Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிக அழகான பகுதி கைகள் என் றே கூறலாம். ஆனால் கைகளைப் பரா மரிப்பதற்கு அவ்வளவாக யாரும் முக் கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்தி ரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட் பட பல வேலைகளுக்கு நாம் கை களையே பயன்படுத்துகிறோம். இந்தச் செயல்களுக்கு இரசாயனம் கலந்த பொ ருட்களைப் பயன்படுத்திய பிறகு ‘சன் ஸ்கிரீன்’ போன்றவற்றை உபயோகிக் கத் தவறிவிடுகிறோம். இதன் விளை வாக கைகளில் வறட்சி, அரிப்பு, வெடி ப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனி னும் கைகளைப் பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால் இவ ற்றைத் தவிர்க்க முடியும். அதற்கான சில டிப்ஸ்கள் இதோ:

கைகள் பராமரிப்பு : முகத்தில் காணப் படும் தோலைப் போலவே கைகளின் பின்புறம் காணப்ப டும் தோலும் மிகவும் மென் மையானது. எனவே முகத் தைப் போலவே கைகளுக்கு ம் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப் பாக, கைகளில் ஏற்படும் ஈரப் பதம் இழப்பை ஈடு செய்ய மா ய்ச்சரைசர் கிரீம் போன்றவ ற்றை பயன்படுத்துவதோடு,  ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வே ண்டும்.

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெதுவெ துப்பான நீரில் சிறிதள வு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு 15 நிமிடங்கள் வைத்திருக் க வேண்டும். அதன் பின்  கைகளை நன்றாக து டைத்துவிட்டு, கைகளு க்கு கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்ட மளிக்கும். கிரீம்கள் தடவியபின் அவற்றின் மேல் கையுறை கள் அணிந்து கொள்வது நல்லது.

கைகளில் இறந்த செல்களை நீக்க கரக ரப்பான கிரீம்கள் (எக்ஸ் போலியண்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வே ண்டும். பின் சிறிது நேரம் கழித்து அவ ற்றைக் கழுவியபின் மிதமான ஹேண் ட் வாஷ் (HANDWASH) தடவ வேண் டும். அவற்றை மிதமான தண்ணீ ரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் இரத்த ஓட்டம் சீராகும். கைகளை சிற ந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறை யாவது இவ்வாறு செய் தால் நல்ல பலன் கிடைக்கும். மிகவும் குளி ர்ந்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் கைளுக்கு கம்பளி உறை கள் அணிந்து கைகளை பாதுகாக்க வேண்டும்.

சன்ஸ்கிரீன்: வயதானால் தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன் றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியா க தோலில் படுவதால் விரைவிலே யே வயதான தோற்றம் ஏற்படுகிற து. இவற்றில் இருந்து சன் ஸ்கி ரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே தினமும் சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்துவதால் இவை தடுக்க ப்படும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: