Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தைகள் தினம்

உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். 

எதிர்கால உலகை ஆளப்போ கிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்க ளால் சுட்டப்படும் குழந்தைகளை

மகிழ்விப்பதற்காக கொண்டா டப்படும் தினம் குழந்தைகள் தினம். இந்தியாவில் முன்னா ள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம்

 தேதியும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டா டப்பட்டு வருகிறது. அதேசமயம், சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி அனுசரிக்க ப்படுகிறது.

கடந்த 1954ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்க த்தை ஏற்றுக் கொண்டது. கடந்த 1925ம் ஆண்டே, ஜெனீவாவில், குழ ந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது.

இந்தியாவின் முதல் பிரதம ராகவும், சக்திவாய்ந்த அரசியல் தலைவ ராகவும் இருந்த நேரு, குழந்தைகளிடம் அளப்பரிய அன்பும், பிரியமும் கொண்டவர். அவரது சிறந்த புகைப்படங்களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.

உலகிலேயே, அதிகளவிலான குழந்தை மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தி யா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை பரி தாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்காக குழந்தைகள் சத்துக் குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சக விகித குழந்தை கள் “குழந் தை தொழிலா ளர்களாக” உள்ளனர்.

அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்த ல்கள் மற்றும் பல வித மான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப் படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காம லும், முறையா ன தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிரு க்கின்றனர்.

இவர்களின் துன்பங்களுக்கு சரியான பதில் சொல்வதாக அமை யுமா, வருடா வருடம் நடக்கும் குழந்தைகள் தின கொண்டாட்ட ங் கள்? ஆள்வோர்களும், அதிகாரிகளும் குழந்தைகளின் நல்வாழ்வு தொடர்பாக விடை காண வேண்டிய கேள்விகள் எவ்வளவோ உள்ளன! உலகளாவிய அமைப்பான ஐ.நா. சபை, குழந்தைகள் உரிமை மற்றும் நல் வாழ்வு தொடர்பாக பல தீர்மான ங்களை நிறைவேற்றியிருக்கிறது. உலகின் ஏராளமான நாடுகள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் காகித அளவிலேயே, பேச்சள விலேயே உள்ளன. குழந்தைகளுக்கு எந்த நன்மையும் கிடை க்கவில்லை.

உலகிலேயே எந்தவிதமான வன்முறைக்கும் எளி தாக இலக்காகிற வர்கள் குழந்தைகள்தான். ஆப்ரி க்க நாடுகளின் குழந்தைகள் உட் பட, மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார்கள். அந்த நாடுகளில் வருங்கால தலை முறைகளே அழிந்து வரு கின்றன. குழந்தைகள் சமூகத்தின் மீது செலுத்தப்படும் எந்தவொரு அநீதியும், எதிர்கால உலகின் மீது செலுத்தப்படும் அநீதியே ஆகும். எதிர்கால உலகை அது நிச்சயம் சீரழிக்கும். குழந்தைகள் தின கொண் டாட்டங்களில், குழந்தைகளுக்கு விதவிதமாக வேஷமிடுவதும், பல்வேறுவிதமான போட் டிகளை நடத்துவது மட்டுமே நமக்கு திருப் தியை தந்துவிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மேம்படுத்துவதன் பொருட்டே, சிற ப்பு விழாக்களும், நிகழ்ச்சிகளும் அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், நமது சமூகத்தில் அவை சம்பி ரதாயங்களாக மாறிவிட்டன. அது போலத்தான் குழந்தைகள் தினமும் மாறி விட்டது. நமது நாட்டின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இந்த உலகின் குழந் தைகளுக்கே, என்று விமோச்சனமும், நல்வாழ்வும் கிடைக்கிற தோ, அன்றுதான் உலகெங்கிலும் உண்மையான குழந்தைகள் தினம் கொண்டா டப்படும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: