Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தபால் நிலையங்களில் சோலார் மின் விளக்கு விற்பனை

தமிழகத்தில், முதன் முறையாக, செங்கல்பட்டு தபால் நிலைய கோட்டத்தில் உள்ள, ஐந்து தபால் நிலையங்களில், சோலார் மின் விளக்குகள் விற்பனை, வரும் 14ம் தேதி துவக்கப்படுகிறது. அமெரிக்காவில் தயாரிக்க ப்பட்ட சோலார் மின் விள க்குகளை, உத்தர ப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த, நிறு வனத்துடன் இணைந்து, தபால் நிலையம் விற்பனை செய்ய உள்ளது.ஒரு மின் விளக்கு, 549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்விளக்கு, தானே, சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை கிரகித்து கொள்ளும். அறை யில் ஜன்னலோரம் தொங்க விட்டால் போதும். சூரிய ஒளியிலிரு ந்து கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, இவ்விளக்கு 5 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் வரை எரியும்.

இது குறித்து, செங்கல்பட்டு கோட்ட தபால் நிலைய கண்காணிப் பாளர் தங்கவேல் கூறியதாவது:மொபைல் போன்களை சார்ஜ் செய் வதுபோல், சோலார் விளக்குகளை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்விளக்குகளுக் கு, ஒரு வருடம் உத் தரவாதம் வழங்க ப்படுகிறது. விளக்கி ல் வெளிச்சம் குறைவாகவும், வெளிச்சம் அதிகமாகவும் தெரியும் வகையில், எரிய வைக்கும் வசதி உள்ளது. அதிக வெளிச்சம் வரும் வகையில், விளக்கை எரிய வைத் தால், 5 மணி நேரமும், குறைந்த வெளிச்சம் என்றால் 8 மணி நேர மும், விளக்கு எரியும். விற்பனை யைப் பொறுத்து, மற்ற தபால் நிலை யங்களிலும், சோலார் விள க்கு விற்பனை விரிவுப்படுத்தப் படும். இவ்வாறு தங்கவேல் தெரி வித்தார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply