Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை

தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம்.

பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் முழு உடலையும் தாயின் கை தாங்குவது போல் வைக்க ப்படவேண்டும்.
தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கும்போ து தாய் குழந்தையின்  உதடுகளால் மார் பக காம்பைத் தொடவைக்க வேண்டும். குழந்தை வாய் திறக்கும் வரை காத்தி ருந்து கீழ் உதடு மார்பக காம்பின் அடி ப்பகுதியை நன்கு பிடித்துக்கொள்ளுமா று செய்யவேண்டும்.
குழந்தை மார்பகத்தைநன்கு கவ்வியி ருக்கிறதா சரியாக சப்பிக் குடிக்கிறதா என்பதை தாய் கவனிக்க வேண்டும். குழந்தையின் முக வாய்க்கட்டை மார் பகத்தை தொடவேண்டும்.வாய் நன் றாக திறந் திருக்க வேண்டும்.கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும். மார்பக காம்பின் கீழ்பகுதி முழுவதும் குழந்தையின் வாயினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு வேறு எந்த திரவமும் தேவைப்படாது.கிரைப் வாட்டர், தண்ணீர் எல்லாம் அவசியமே யில்லை.தேவையான் தண்ணீர் தாய்ப் பாலில் இருக்கி றது. ஒரு நாளில் எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வே ண்டும்.குழந்தை ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டாலும் தாய் ப்பால் கொ டுக்க வேண்டும்.
குழந்தைக்கு மாட்டுப்பாலை கொடுப்பதும்,சில நேரங்களில் தாய் ப்பால் கொடுப்பதும் பலர் செய்யும் தவறு.இது குழந்தையின் ஜீரண மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்றைய மு றை யற்ற வணிகர்களால் சுத்த மான பால் கிடைப்பது எளிதல் ல! அதிக பாலுக்காக ஹார்மோ ன் ஊசி போடுவதாலும் நிறைய பிரச்சினை கள்.
தாய்ப்பாலை விட பாதுகாப்பான து வேறெதுவும் இல்லை. மருத் துவர் அறிவுரையின் பேரில் மாட்டுப்பால் கொடுத்தாலும் நிறைய தண்ணீர் கலக்க வேண்டும். அதுவும் சுத்தமான நீராக இருக்க வேண் டும். கடையில் பவுடர் வாங்கினாலும் காலாவதி தேதியை கவனி க்க வேண்டும்.பாலாடை அல்லது தேக்கரண்டி பயன்படுத்துவதே சிறந்த்து. புட்டி பயன்படு த்தும்போது அழுக்கு சேர்ந்து நோய்த் தொற்றை உருவாக்கலாம். ஆறு மாதம் கழித்து பிறகு இணை உணவுகள் தர ஆரம்பிக்க லாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply