Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை

1954 ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழ ந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்ப டியாவது அக்குழந்தை யை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந் தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார்.

ஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவி ல்லை. இத்தனைக்கும் சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். லீ & லீ, வீட்டு வேலைகளை செய்பவர். 
போதிய வருமானம் ஒருபோதும் வந்ததில்லை. ஆனாலும் தங்கள் குழந்தையை தாங்களே வளர்க்க விரும்பினார்கள். சான் காங் & காங் என நாமகரணமும் சூட் டினார்கள். ஹாங்காங்கில் பிறந்தவன்’ என்பதுதான் அப் பெயரின் அர்த்தம்.
சான் காங் & காங், பள்ளியில் சேர்ந்தான். ஆனால் படிப்பு ஏறவில்லை. இந்த நேரத்தில் சார்லஸ் கானுக்கும், லீ & லீக் கும் ஆஸ்திரேலியாவில் வே லை கிடைத்தது. அதே சமை யல்  வீட்டு வேலைதான். என வே தங்கள் மகனை சைனா டிராமா ஸ்கூல்’ என்ற போர் டிங் பள்ளியில் சேர்த்து விட் டு ஆஸ்திரேலியா புறப்பட் டார்கள். அப்போது சான் காங் & காங்குக்கு வயது 7. இந்தப் பள்ளியில்தான் சான் காங் & காங், கராத்தே, குங்ஃபூவில் ஆரம்பித்து சகல மார்ஷியல் கலைகளையும் பயின்றான். ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிற்சிகளை மேற் கொண்டான்.
சீனாவில் ஓபரா எனப்படும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகள் மாறுபட் டவை. நடிப்பு, பாடல்களுடன் ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிற்சிகளும் ஒன்று கலந்த ஒரு காக் டெயில் வடிவம். பீகிங் ஓபரா இதில் தலை சிற ந்து விளங்கியது. இக்குழு வுக்கு தேவையான நபர் களை பயிற்று வித்து தருவதுதான் சைனா டிரா மா ஸ்கூலின் பணி. கடு மைக்கும், கட்டுப்பாட்டுக் கும் பெயர் போன இப்ப ள்ளியில் சான் காங்& காங் ஒரு நாளைக்கு 18 மணி நேரங்கள் வரை பயி ற்சி எடுத்தான்.
அவனது ஆர்வத்தை பார் த்த பள்ளி 8 வயதில் பிக் அண்ட் லிட்டில் வாங் டின்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. அப்படத்தில் சான் காங் & காங் தன் திறமையை வெளிப்படுத்தினான்.தொடர்ந்து நடிக்க சா ன்ஸ் கிடைத்தது. பள்ளியில் பயிற்சி பெற்ற படியே நடித்தான். கூட வே ஸ்டண்ட் மாஸ்டராக, ஸ்டண்ட் மேன் ஆக வித்தை காட்டி னான். 
19 வயதில் ப்ரூஸ் லீ நடித்த ‘என்டர் தி டிராகன்’ படத்தில் சிறு வேட ம் கிடைத்தது. அதில் முத்திரை பதித்தான். ஆனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அவனை ஆஸ்திரேலியா வுக்கு வரும்படி அவனது பெற்றோர் அழைத்தார்கள்.
அங்கு சென்ற சான் காங் & காங், கட்டிட வேலையில் நாள் கூலி அடிப்படையில் பணிபுரிந்தான். அவனது உருவத்தையும்  துள்ள லையும் பார்த்த சக தொழிலாளர் அவனை ‘லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். அதுவே ஜாக்கி என சுருங்கியது.
ஒருநாள்  வில்லி சான் என்ற தயாரிப்பு நிர்வாகியிடமிருந்து உடன டியாக ஹாங்காங் புறப்பட்டு வரும்படி தந்தி வந்தது.
ஜாக்கிசான் ஆக பெயர் மாறிய சான் காங் & காங்  நம்பிக்கையுடன் சென்றான். ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத் தது. அப்போது சான் காங் & காங் என்கிற ஜாக்கி சானுக்கு வயது 21.
அதன்பிறகு நடந்தது அனைத்தும் சரித்திரம். ஸ்டண்ட் மேன், ஸ்ட ண்ட் மாஸ்டர், கதாசிரியர், திரைக்கதையாளர், இயக்குநர், தயாரிப் பாளர் என இடைப்பட்ட காலத்தில் பல முகங்களில் தன் திறமை யை வெளிப்படுத்தியிருக்கும் ஜாக்கி சானுக்கு வெளிவர இருக்கும் ‘1911’ படம்  நூறாவது படம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply