியில்
குளிர்காயும்
குருட்டுக் காதல்
நிலவொளியில்
நீந்தியே
கரை காணா
கற்பனை காதல் – தன்
பணி செய்யாமல்
பனியில் நனைந்து
பிணியில் வீழ்ந்த
பிணங்கள் எத்தனை எத்தனை!!
பெற்றவரையும்
மற்றவரையும்
உற்றவரையும் விட்டு- அந்த
ஒற்றை பெண்ணுக்காக
உயிரையே
கயிறாக கட்டி
தொங்கவிடும் இந்த
மங்குனி காதல் தேவையா?
இளைஞனே! சிந்தித்துப்பார்
இந்த ஒரு தலைக்காதல் உனக்கு தேவையா???
எழுதியது – விதை2விருட்சம், ராசகவி, ரா. சத்தியமூர்த்தி