Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தைகள் வ‌ளர வளர‌, அப்பாவை பற்றி நினைப்பது என்ன‍? – வீடியோ

வரிகளை படித்துவிட்டு மறக்காமல் கீழேயுள்ள‍ வீடியோவை காணத் தவறாதீர்கள்

குழந்தைகள்  பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கை யை விட்டுவிட்டு குழந்தைக ளுக்கு என்று வாழ தொடங் கிறார்கள். அவர்களுக்கான  பிடித்தது  பிடிக்கா தது எல் லாம் மறைத்துகொண்டு  குழ ந்தைகளுக்கு பிடித்தது, பிடிக் காதது எல்லாம் அவர்களு க்கும் பிடித்தது, பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள்.

தந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள்.இளம் வயது பிள்ளைகளுக்கு அப்பாவின் இந்த கண்டிப்பு கசந்தாலும் நன்கு வள ர்ந்த பின்தான்  அப்பாவின் கண்டிப்பால் நல்ல நிலைக்கு உயர்ந்து ள்ளதை  உணர முடியும். இந்த குழந்தைகள் அப்பாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
நான்கு வயதில் குழந்தைகள் :  ஆ! என் அப்பாவை போல ஒருவர் உண்டோ இந் த உலகில் எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.
ஆறு வயதில் அதே குழந்தை : அடடா, என் அப்பாவிற்கு தெரியாத விஷயமே கிடையாது! என்று நினைக்கிறது.
பத்து   வயதில் : ‘ ஒ.. அப்பா நல்லவர் தா ன்! ஆனால் ரொம்ப முன் கோபகாரர். ஆனால் எனது நண்பணின் அப்பாவிற்கு தெரிந்தந்து கூட இவருக்கு தெரிய வில்லையே! ஹூம்.
பன்னிரெண்டு  வயதில் : நான் குழந்தையாக இருந்த போது என் அப் பா என்னிடம் நல்லபடியாக தானே நடந்து வந்தார்…. ஆ னால் இப் போது ஏன்…………….. இப்படி ?
பதினாறு  வயதில் : சே! அப் பா சுத்த கர்னாடகப் பேர்வழி. காலத் துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டா மா? அவருக்கு ஒன்றுமே தரிய வில்லை சொன்னாலும் புரியவில்லை. ச்சீசீ….
பதினெட்டு வயதில் : இதென்ன! வர வர இந்த அப்பா ஏன் கிறுக்குத் தனமாக நடந்து கொள்கிறார். ஒரு  விபரமே தெரியாதவர்.
இருபது  வயதில் : அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் தாங்க முடியவில்லை. அம்மா எப்படித் தான் இவருடன் இத்தனை காலம் வாழ் ந்து வருகிறாளோ?
இருபத்தைந்து  வயதில் : என்ன எதெற் கெடுத்தாலும் எதிர்ப்புதானா ? எப்போ துதான் இந்த அப்பா உலகத்தை புரிந்து கொள்ளப் போகிறாரோ? கடவுளே நீ தான் என்னை காப்பாற்றனும்.
முப்பது  வயதில்: (கல்யாணம் ஆன ஒரு வருடத்திற்கு அப்புறம்) : அப்பா எப்படித் தான் இந்த மாமியார் மருமகள்  பிரச்ச னைகளை சமாளித்தாரோ (ஆச்சிரியம்)
முப்பத்தியைந்து வயதில்:ஒ மைகாட்! வர வர இந்த சிறு பையனை சமாளிக்கவே முடியவில்லையே !நாங்களெல்லாம சிறு வயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்! இப் ப பாரு…வாலுங்க இது
நாற்பது வயதில் : ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களை அப்பா சொல்லி கொடுத் தார். இப்போது நினைத்து பார்த்தாலும் குழந்தைகளை அப்பா எப்படி கண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் என பது மிகவும் அதிசியமாகவே இருக்கின்  றது.
நாற்பதைந்து வயதில் : எங்கள் குடும்பத் தில் உள்ள ஆறு பேர்களையும் அப்பா எப்படித்தான் வளர்த்து ஆளாக்கி முன்னு க்கு கொண்டு வந்தாரோ என்பதை நினை த்தால் மிகவும் வியக்கதக்கதாகவே இருக்கின்றது.
ஐம்பது வயதில் : இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்க்கே மிக வும் போராட வேண்டியிருக்கிறது. அப்பா எங்களை வளர்க்க நிச்ச யமாக படாதபாடு பட்டிருப்பார்.
ஐம்பதைந்து வயதில் : அப்பாவி ற்குதான் எவ்வளவு முன்யோச னை  எங்கள் முன்னேற்றத்திற்கா க எவ்வளவு முயற்சியுடன் தகுந் த ஏற்பாடுகளை செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு கட் டுப்பாட்டுடன் தன் காரியங்களை செய்து வருகிறார். அவரல்லவா மனிதன்.
அறுபது வயதில் : ( கண்ணீருடன்) உண்மையில் என் அப்பாவை போல இந்த உலகத்தில் தலைசிறந்த   மனிதர் யாரும் இருக்கவே மு டியாது.
இளைஞர்களே… இளை ஞிகளே நாமும் வருங்கால த்தில் தந்தை யோ தாயோ ஆவோம் என்பதை மனதில் வைத்து , குழந்தைகளு க்கு எந்த தாய் தந்தையும் கெ டுதல் செய்யமாட்டார்கள் என்பதையும் மனதில் வை த்து நம்மை இந்த உலகில் உலவவிட்ட நம் தாய் தந் தையிடம் பண்புடனும் பணிவன்புடனும் நடந்து கொள்வோம்.
நேரம் கிடைத்தால் கிழேயுள்ள வீடியோ க்ளீப்பை பாருங்கள்: ஆனா ல் பார்க்க தவறாதிர்கள். மனதை தொட்டு செல்லும் ,கண்ணிரை வரவழைக்கும்..பார்த்த பின்பு ஏதோ ஒன்றை இழந்த ஒரு உணர்வு தோன்றும். வார்த்தைகளால் அல்ல தன் செயல்களால் பாசம் காட் டும் தந்தைகள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: