Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர் மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர் மன் நாட்டின் தெருக்கள் பல வற்றிற்கு இவ ர் ஞாபகார் த்தமாக பெய ரிடப்பட்டு ள்ள து. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய் ய எத்தனித்தது. 1939ம்ஆண்டு. இரண்டா வது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம் பமாகி யிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்க மாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன் று வருகை தந்திருந் தார். NSDAP கட்சியின் முக்கி ய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரை யாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, பிற்பகல் 9 .20க் கு ஒரு குண்டு வெடிக்கின்றது. அந்த மண்டபத்தில் அரைவாசி சேத மாகியது. எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். ஹிட்லர் எங்கே? குண்டு வெடி ப்பதற்கு பத்து நிமிடம் முன்பு, புறப்பட்டு சென் றுவிட்டான். திட்டமிட்டபடி, அன்று ஹிட்லர் மட்டுமல்ல, கோயபல்ஸ் கூ ட கொல்லப்பட்டிருந்தால், ஒரு உலக ப்போர் தடுக்கப் பட்டிருக்கும். 

மிகவும் துணிச்சலாக நாட்டு வெடி குண்டை தயாரித்து, நேரம் கணித்து பொருத்திய மாவீரனின் பெயர் யொ ஹன் கெயோர்க். 4 -1 -1903 அன்று, ஒரு ஏழை உழைக்கும் வர்க்க குடும்ப த்தில் பிறந்த தச்சுத் தொழிலாளி. ஒரு கம்யூனிஸ்ட். கடிகாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த யொஹான், அங்கே தான் நேரக் கணிப்பு வெடிகுண்டு செய்யும் கலையை கற்றுக் கொண் டான். மியூனிச் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தி விட்டு தப்பி ஓடும் பொ ழுது, சுவிட்சர்லாந்து எல்லையில் வைத் து பிடிபட்டான். கெஸ்டபோ இரகசியப் பொலிசாரின் சித்திரவதை காரணமாக, குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டான். அதன்பிறகு, டாஷவ் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்க ப்பட்டான். நேச நாடுகளின் படையணி கள் ஜெர்மனியை கைப்பற்றிய நேரம், ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர், யொஹான் சுட் டுக் கொல்லப் பட்டான்.

யொஹான், தலைமறைவாக இயங்கிய சிவப்பு முன்னணி போராளி களின் அமைப்பு (Rotfrontkämpferbund) என்ற ஆயுதபாணி இயக்கத்தின் உறுப்பினர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவு அது. நாஜிக் கட்சிக் குண்டர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். “நாஜிக் கட்சிக் கூட்டத்தில் ரகளை செய்த, தெருச் சண்டையில் ஈடுபட்ட மார்க் சிஸ்டுகள்” பற்றி, ஹிட்லரும் தனது “மைன் கம்ப்” நூலில் எழு தியுள் ளான். ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றதும் செய்த முதல் வேலை, நாட் டில் உள்ள கம்யூனிஸ்டுகளை பிடித்து சிறை யில் அடைத்தது தான். ஜெர்மன் நாடாளுமன் றம், இனந் தெரியாதவர் களால் எரிக்கப் பட்ட சம்பவத்தை அதற்கு சாட்டாக பயன்படுத்தி னான். பெர்லினில் தங்கியிருந்த வெளிநாட்டு கம்யூனிஸ்டுகளும் கைது செய் யப்பட்டனர். பிற்காலத்தில் பல்கேரியாவின் ஜனாதிபதியா ன, டிமித்ரோ வும் அவர்களில் ஒருவர்.

ஹிட்லரை கொலை செய்யும் நோக்குடன் பல தாக்குதல்கள் நடந்து ள்ளன. பிற்காலத்தில், இராணுவத்திற்குள் நடந்த சதியை மையமாக வைத்து, Valkyrie என்ற ஹாலிவூட் திரைப்படம் வெளியானது. உலகப்போர் முடியும் தறுவாயில், 1944 ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு பற்றி உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளது. ஆனா ல், 1939 ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி எந்தவொரு சரித்திர நூலிலும் நீங்கள் வாசித்திருக்க சந்த ர்ப்பமில்லை. ஹிட்லரின் காலத்தில் நடந்த சம்பவங்களை இன்றைக்கும் அசைபோடும் ஊடகங்களும் அது பற் றிப் பேசுவதில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், (முத லாளித்துவ) மேற்கு ஜெர்ம னியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால், கம்யூனி ஸ்டுகளின் ஹிட்லர் மீதான தாக்குதல் பற்றிய தகவல்களும் இருட்ட டிப்பு செய்யப்பட்டன. 

சரித்திர ஆசிரியர்களினதும், ஊடகங்களினதும் ஒட்டுமொத்த புறக்கணி ப்புக்கு காரணம் என்ன? தாக்குதல் நடத்திய யொஹான் எல்சர் ஒரு கம் யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதா லா? நாசிஸ கொடுங் கோன்மை க்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் நடத்திய ஆயுதப் போராட்டம் குறித்து, உலகம் அறிந்து விடக் கூடாது என்ற எச்சரி க்கை உணர்வா? எது எப்படி இருந்த போதிலும், சமூகப் பொறுப்புணர்வு இதனால் மறைக்கப்படுகின்றது. யொ ஹான் எல்செர் எதற்காக ஹிட் லரை கொலை செய்யத் திட்டமிட்டா ன்? “எனது செயல் மூலம், மேலதிக இரத்தக் களரியை, மனிதப் பேரழிவை தடுத்து நிறுத்த விரும்பினேன்.” இது யொஹான் எல்சரின் வாக்குமூலம். அந்த தீர்க்கதரிசனம் வெகு விரைவில் சரியென மெய்ப்பிக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் இருந்து

Hitler Dead

மயிரிழையில் தப்பிய ஹிட்லரினால், இரண்டாம் உலகப்போர் வெடி த்தது. அதுவரை உலகம் காணாத மனிதப் பேர ழிவு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவான சோஷலிச நாடுகளில், எதிர் கால உலகில் போர்களை இல்லாது ஒழி ப்பதற்காக, நாம் இன்று போராடுகின் றோம்” என்று பாடசாலை மாணவர்க ளுக்கு கற்பிக்கப்பட்டது.  “Ich  habe den krieg verhindren wollen” (நான் யுத்தம் வருவதை தடுக்க விரும்புகிறேன்.)- Johann Georg Elser

யொஹான் எல்சர் பற்றிய விபரங்கள் ஜெர்மன் மொழியில் மட்டுமே காணப் படுகின்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: