Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

மழைக்காலம் தொடங்கிவிட்ட‍து எந்நேரமும் மழை பெய்து கொண் டே இருக்கிறது. இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவ திப்படுவர். சாலைகளில் தேங்கியி ருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களு க்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

மழை பெய்யும் காலங்களில் இரண் டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித் தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங் காய் எண்ணையை தடவிக் கொ ள்ளவும். அதேபோல் முழங் காலில் இருந்து கணு க்கால் வரை தேவையற்ற முடிக ளை அகற்றும் பசை தடவி மசாஜ் செய்து கொண்டால் மழை நாட்களில் இந்த இட ங்களில் (பங்கஸ்) பூஞ்சை தாக்குதல் இருக்காது.
தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு, ஒரு சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கை விரல்களால் மசாஜ் செய்யுங்கள்.
இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வீட் டுக்கு வரும்போது சுத்தமான தண்­ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணி யால் ஈரத்தை துடையுங்கள்.
குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த் துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள் சரு மத்தைப் பாதுகாக்கும்.
ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத் துணியைக் கழற்றி யவுடன் அந்த இடத்தில் தே ங்காய் எண்ணை தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.
மழைக்காலத்தில் மருதாணி போட்டுக் கொள் வதை தவிர்ப்பது நல்லது. மருதாணி குளிர்ச்சி என்பதால் சளி பிடி த்துவிட வாய்ப்புண்டு.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: