Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சன்டிவியை பின்னுக்குத் தள்ளிய புதிய தலைமுறை

சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவன த்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புது மையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோ பித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வரு கிறது.

தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்த னையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை யாக கருதப்படுகிறது. நிகழ்ச்சிகளை வழங் கும் விதம், துல்லியம், மக்கள் மனதைப் படித்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங் குவது, அனைவரிடமிருந்தும் தனித்துவத்து டன் தனித்து நிற்பது என பல பிளஸ் பாயி ண்டுகள் இதற்குக் காரணம்.

ஆனால் முதல் முறையாக சன் நியூஸ் சானல் 2வது இடத்திற்குப் போயுள்ளது. அதுவும் நேற்று புதிதாக பிறந்த புதிய தலைமுறை சானல், சன் நியூஸ் சானலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து புதிய தலைமுறை தரப்பில் கூறுகையில், தொலைக் காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் ஏசி நீல்சன் நிறுவ னத்தின் TAM கணக்கீட்டின்படி, தமிழகத்தில் கடந்த 8 வாரங்க ளாக முன் னேறி, சென்ற வாரம் ஜிஆர்பி எனப்படும் மொத்த மதி ப்பீட்டுப் புள்ளி களில் 35.94 என்ற அளவை புதிய தலைமு றை எட்டி, முதலிடத்தைப் பிடி த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.

சன் நியூஸ் சானலுக்கு 31.24 புள்ளிகள் கிடைத்துள்ளனவாம். ஜெயா பிளஸ் 3வது இடத்திலும், கலைஞர் செய்திகள் 4வது இடத் திலும், ராஜ் நியூஸ் 5வது இடத்திலும், என்டிடிவி ஹி்ண்டு 6வது இடத்திலும் உள்ளன.

புதிய தலைமுறை செய்தி சானல் சமீபத்தில் தான் தொடங்கப் பட்டது. சன் நியூஸுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும வகை யில் உருவெடுத்துள்ள இந்த சானல் காரணமாக சன் நியூஸிலும் கூட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. முன்னிலும் விறுவிறுப் பான முறையில் செய்திகளை கொடுக்க ஆரம்பித்தது சன் நியூஸ். இருப்பினும் தற்போது முதலிடத்தை அது தவற விட்டு ள்ளது.

பழைய தலைமுறை, ‘புதிய தலைமுறை’க்கு வழி விடுகிறதா…?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

6 Comments

 • kuttalam pillai

  please don’t hurt the personal matters of any individual such as political VIPs, Cine actors and Actress and business men. personal life of any person cannot be demoralized through the channel, now a days channels and magazines black mail the individuals for money. you please make a difference

  B.K.Pillai.

 • karthikeyan.s

  இலங்கைத் தமிழருக்காக நீங்கள் சேனல் 4 வெளியிட்ட காட்சிகளை உரிமம் பெற்று ஒளிபரப்பியதற்கு மிக்க நன்றி

 • Thirumalai

  Veery good I love this Channelஇலங்கைத் தமிழருக்காக நீங்கள் சேனல் 4 வெளியிட்ட காட்சிகளை உரிமம் பெற்று ஒளிபரப்பியதற்கு மிக்க நன்றி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: